ஊசு தேசம் அல்லது ஊத்ஸ் தேசம் (Land of Uz) என்பது பழைய ஏற்பாட்டின் "யோபு" எனும் புத்தகத்தில் குறிப்பிடப்பபடுள்ள ஒரு இடமாகும். யோபுவினுடைய ஆகமத்தில் 'ஊசு தேசத்தில் யோபு எனும் பெயர் கொண்ட ஒரு மனுஷன் இருந்தான்"; எனக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது[1]  என்ற போதும் யோபு என்பவர் எக்காலத்தில் வாழ்ந்தார் என்பதும் ஊசு எனும் தேசம் எங்கு அமைந்திருந்தது என்பது பற்றிய தகவல்கள் வேதாகமத்தில் குறிப்பிடப்படவில்லை.

முற்கால ஏதோம் இராச்சியத்தில்  உள்ள ஊசு தேசம்

சாக்கடல் ஏடுகள் அல்லது கும்ரான் ஏடுகளில் உள்ள பிரதியொன்றில் ஊசு தேசமானது யூப்பிரட்டிஸ் அருகே ஆராமிற்கு அண்மையில் அமைந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது

"ஊசு தேசம்" சிலவேளைகளில் ஏதோம் இராச்சியத்தில் காணப்பட்டதாக ஆய்வாளர் கூறுகின்றனர்[2]. இது இக்கால யோர்தான் மற்றும் தெற்கு  இஸ்ரேல் பகுதிகளாகும்.

புலம்பல் 4 : 21 "ஊசு நாட்டில் வாழும் மகளே! ஏதோம்! அகமகிழ்ந்து அக்களித்திடு" இவ் வசனமானது ஊசு தேசமானது தெற்கு அரேபியாவையும் இன்னும் பல பிரதேசங்களையும் உள்ளடக்கியதாக இருந்திருக்கலாம்.

மேற்கோள்கள்

தொகு
  1. Job 1:1
  2. "The Land of Uz" WebBible Encyclopedia
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊசு_தேசம்&oldid=1981724" இலிருந்து மீள்விக்கப்பட்டது