உலண்டு
உலண்டு என்பது நூல் போன்றவற்றை அங்குமிங்குமாக உருட்டிச் சுற்றும் முறை. சுற்றானது பிரியாமல் இருக்க இவ்வாறு சுற்றப்படும்.
தமிழ் இலக்கியங்களில் இச்சொல் சில இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஏறு தழுவிய ஆயனை ஏறு தன் கொம்பில் குத்தித் தூக்கிச் சுற்றுவது உலண்டு போல் இருந்ததாம் என கலித்தொகை கூறுகிறது.[1]
சிலந்திக்கூடு (சிலந்திவலை) அதன் பின்னல் கருதி உலண்டு என வழங்கப்படுகிறது என சிறுபஞ்சமூலம் கூறுகிறது.[2]