ஊசியடி வெடிப்பொதி

ஊசியடி வெடிப்பொதி என்பது, ஒரு வழக்கொழிந்த உலோக வெடிபொதி வகை ஆகும். வெடிபொதியின் அடித்தட்டிற்கு சற்று மேலே, ஆரப்போக்கில் துருத்திக்கொண்டு இருக்கும் ஒரு சிறிய ஊசியை அடித்து, இதில் எரியூட்டி பற்றவைக்கப்படும். 1830-களில் பிரெஞ்சுக்காரர் கசீமிர் லெஃபொஷொ என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டு[1], 1835-ல் காப்புரிமம் பெறப்பட்டது.[2] இது ஒரு முற்கால உலோக வெடிபொதி ஆகும். இதன் வரலாறு, வாய்குண்டேற்ற ஆயுதங்களுக்கு மாற்றாக வந்த பின்-குண்டேற்றிகளின் மேம்பாட்டுடன் நெருங்கியது ஆகும்.

ஊசியடி வெடிப்பொதியின் வரைபடம்
சில ஊசியடி வெடிப்பொதிகள் - வரிசையாக 15மி.மீ., 12மி.மீ., 9மி.மீ., 7மி.மீ., 5மி.மீ. மற்றும் 2மி.மீ. ஒவ்வொரு வெடிபொதியின் விவரமும் இப்படத்தின் கோப்புப் பக்கத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன.
லெஃபொஷொ எம்.1858 கைத்துப்பாக்கியின் படம். வெடிபொதியில் இருந்து துருத்தியிருக்கும் ஊசியை காண்க.

மேற்கோள்கள்

தொகு
  1. Lautissier, Gerard, and Michel Renonciat. Casimir Lefaucheux, Arquebuier: 1802-1852. La Tour-du-Pin Editions du Portail, 1999. 142. Print:
  2. FR patent 6348, Casimir Lefaucheux, "fusil se chargeant par la culasse, au moyen d'un mécanisme qui fait basculer le canon", filed 1835-01-08, issued 1835-03-31
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊசியடி_வெடிப்பொதி&oldid=2277249" இலிருந்து மீள்விக்கப்பட்டது