ஊரீசு கல்லூரி

ஊரீசு கல்லூரி (Voorhees College) இந்தியாவின் தமிழ்நாட்டில் வேலூர் மாவட்டத்திலுள்ள ஒரு கல்லூரி ஆகும். இக்கல்லூரி 1898 ஆம் ஆண்டு ஆற்காடு மிசன் கல்லூரியாக ஆரம்பிக்கப்பட்ட போது, ஆற்காடு மிசன் உயர்நிலைப்பள்ளி சென்னைப் பல்கலைக்கழகம் கழகத்தோடு இணைக்கப்பட்டது. இக்கல்லூரியின் கொடையாளர்களான திரு மற்றும் திருமதி.ரால்ப் மற்றும் எலிசபெத் ஊரீசு அவர்களின் அமெரிக்க மறுசீரமைப்பு திருச்சபை சார்பாக அவர்களின் பெயர் வழங்கப்பட்டது. [1] முதலில் இக்கல்லூரியின் பெயர் ரால்ப் மற்றும் எலிசபெத் ஊரீசு கல்லூரி என அழைக்கப்பட்ட போது இருபாலரும் பயிலும் கல்வி நிறுவனமாக இருந்தது. அறுபதுகளின் பிற்பகுதியில் டாக்டர்.எ.இன்.கோபால் அவர்களின் பதவிக்காலம் முடிந்த போது,கல்லூரியின் அடுத்த முதல்வர் பெண்களை கல்லூரியில் சேர்ப்பதை நிறுத்தினார். பின் ரால்ப் மற்றும் எலிசபெத் அவர்களின் பெயர்களை நீக்கிவிட்டார். தற்போது ஊரீசு கல்லூரி என அழைக்கப்படுகிறது. 1975 ஆம் ஆண்டு முதல் கல்லூரியில் முதுகலை பிரிவுகள் தொடங்கப்பட்டது. தென்னிந்திய திருச்சபை வேலூர் மறைமாவட்டம் கல்லூரியை நிர்வகிக்கிறது. கல்லூரியின் முதல்வர் வேலூர் கிருத்துவ பாதிரியார் ஆவார். கல்லூரியின் குறிக்கோள் “கடவுள் இன்றி வேறுதுவும் இல்லை”. திருவள்ளுவர் பல்கலைக்கழகம்,வேலூருடன் இக் கல்லூரி இணைக்கப்பட்டுள்ளது. தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவை கீழ் ஊரிசு கல்லூரி அங்கீகாரம் பெற்றுள்ளது.மேலும் 2005 ஆம் ஆண்டு தரம் “எ” முதல் நிலையைப் பெற்றுள்ளது.

ஊரீசு கல்லூரி
ஊரீசு கல்லூரி
Voorhees College 2006 stamp of India.jpg
முந்தைய பெயர்s
ஆற்காடு மிசன் கல்லூரி
குறிக்கோளுரைநிசி டோமினசு பிரசுடிரா
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை
கடவுள் இன்றி வேறுதுவும் இல்லை
உருவாக்கம்1898; 123 ஆண்டுகளுக்கு முன்னர் (1898)
சார்புதிருவள்ளுவர் பல்கலைக்கழகம்,வேலூர்
தலைவர்டி.எ.ராசவேலு
முதல்வர்டாக்டர்.சிடான்லி சோன்சு
அமைவிடம்வேலூர், தமிழ்நாடு, இந்தியா
12°54′37.75″N 79°7′55.19″E / 12.9104861°N 79.1319972°E / 12.9104861; 79.1319972ஆள்கூறுகள்: 12°54′37.75″N 79°7′55.19″E / 12.9104861°N 79.1319972°E / 12.9104861; 79.1319972
வளாகம்நகரம்
சேர்ப்புதென்னிந்திய திருச்சபை வேலூர் மறைமாவட்டம்
இணையதளம்http://www.voorheescollege.edu.in/

முன்னாள் மாணவர்கள்தொகு

சர்வபள்ளி இராதாகிருட்டிணன்- முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர்

படிப்புகள்தொகு

பின்வரும் படிப்புகள் கல்லூரில் வழங்கப்படுகிறது

இளங்கலை படிப்புகள்தொகு

 இளங்கலை-பாதுகாப்பு மற்றும் போர்த்திறஞ்சார்ந்தஆய்வுகள் 
 இளங்கலை- ஆங்கிலம்,தமிழ்,வரலாறு,பொருளாதாரம்
 இளங்கலை அறிவியல்-
   வேதியியல்,கணினிஅறிவியல்,இயற்பியல், விலங்கியல்,தாவரவியல்
 இளங்கலை வணிகம்
   இளங்கலை வியாபார நிர்வாகம்

முதுகலை படிப்புகள்தொகு

 முதுகலை-பாதுகாப்பு மற்றும் போர்த்திறஞ்சார்ந்த ஆய்வுகள்
 முதுகலை- வரலாறு,தமிழ்(சுயநிதியளிப்பு),ஆங்கிலம்(சுயநிதியளிப்பு),பொருளியியல்(சுயநிதியளிப்பு)

முதுகலை அறிவியல்தொகு

   . வேதியியல் (சுய நிதியளிப்பு),கணிதம்,இயற்பியல் (சுய நிதியளிப்பு),விலங்கியல்

ஆராய்ச்சி படிப்புகள்தொகு

    தமிழ்,வரலாறு,வர்த்தகம்,விலங்கியல்,இயற்பியல்,வேதியியல்,கணிதம்

முனைவர்தொகு

   வர்த்தகத்தில்,வரலாற்றில்,தமிழில்,விலங்கியல்

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊரீசு_கல்லூரி&oldid=3292122" இருந்து மீள்விக்கப்பட்டது