உலோக எக்சு கதிர் குழாய்
பொதுவாக எக்சு-கதிர்க் குழாய்கள் சிறப்பு கண்ணாடியால் உருவாக்கப்படுகின்றன. அதிக வெப்பத்தினைத் தாங்கும் கண்ணாடிக் குழாய் அல்லாமல், உலோகத்தாலான குழாயின் இருபக்கத்திலும் உறுதியான கண்ணாடி பாகங்களைக் கொண்ட உலோக எக்சு-கதிர்க் குழாய்கள் (Metal X Ray tubes) வடிவமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் எலக்ட்ரான் துப்பாக்கி மற்றும் நேர்முனைத் தட்டு உள்ள இடத்தினைச் சூழ்ந்து இருக்கிறது உலோக உருளை. மற்ற பகுதிகள் கண்ணாடியால் ஆனது.
எக்சு-கதிர்கள் பெரிலியம் சாளரம் வழியாக வெளிப்படுகிறது. அலுமினிய வடிகட்டியும் உள்ளது. இது உள்ளார்ந்த வடிகட்டிப் பண்பினை அதிகரிக்க உதவுகிறது. கண்ணாடிக் குழாயுடன் ஒப்பிடும் போது உலோகக் குழாய் அதிக இழை உமிழ்ச்சியினைக் கொடுக்கிறது. அதாவது அதிக குழாய் மின்னோட்டம் பெறமுடிகிறது.
இப்படிப்பட்ட குழாய்கள் குறைந்த கே.வி ல் அதிக குழாய் மின்னோட்டத்தினைப் பெற உதவும். குறைந்த கதிர்வீச்சுக்கால அளவினையும் பயன்படுத்த முடியும்.
மேற்கோள்
தொகுx rayequipment for student radiographers-D.N &M.O Chesney
வெளி இணைப்புகள்
தொகு- [1] பரணிடப்பட்டது 2012-10-04 at the வந்தவழி இயந்திரம்