உழவுக் கருவிகள்

உழவுக் கருவிகள்தொகு

உழவுக் கருவிகள், அவற்றின் பயன்பாட்டினை பொருத்து பல வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

முதன்மை நிலை உழவுக் கருவிகள்தொகு

மேல்மட்ட மண்ணைத் திறந்து இளகுவாக செய்வதற்கு பயன்படும் கருவி கலப்பை ஆகும். கலப்பைகள் பொதுவாக முதன்மை உழவிற்கு பயன்படுகின்றன. கலப்பைகள் மூன்று வகைப்படும் அவை :

 1. மரத்தினால் ஆகிய கலப்பை,
 2. இரும்பு அல்லது மண் புரட்டும் கலப்பை
 3. சிறப்பு கலப்பைகள்.

மரத்தாலாகிய கலப்பை அல்லது கலப்பை / நாட்டுக் கலப்பைதொகு

நாட்டுக் கலப்பை என்பது இரும்புக் கொழு முனை உடன் மரத்தினால் செய்யப்பட்ட ஒரு கருவி ஆகும். இது உடற்பகுதி தண்டுப்பகுதி மற்றும் கைப்பிடி என மூன்று பகுதிகளை உள்ளடக்கியுள்ளது. இது எருதுகளைக் கொண்டு உழுவதற்கு பயன்படுகிறது. இது மண்ணில் வடிவிலான சால் அமைக்கிறது. மேலும் இது மண்ணை புரட்டாமல் உழுகிறது. உழுதல் முழுமையாக இருக்காது ஏனென்றால் சில சமயம் இரண்டு சால்களுக்கு இடைப்பட்ட பகுதியில் இருக்கும் வரிசையில் விட்டுப் போக வாய்ப்பு உள்ளது. குறுக்கு உழவினால் இது போன்று ஏற்படாமல் தடுக்கலாம். இருந்த போதும் சிறிய சதுரப்பரப்புகள் விட்டுப் போவதற்கு வாய்ப்பு உள்ளது.

=மண் புரட்டும் கலப்பைதொகு

மண் புரட்டும் கலப்பை இரும்பால் ஆனது ஒரு ஜோடி அல்லது இரண்டு ஜோடி மாடுகளைக் கொண்டு உழுவதற்கு பயன்படுகிறது. மாடுகளின் எண்ணிக்கை மண்ணின் தன்மையைப் பொருத்து இக்கலப்பை டிராக்டர் கொண்டு உழுவதற்கு ஏற்றது.

வளைப்பலகைக் கலப்பைதொகு

வளைப்பலகை, கொழுமுனை, சால் சுவறின் மீது செல்லும் பாகம் (நிலப்பக்கப்பகுதி) இணைக்கும் தண்டு / இணைப்புச் சட்டம், பிராக்கட் (Bracket) மற்றும் கைப்பிடி போன்ற பாகங்களை வளைப்பலகைக் கலப்பை கொண்டுள்ளது. இவ்வகைக் கலப்பையில் சால்கள் நேர்த்தியாக அமைவதோடு நன்றாக மண் புரட்டப்படுகிறது. அனைத்துப் பகுதியும் உழவு செய்யப்படுகிறது. மாடுகளினால் உழுவதற்கு பயன்படுத்தப்படும் வளைப்பலகை கலப்பை சிறியதாக 15 செ.மீ ஆழம் வரை உழக்கூடியதாக இருக்கும். டிராக்டரில் இணைக்கப்படும் வளைப்பலகை கலப்பை 2 கலப்பைகளை கொண்டது மற்றும் இது 25 முதல் 30 செ.மீ ஆழம் வரை உழுவக்கூடியது வளைக்கலப்பை மண்ணை புரட்டி உழுவதுற்கு அவசியமாக உள்ளப் பகுதியில் பயன்படுகிறது. வெற்றிக் கலப்பை என்பது எருதுகளைக் கொண்டு உழுவதற்குப் பயன்படும் சிறிய சட்டத்தைக் கொண்ட வளைப் பலகைக் கலப்பை ஆகும்.

சட்டிக் கலப்பைதொகு

சட்டிக்கலப்பை, பொதுவாக பயன்படுத்தப்படும் வளைப்பலகைக் கலப்பையை சிறிது ஒத்துள்ளது. உருளக்கூடிய பெரிய குழிவான சட்டிக் கலப்பை வளைப்பலகைக் கலப்பையில் உள்ள கொழுமுனை மற்றும் வளைப்பலகைக்கு பதிலாக பொறுத்தப்பட்டுள்ளது.

சட்டிக்கலப்பை சால் மண்ணை நன்றாக அள்ளி ஒரு பக்கமாக புரட்டுகிறது. பொதுவாக சட்டிக்கலப்பை 60 செ.மீ விட்டம் கொண்டது இது சுமார் 30-35 செ.மீ அளவான சால் மண்ணை திருப்பக்கூடியது சட்டிக்கலப்பை பொதுவாக அதிக் களை கொண்ட வயலில் பயன்படுகிறது. ஏனென்றால் சட்டிக்கலப்பை களைகளை நன்றாக வெட்டி மண்ணுடன் கலக்கச் செய்கிறது. சட்டிக் கலப்பை கற்கள் அற்ற நிலையில் நன்றாக உழும். வளைப்பலகை கலப்பையில் உள்ளது போன்று இதில் மண் கட்டிகளை தனியாக உடைக்கத் தேவையில்லை. திருப்பிப் போடும் கலப்பை அல்லது ஒரு வழிக் கலப்பை இவ்வகைக் கலப்பையில் அடிப்பகுதி ஒரு தூலத்துடன் வளைப் பலகைக் கலப்பையில் இருப்பது போல இணைக்கப்பட்டிருக்கும். கொழு முனையானது காலத்திற்கு வலது அல்லது இடது புறத்தில் திருப்பியவாறு இணைக்கப்பட்டிருக்கும். இவ்வகை அமைப்பு மேடான நிலத்தில் திருப்பி போட்டவாறு உழுவதற்கு உதவுகிறது. இருந்து போதும் இவ்வகை கலப்பையில் ஒரு பக்கமாகவே மண்ணைத் திருப்பி போட்டு உழுகிறது.

சிறப்புக் கலப்பைகள்தொகு

ஆழக்கலப்பைதொகு

கடின மண் தட்டுக்களை மண் மேற்பரப்பிற்குக் கொண்டு வராமல் உடைப்பதற்கு ஏற்றவாறு ஆழக்கலப்பை வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆழக்கலப்பையின் ஒருங்கிணைக்கும் பகுதி வி வடிவில் குறுகியும் கொழு முனை அகன்றும் காணப்படுவதால் ஆழப்பகுதியில் உள்ள கடின மண்ணை உடைக்கும் அதே சமயம் மண்ணில் குறைவான உழவே இருக்கும்.

உளிக்கலப்பைதொகு

உளிக்கலப்பை கடின அடி மண்ணை உடைக்கவும். ஆழமான உழவிற்கும் (60-70 செ.மீ) அதே சமயம் குறைவான மேற்பரப்பு மண் பாதிப்புடன் உழுவதற்கு பயன்படுகிறது. உளிக் கலப்பையின் இணைப்புப் பகுதி (உடற்பகுதி) மிகச் சிறியதாகவும், மாற்றி அமைக்கும் கொழுமுனைகளைக் கொண்டதாகவும், இருப்பதினால் மண் மேற்பரப்பில் மிகக் குறைவான பாதிப்பே ஏற்படுகிறது. இவ்வகைக் கலப்பையில் மாற்றி அமைக்கக்கூடிய கொழு முனை இருப்பதினால், மேற்பரப்பில் உழுவதற்கு ஏற்றவாறு அமைகிறது.

சால் கலப்பைதொகு

சால் கலப்பையில், இரண்டு வளைப் பலகைகள் காணப்படுகின்றது. அவற்றில் ஒன்று மண்ணை வலப்புறமாக தள்ளுகிறது. மற்றொரு பலகை, மண்ணை இடப்புறமாக புரட்டுகிறது. இரண்டு வளைப்பலகைக்கும் கொழு முனை பொதுவாக காணப்படுகிறது. எ.கா இரு முனைக் கொடு இவ்வளைப்பலகைகள் பொதுவான ஒருங்கிணைக்கும் பகுதியுடன் இணைக்கப்பட்டுள்ளன. சால் கலப்பை வயலில் சால் மற்றும் வரப்புகளை ஏற்படுத்துவதுடன் பயிர்களுக்கு மண் அணைக்கப் பயன்படுகிறது. இரண்டு சால் கலப்பைகள் 150 செ.மீ இடைவெளிக் கொண்டதாக இணைக்கப்படும் போது அகன்ற சால் மற்றும் வரப்புக்களை அமைக்க உதவுகிறது.

சுழல் கலப்பை / கட்டி உடைப்பான்தொகு

சுழல் கலப்பை, மண்ணைப் பிளந்து கட்டிகளை உடைக்கிறது. மண்ணைப் பிளப்பதற்கு கத்திப் போன்ற கொழு முனைகள் பயன்படுகின்றன. இவ்வகை கலப்பை 12 முதல் 15 செ.மீ ஆழம் வரை உழக்கூடியது இது இளகிய மண்ணிற்கு மிக பொருத்தமானது.

குழிப்படுக்கை அமைக்கும் கருவிதொகு

குழிப்படுக்கை அமைக்கும் கருவி ஒன்று அல்லது இரண்டு வளைப்பலகைகள் அல்லது கொழுக்களைக் கொண்ட ஒரு கனமான கருவி ஆகும். இவ்வகைக் கொழுக்கள் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட சட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. இக்கருவி ஒருமுகப்படுத்தப்பட்ட சால்கள் அமைக்க (சிறு நீர்த்தேக்கம் மற்றும் பாத்திகளைக் கொண்ட சால்) உதவுகிறது. இவ்வகைப் பாத்தி மழைக்காலங்களில் மழைநீர் வீணாவதையும் தடுக்கிறது மற்றும் குறைவான மழைக் கொண்ட பகுதிகளில் மழை நீரை பலன் கிரகிக்க உதவுகிறது.

இரண்டாம் உழவுக் கருவிகள்தொகு

 1. கொத்துக் கலப்பைகள்
 2. பலுகு கலப்பைகள்
 3. சாரப்பலகைகள்
 4. சுழல் கலப்பைகள்

கொத்துக் கலப்பைகள்தொகு

டிராக்டரால் இயங்கும் கொத்து கலப்பை=தொகு

சிறுக்கட்டிகளை உடைத்தல் மற்றும் விதைப்படுக்கை தயாரிக்க ஏற்றவாறு உழுதல் போன்றவற்றிற்கு கொத்துக் கலப்பை உதவுகிறது. கொத்துக்கலப்பை கொழுகள் அல்லது கூர்மையான பலுகுகளை கொண்டது. இது விதைப்பதற்கு முன், உழப்பட்ட வயலை மேலும் நன்கு உழுவதற்கு உதவுகிறது. முதன்மை உழவிற்கு பின் முளைத்த களைகளை கலைவதற்கும் இவ்வகை உழவு உதவுகிறது. கொத்துக் கலப்பையில் கொழுக்கள் இரண்டு வரிசைகளில் ஒரு சட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன. இரண்டு வரிசைகளில் சந்தி இடைவெளிகளில் இருப்பது போல இணைக்கப்பட்டுள்ள கொழுக்களின் முக்கிய குறிக்கோள் தாவரக் கழிவுகள் மற்றும் சிறு கட்டிகள் கலப்பையில் அடைக்காமல் இருக்க உதவுவது ஆகும். சட்டத்தில் உள்ள துவாரங்களின் மூலம் கொழுக்களின் அளவைத் தேவைக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்துக் கொள்ளலாம். ஒரு கலப்பையில் 7 முதல் 13 கொழுக்கள் காணப்படும். கொழு முனைகள் உடைந்து விட்டால், மாற்றிக் கொள்ளலாம்.

சுவீப் கொத்துக் கலப்பைதொகு

தாள் போர்வை உழவு முறையில் இடர்பாடுகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதால், சாதாரண கலப்பைகள் கொண்டு உழுவது கடினமானது சுவீப் கலப்பை இதற்கு ஏற்றது ஆகும். சுவீப் கலப்பையின் சட்டத்தில் பெரிய தலைகீழான வி வடிவிலான கத்திகள் இணைக்கப்பட்டுள்ளன. இக்கத்திகள் மண் மட்டத்திற்கு இணையாக 10 முதல் 15 செ.மீ ஆழத்தில் உழுகின்றன. இக்கத்திகள் இரண்டு வரிசையில், சந்தி குறுக்காக கலப்பை சட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன. சுவீப் கலப்பை முதல் உழவில் 12 முதல் 15 செ.மீ ஆழம் வரை உழுகிறது. பின்வரும் உழவுகளில் மேலோட்டமான உழவுகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. இவ்வகை கலப்பை களைகளைக் கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும் இக்கலப்பை நிலக்கடலை அறுவடைக்கு உதவுகிறது.

பலுகு கலப்பைகள்தொகு

பலுகு கலப்பைகள், மேலோட்டமான உழவுக்குத் தேவைப்படும் செயல்களான விதைப்படுக்கைகள் தயாரித்தல், விதைகளை மூடுதல் மற்றும் களைகளை களைவதற்கு போன்றவற்றிற்கு பயன்படுகின்றன. பலுகு கலப்பைகள் இரண்டு வகைப்படும். அவை : சட்டிப்பலுகு கலப்பை மற்றும் கத்தி பலுகு கலப்பை.

சட்டிப்பலுகு கலப்பைதொகு

சட்டிப்பலுகு கலப்பை 45 முதல் 55 செ.மீ விட்டம் கொண்ட குழிவான தட்டுக்களைக் கொண்டிருக்கும். இத்தட்டுக்கள் சட்டிக்கலப்பையின் தட்டுக்களைவிட சிறிய அளவுடையதாக இருக்கும் ஆனால் அதிக எண்ணிக்கையில் காணப்படும் இத்தட்டுக்கள் சக்கரம் சுழலும் அச்சில், 15 செ.மீ இடைவெளிகளில் இணைக்கப்பட்டுள்ளன. இரண்டு ஜோடி, தொகுதி தட்டுக்கள் இரண்டு அச்சுக்களில் இணைக்கப்பட்டிருக்கும். அனைத்துத் தட்டுக்களும் அச்சினை மையமாகக் கொண்டே சுழலும். இத்தட்டுக்கள் மண்ணை உழுது, செவ்வனே மண் கட்டிகளை உடைக்கின்றன.

கத்திப்பலுகுக் கலப்பைதொகு

கத்திப்பலுகு கலப்பை தாள் மற்றும் களைகளை நீக்குவதற்கு / மேலோட்டமான மண் கட்டிகளை உடைப்பதற்கு விதைகளை மூடுவதற்கும் ஊடுபயிர் உழவிற்கு மற்றும் நிலக்கடலை அறுவடைக்கு என வேறுபட்ட செயல்களுக்கு கத்திக் கலப்பை உதவுகிறது. ஊடுபயிர் வேளாண்மையில் கத்தி பலுகுக் கலப்பை பயன்பாட்டை விவரிக்கப்பட்டிருக்கிறது. கத்திக் பலுகு கலப்பை இரண்டு வகைப்படும். அவை

 1. பழமையானது, உள்நாட்டு கத்திப் பலுகு கலப்பை
 2. புதுமையானது, மேம்பட்ட கத்திப் பலுகு கலப்பை

பாரம்பரிய கத்திப் பலுகு கலப்பைதொகு

பாரம்பரிய கத்திப்பலகு கலப்பை குண்டக்க என்று அழைக்கப்படுகிறது. இதில் முளைப்பகுதியில் இரண்டு எழுச்சிகளை கொண்ட சட்டம் காணப்படுகிறது. ஒரு கத்தி அந்த எழுச்சி பகுதியில் இணைக்கப்பட்டுள்ளது. குண்டக்க வின் மற்ற பாகங்கள் இரண்டு தண்டு கம்பங்கள் மற்றும் ஒரு கைப்பிடி ஆகும். சட்டத்தின் நீளம் மற்றும் எடையைக் பொறுத்து அதன் பெயர் மற்றும் பயன்பாடு மாறுபடுகிறது.

பரப்புப் பலகை மற்றும் சுழல் கலப்பைதொகு

பரம்புப் பலகை என்பது மிகவும் எளிமையான 2 மீட்டர் நீளம் கொண்ட கனமான மரச்சட்டத்தினால் ஆனது. அதனுடன் ஒரு தண்டு மற்றும் கைப்பிடி இணைக்கப்பட்டிருக்கும். உழவின் பொது பெரும்பாலான சிறு மண்கட்டிகள் பரப்பு பலகையின் கனமான எடையினால் நொறுங்குகின்றன. இது விதைப்பதற்கு பின் தேவைப்படும் மெல்லிய சமப்படுத்தலுக்கும மற்றும் சீர்திருத்தத்திற்கும் பயன்படுகிறது. சுழல் கலப்பை கடின கட்டிகளை உடைப்பதற்கு மற்றும் விதைப்பு வரிசையை சமன் செய்யவும் பயன்படுகிறது.

விதைப்படுக்கை தயார் செய்ய உதவும் கருவிகள்தொகு

 1. நாட்டுக்கலப்பை
 2. சால் கலப்பை
 3. பார் அமைக்கும் கருவி

நாட்டுக் கலப்பை மற்றும் சால் கலப்பை, வயலில் சால் மற்றும் பார் அமைக்க அல்லது பாசனத்திற்கு கால்வாய் வடிவமைக்கப் பயன்படுகின்றன. ஒரு சட்டத்துடன் சால் கலப்பையை இணைத்து அகன்ற சால் படுக்கைகளை அமைக்கப் பயன்படுத்தலாம். பொதுவாக தோட்ட நிலத்தில் பாத்திகள் மண்வெட்டியைக் கொண்டு வேலையாட்கள் மூலம் அமைக்கப்படுகிறது. சரிவான நிலப்பகுதியில் குறுக்காக பாத்திகய் அமைத்து, மழை நீரை தடுத்து நிறுத்துவதன் மூலம் மண் ஈரப்பதத்தை அதிகப்படுத்த இது பயன்படுகிறது. பார் அமைக்கும் கருவி, வேலையாட்களுக்’கு பதிலாக பார்கள் அமைக்கப் பயன்படுகிறது. இக்கருவியில ஒரு ஜோடி இரும்பு வளைப்பலகை எதிர்எதிராக இருக்கும் படியும் மற்றும் முன்பக்கம் அகன்றும், பின்பக்கம் குறுகியும் பார் அமைக்க ஏதுவாக இணைக்கப்பட்டுள்ளன. அடையாளமிடும் கருவி மூலம், சதுர நடவு முறையில் வழிமாறிப் புள்ளிகளில் நாற்று நடவிற்கு அடையாளமிடப்படுகிறது. இக்கருவியில் ஒரு சட்டத்தில் 3 அல்லது 4 கட்டை (மர) சக்கரங்கள் இணைக்கப்பட்டுள்ளன. சக்கரங்களுக்கு இடையேயான இடைவெளி பயிர் இடைவெளியை பொறுத்து மாறுபடும். இக்கருவியை இரு திசைகளில் ஒட்டும் போது மேலோட்டமான ஆழமில்லாத சிறிய சால்கள் இரு திசைகளிலும் அமைக்கப்படும். குறுக்கு வெட்டு புள்ளிகளில் நாற்று நடப்படுகிறது.

விதைப்பதற்கு பயன்படும் கருவிகள்தொகு

நாட்டுக்கலப்பை மூலம் வடிவமைக்கப்பட்ட சால்களில், விதைகள் கைகளின் மூலம் விதைக்கப்படுகின்றன. இவ்விதைகள், சால்களில் தொடர்பின்றி வெவ்வேறு ஆழத்தில் விழும் வாய்ப்புகள் உள்ளது. இப்பிரச்சனையை சரி செய்ய அக்காடி பயன்படுத்தப்படுகிறது. அக்காடி என்பது ஒரு முனை கூர்மையாகவும், மற்றொரு முனை அகன்றும் காணப்படும் ஒரு மூங்கிலினால் ஆன கருவி ஆகும். இந்த அக்காடி நாட்டுக் கலப்பையுடன் கட்டப்படுகிறது மற்றும் விதை அதன் அகன்ற முனையில் போடப்படும். அப்போடப்பட்ட விதையானது, மூங்கில் குழாய் வழியாக கீழிரங்கி, கலப்பை மூலம் உருவாகும் சால் பகுதியில் விழுகிறது.

விதைக்கும் கருவி / விதைப்பிதொகு

விதைக்குங்கருவியில் ஒரு மரச்சட்டத்தில் 3 முதல் 6 கொழு முனைகள் இணைக்கப்பட்டிருக்கும். இக்கொழுமுனைகள் விதைப்பதற்கு ஏற்றவாறு சால்களை அமைக்கின்றன. கொழுமுனைகளுக்கு அருகில் துளைகள் இருக்கும். இத்துளைகளில், மூங்கில அல்லது இரும்பாலான சிறு விதை குழாய்கள் இணைக்கப்பட்டிருக்கும். இச்சிறு விதைக் குழாய்கள் மேல் பகுதியில் ஒரு மரத்தாலான விதைக் கலனுடன் இணைக்கப்பட்டிருக்கும். விதைக்குங்கருவிக்கு பின் நடந்து வரும், திறமை பெற்ற தொழிலாளி, ஒரே சீராக விதையை, விதைக் கலனுள் போட்டுக் கொண்டே வருவார்.

உரமிடும் மற்றும் விதைக்குங்கருவிதொகு

உரங்கள் பொதுவாக 5 செ.மீ ஆழத்தில் மற்றும் விதைக்கும வரிசையிலிருந்து 5 செ.மீ தொலைவில் இடப்படும். உரமிடுதல் மற்றும் விதை ஊன்றுதல் இரண்டு செயல்களும் ஒரே நேரத்தில் உரமிடும் மற்றும் விதைக்குங்கருவி மூலம் செய்யப்படுகிறது. இக்கருவி அடிப்படையில் விதைக்குங்கருவியை ஒத்தது, இதில் உரத்திற்கு தனியாக கொழுமுனைகள் மற்றும் கலன் அமைந்திருக்கும்.

எந்திர விதைக்குங்கருவிதொகு

இவ்வகை எந்திர விதைக்குங்கருவியில் ஒரு விதைக்கலன் அடிப்பகுதியில் சிறு துளைகளுடன் காணப்படும். அத்துளைகளில் விதைக்குழாய்கள் விதைகள் செல்வதற்காக இணைக்கப்பட்டிருக்கும். ஒரு சுழலும் தன்மைக் கொண்ட, களைகளை உடைய தட்டு அடிப்பகுதியில் இணைக்கப்பட்டிருக்கும். சுழலும் தட்டின் துளையும், கலனின் அடிப்பகுதியில் உள்ள துளையும இணையும் போது, விதை, விதைக்குழாயின் வழியாக மண்ணை அடைகிறது. இரண்டு துளைகளுக்கு இடையேயுள்ள இடைவெளி தூரம், இரண்டு பயிர் வரிசைகளுக்கு இடையேயுள்ள இடைவெளியை மாற்றலாம். பயிர்களுக்கு இடையேயுள்ள இடைவெளியை சுழலும் தட்டுத் துளைகளை மாற்றுவதன் மூலம் மாற்றி அமைக்கலாம். பல்வேறு மேம்பாடுகளைக் கொண்டு தானியங்கி விதைக்குங்கருவிகளும் உள்ளன.

இடை உழவுக்கான கருவிகள்தொகு

1. மரக்கலப்பை 2. சிறிய கத்தி பலுகுக் கலப்பை 3. களையெடுக்கும் கருவி - சுழலும் களையெடுக்கும் கருவி

நாட்டுக்கலப்பை மற்றும சால் கலப்பை ஆகியவை கரும்பு, உருளைக்கிழங்கு போன்ற பயிர்களுக்கு மண் அணைத்தலுக்கு பயன்படுகிறது. அகன்ற இடைவெளி கொண்ட பயிர்கள் மற்றும் பழமரங்களில் கிளைகளைக் கட்டுப்படுத்த மேலோட்டமான உழவிற்கு நாட்டுக்கலப்பை பயன்படுகிறது. சிறிய அளவு கத்திப் பலுகு கலப்பை, ஊடு பயிர்களில் பெருமளவு பயன்படுகிறது. இக்கலப்பையை, சிலர் சிறப்பு தேவைகளுக்கு ஏற்ப, உள்ளூரில் மாற்றி உள்ளூர் பெயர்களை வைத்துக் கொள்கின்றனர். இவை மிக எளிமையாக உருவாக்கக்கூடியதாகவும், குறைந்த விலையிலும் மற்றும் வேலைக்கு ஏற்றதாகவும் அமைந்துள்ளது. குறைந்த இடைவெளிக் கொண்ட பயிர்களின் இடை உழவுக்கு தந்தி பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு வரிசைக்கும் ஒரு தந்தி பயன்படுத்தப்படுகிறது. கலப்பையுடன் இணைக்கப்படும் தந்திகளைப் பொருத்து அதன் வேலை அகலம் அமையும். பில்லாகுண்டக்கா கத்தியின் நீளம் 30 முதல் 45 செ.மீ வரை இருக்கும். கத்தியின் நீளம் பயிர் இடைவெளி அளவைவிட 10 செ.மீ குறைவாக இருக்கும்.

புகையிலை கத்தி பலுகுதொகு

புகையிலை கத்தி பலுகு தூலத்தைபிட தந்தி நீளமானதாகக் கொண்டுள்ளது. அதனால் (எளிதில்) உடையும் தன்மை கொண்ட இலைக்காம்புகளை பாதிக்காமல், மண் மேற்பரப்பில் உள்ள களைகளை மட்டும் எடுப்பதற்கு பயன்படுகிறது. நட்சத்திர வடிவிலான களை எடுக்கும் கருவி ஒரு வேலையாள் மூலம் இயக்கக்கூடிய ஒரு சிறிய கருவி இக்கருவி நீண்ட செங்குத்தான மரத்தண்டு அல்லது இரும்புத் தண்டு மற்றும் சிறிய கிடைமட்டத் தண்டு (கருவியை இயக்க ஏற்றவாறு) கொண்டிருக்கும். மற்றொரு முனையில் இரு நட்சத்திர வடிவ சக்கரங்கள் மற்றும் ஒரு 10 செ.மீ அளவு ஒரு சிறிய கத்தி ஆகியவை இணைக்கப்ட்டிருக்கும். சுழலும் சக்கரத்தில் உள்ள கூர்மையான பற்கள் போன்ற அமைப்புகள் மண்ணை பண்படுத்தவும், களைகளை துண்டாக்கவும் மற்றும் நன்றாக கருவியை இயக்கவும் உதவுகிறது. நிலக்கடலை, திணைப் போன்ற குறுகிய இடைவெளி கொண்டப் பயிர்களில் களைகளைக் கட்டுப்படுத்த இக்கருவி பயன்படுகிறது.

நீர்ப்பாசன வாய்க்கால் அமைக்கும் கருவிதொகு

பயன் : நீர்ப்பாசன வாய்க்கால் அமைப்பதற்கு திறன் : ஒரு நாளில் 1.2 முதல் 1.5 எக்டர் வரை உழவு செய்யலாம்

அமைப்புதொகு

டிராக்டரால் இயக்கப்படும் இக்கருவி ஒரே சமயத்தில் இரண்டு கரைகளைஅமைப்பதால் நீர்ப்பாசன வாய்க்கால் உருவாகிறது. வாய்க்கால் அமைப்பதற்கு ஏற்றவாறு 100 * 25 செ.மீ. அளவுள்ள இரண்டு உட்புற தகடுகள் 30 டிகிரி கோணத்தில் அமையுமாறு அவற்றின் முன்புறம் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டு நிலத்தை உழுது செல்வதற்கேற்றவாறு கொழு பொருத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அமைக்கப்பட்ட வாய்க்காலின் இருபுறமும் கரைகள் அமைப்பதற்கு ஏற்றவாறு 120 ரூ 25 செ.மீ. அளவுள்ள இரண்டு வெளிப்புற தகடுகள் பாத்தியிலிருந்து மண்ணை மட்டப்படுத்தி வாய்க்காலின் ஒரம் மண்ணை சேர்ப்பதால் கரை அமைய எதுவாகிறது. வெளிப்புறத் தகடுகளைவிட உட்புறத் தகடுகள் ஆழமாக அமைக்கப்பட்டுள்ளதால் பாத்தியின் மட்டத்தைவிட வாய்க்காலின் மட்டம் 5 முதல் 10 செ.மீ. வரை ஆழமாக அமைக்க எதுவாகிறது.

சிறப்பு அம்சங்கள்தொகு

 • ஒரே தடவையில் வாய்க்காலும். வாய்க்காலின் இருபுறமும் கரைகளையும் அமைக்கிறது.
 • 5 மீ இடைவெளியில் ஒரு எக்டரில் நீர்ப்பாசன வாய்க்கால் அமைக்க ஆகும் செலவு ரூ.150
 • இதே முறையில் ஆட்களைக் கொண்டு நீர்ப்பாசன வாய்க்கால் அமைக்கு ஆகும் செலவு ரூ.350.

வாய்க்கால் அல்லது வடிகால் தோண்டும் கருவிதொகு

பயன்  : வாய்க்கால் வடிகால் அமைப்பதற்கு திறன்  : ஒரு மணிக்கு 1700 மீட்டர் நீளம்

அமைப்புதொகு

இக்கருவியில் இரண்டு நீளமான வளை பலகைக் கலப்பைகள் ஒன்றன் பின் ஒன்றாக எதிர் எதிராக ஓரே நேர் கோட்டில் ஒரு இரும்புச் சட்டத்தில் பொருத்தப்பட்டுள்ளன. இந்த இரும்புச் சட்டம் மும்முனை இணைப்பின் மூலம் டிராக்டருடன் பொருத்தப்படுகிறது. ஒவ்வொரு ளைபலகைக் கலப்பையின் அடிப்பாகத்தில் மண்ணைத் தோண்டுவதற்கான கொழு முனையும். தோண்டப்பட்ட மண்ணை உயர்த்தி இருபுறமும் போடுவதற்கேற்றவாறு வடிவமைக்கப்பட்ட நீணட வளை பலகைகளும் பொருத்தப்பட்டுள்ளன.

சிறப்பு அம்சங்கள்தொகு

 • ஒரு அடி அகலம் உள்ள வடிகாலோ அல்லது வாய்க்காலோ ஒரு அடி ஆழம் வரை அமைக்கலாம்.35 முதல் 45 குதிரை சக்தி கொண்ட டிராக்டரால் இதனை இயக்கலாம்.
 • இக்கருவியை 45 குதிரை திறன் கொண்ட டிராக்டரின் மூலம் இயக்கப்படும் பொழுது ஒரு மணிக்கு ரூ.200 செலவாகிறது.
 • சொட்டு நீர்ப் பாசனக்குழாய்களைப் பதிப்பதற்கேற்ற நீண்ட குழிகளைத் தோண்டலாம்.
 • தென்னை மரங்களைச்சுற்றி உரமிடுவதற்கான குழிகளைத் தோண்டலாம்.
 • கரும்புத் தோட்டங்களில் வடிகால் மற்றும் வாய்க்கால் தோண்டலாம்.
 • ஆட்களைக் கொண்டு வாய்க்கால் வடிகால் தோண்டுவதை ஒப்பிடம்பொழுது இக்கருவியை உபயோகிப்பதன் மூலம். 95.28 99.9 மற்றம் 53 சதவிகிதம் விலை. நேரம் மற்றும் சக்தியானது. களிமண் நிலங்களில் இயக்கும் பொழுது சேமிக்கப்படுகிறது.

கரை படுகை அமைக்கும் கருவிதொகு

பயன்  : உழுத நிலத்தில் கரை படுகை அமைக்கலாம் திறன்  : நாறொன்றுக்கு 3 முதல் 3.5 எக்டர் நிலத்தில் கரை படுகை அமைக்கலாம்

அமைப்புதொகு

இக்கருவியில் 45 செ.மீ. அகலமும் 14 செ.மீ ஆழமும் கொண்ட மூன்று வடிவ வாய்க்கால் அமைப்பும் மற்றும் 30 செ.மீ மேல் அகலமும் 14 செ.மீ உயரமும் கொண்ட இரண்டு பாத்திகளையும் ஒரே சமயத்தில் அமைக்கும் வண்ணம் 6 மி.மீ தகடுகளும் பொருத்தப்பட்டுள்ளன. இக்கருவியை டிராக்டர் மும்முனை இணைப்பில் எளிதில் பொருத்தி இழுத்துச் செல்லும் வண்ணம் இணைப்புப் பகுதியையும் கொண்டள்ளது. நன்கு உழுது பண்படுத்தப்பட்ட நிலத்தில் இக்கருவியை உபயோகித்து 75 செ.மீ. மேல் அகலம் கொண்ட இர கரைகளம் அதன் இருபுறமும் 30 செ.மீ ஆழம் மற்றும் அகலமும் கொண்ட படுகைகளையும் அமைக்க முடியும்.

சிறப்பு அம்சங்கள்தொகு

 • எளிதாக நீர் பாய்ச்சுவதற்கும் இவ்வித கரைபடுகை அமைப்பு உதவுகின்றது.
 • சோளம், மக்காச் சோளம், பருத்தி போன்ற பயிர்கள விதைக்க ஏதுவான பாத்தி மற்றும் வடிகால்அமைக்கலாம்
 • வடிகால்களில் கனிசமான மழை நீரை சேமிக்கலாம்
 • ஊடுபயிர்செய்வதற்கு வசதியானது

பவர்டில்லரால் இயங்கும் சமப்படுத்தும் கருவிதொகு

பயன் : இக்கருவியை நன்றாக உழுத் நிலத்தில் உரமான பகுதியில் உள்ள மண்ணை தாழ்வான பகுதிக்குக் கொண்டு சென்று நிலத்தைச் சமப்படுத்த பயன்படுத்தலாம் திறன் : ஒரு மணிக்கு 0.08 கன மீட்டர் மண்ணால் சமப்படுத்தலாம்

அமைப்புதொகு

பவர்டில்லரால் இயக்கப்படும் இக்கருவி ஒரு மீட்டர் அகலமுள்ள உள்நோக்கி லேசாக வளைக்கப்பட்ட கெட்டியான இரும்புத் தகட்டினால் ஆனது. இத்தகட்டின் கீழ்ப்பாகத்தில் மண்ணை வெட்டிச் செல்வதற்கான இரும்புப் பட்டை பொருத்தப்பட்டுள்ளது. இரு பக்கங்களிலும் மண் சிந்துவதை தவிர்க்க பக்கவாட்டில் சிறகுகள் இணைக்கப்ட்டுள்ளன. இக்கருவி பவர்டில்லரின் முன்புறம் உறுதியாக பொருத்தப்பட்டுள்ளது. பவர்டில்லரால் இக்கருவி உந்தி முன்னுக்கு தள்ளப்படும் பொழுது இரும்புப் பட்டையினால் வெட்டப்பட்ட மண் சேகரிக்கப்பட்டு வேண்டிய இடத்திற்கு கடத்தப்படுகிறது.

சிறப்பு அம்சங்கள்தொகு

 • மேட்டுப்பகுதியிலிருந்து மண்ணை பள்ளத்திற்கு எடுத்துச் சென்று நிலத்தைச் சமன்படுத்த மிகவும் உதவும்
 • நிலத்தின் குறுக்கே வரப்புகள் போட்டு மண் அரிப்பைத் தடுப்பதுடன் மண்ணின் ஈரத்தன்மையை காக்க உதவுகிறது.
 • மரச்சட்டம் மற்றும் பலகையினால் நிலத்ததை சமப்படுத்துவதை ஒப்பிடும் பொழுது நேரம் மீதப்படுவதுடன் நிலம் சீராக சமப்படுத்தப்படுகிறது.
 • ஒரு கன மீட்டர் மண்ணை ஒரு மீட்டர் நீளத்திற்கு கடத்த ஆகும் செலவு ரூபாய் மூன்று என கணக்கிடப்பட்டுள்ளது.

பவர் டில்லரினால் இயங்கும் செடிகளை பொடி செய்து மண்ணோடு கலக்கும் கருவிதொகு

சிறப்பியல்புகள்தொகு

 • பல்வேறு வகையான செடிகளை துண்டாக்கி மண்ணில் கலக்கலாம்
 • அனைத்து வகையான பவர் டில்லர்களுடன் இணைக்கலாம்
 • ஒரு நாளில் 0.8 எக்டர் நிலத்தில் உள்ள செடிகளை துண்டாக்கி மண்ணில் கலக்கலாம்
 • கருவியை பயன்படுத்துவதால் 73 சதவீத நேரமும் 75 சதவீத செலவும் மீதம் ஆகிறது

டிராக்டரால் இயங்கும் கரும்பு நடவு செய்ய் குழி தோண்டும் கருவிதொகு

சிறப்பியல்புகள்தொகு

 • குழி முறையில் கரும்பு நடவு செய்ய 90 செ.மீ விட்டம், 30 செ.மீ.ஆழமுள்ள இருகுழிகளை 1.5 மீ இடைவெளியில் ஒரே சமயத்தில் தோண்டலாம்
 • குழி முறையில் கரும்பு நடவு செய்வதால் அதிக மகசூல் பெறலாம்
 • நீர் மற்றும் நிர்வாகத்ததை சொட்டு நீர் மூலம் கொடுக்கும்வபோது கரும்பின் மகசூலை மேலும் அதிகரிப்பதற்கான தொழில்நுட்பத்தில் இக்கருவி பரிந்துரை செய்யப்படுகிறது.

டிராக்டரால் இயங்கும் சுழலும் மண்வெட்டிதொகு

சிறப்பியல்புகள்தொகு

 * முதன் முறையாக நிலத்தை தயார் படுத்த உதவுகிறது
 * பயிர்களின் வரிசைகளுக்கிடையே மண் கூட்டமைப்பு பாதிக்கப்டாமல் ஆழ உழவு செய்ய உதவுகிறது
 * நெல் தரிசு பயிர்கள் மற்றும் தென்னை தோப்புகளில் உழவு செய்ய பயன்படுகிறது.

மேற்கோள்தொகு

[1] [2]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உழவுக்_கருவிகள்&oldid=2753481" இருந்து மீள்விக்கப்பட்டது