ஊதாப்புள்ளியம்

ஊதாப்புள்ளியம் ( இலத்தீன்:purpura, "ஊதா") என்பது சிவப்பு அல்லது ஊதா நிறத்தில் தோலில் புள்ளிப்புள்ளியாக ஏற்படும் மாற்றங்கள் ஆகும். இயல்பு நிலையில் தோலில் அழுத்தும்போது தோன்றும் வெளிறிய நிறம் இப்புள்ளிகள் காணப்படும் இடங்களில் அழுத்தினால் தோன்றாது. தோலின் கீழே ஏற்படும் குருதிக்கசிவினால் இவை ஏற்படுகின்றன. ஊதாப்புள்ளியம் 0.3–1 cm (3–10 mm) அளவிலும், குருதிக்குறும்புள்ளியம்(petechiae) 3 mm அளவுக்குக் குறைவாகவும், மற்றும் குருதித்திட்டு (ecchymoses) 1 cm அளவிலும் அதிகமாகவும் சுற்றளவைக் கொண்டது.[1]

ஊதாப்புள்ளியம்
மருந்தின் தூண்டலினால் கீழ்க்காலில் ஏற்பட்ட குருதிக் குழலியவழற்சியால் உண்டாகிய குருதிக்குறும்புள்ளியம் மற்றும் ஊதாப்புள்ளியம்
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புhematology
ஐ.சி.டி.-10D69.
ஐ.சி.டி.-9287
நோய்களின் தரவுத்தளம்25619
ம.பா.தD011693

தைபசுக் காய்ச்சலில் பொதுவாகக் காணப்படும், மேலும் நைசீரியா மெனின்ச்சைடிடிசுவால் ஏற்படும் மூளைமென்சவ்வழற்சியில் மற்றும் குருதி நுண்ணுயிர் நச்சேற்றம் போன்றவற்றில் காணப்படும்.

மேற்கோள்கள் தொகு

  1. Mitchell RS; Kumar V; Robbins SL; Abbas AK; Fausto N (2007). Robbins basic pathology (8th ed.). Saunders/Elsevier. பக். 10–11. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-4160-2973-7. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊதாப்புள்ளியம்&oldid=2915290" இலிருந்து மீள்விக்கப்பட்டது