ஊர் ஒன்றியம்
புகலிடத் தமிழர் தாங்கள் வந்த ஊர் அடிப்படையிலும் வாழும் ஊர் அடிப்படையிலும் ஊர் ஒன்றியங்களை உருவாக்கி செயல்படுகின்றார்கள். இவ் அமைப்புக்கள் பழைய உறவுகளை மீள் கட்டமைப்பதிலும், புதிதாக இணைப்புக்களை ஏற்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. தாயகத்தில் இருக்கும் மக்களுடன் தொடர்புகளை பேணுவதிலும், தேவையேற்படின் உதவிகளை பரிமாறி கொள்வதற்கும் இவ் ஒன்றியங்கள் வழிசெய்கின்றன. தேசிய பாரிய அமைப்புக்களிலும் பார்க்க ஊர் ஒன்றியங்களின் செயல்பாடுகள் நேரடியான செயல்பாட்டுக்கு வழி செய்கின்றன. இவ் ஊர் ஒன்றியங்களின் செயல்பாட்டில் ஒரு முக்கிய அம்சம் ஊர் ஒன்றுகூடல்கள் ஆகும்.
தோற்றம்
தொகுஆரம்பத்தில் அனைத்து புகலிடத் தமிழர்களும் தமிழர் என்ற ரீதியில் ஒன்றிணைந்து செயல்பட்டார்கள். குறிப்பாக தமிழ்ச் சங்கங்கள் தாங்கள் வசிக்கும் பிரதேசத்தில் இருக்கும் தமிழ் மக்களை இணைக்கும் நோக்கில் செயற்பட்டார்கள். நாளடைவில் மக்கள் தொகை பெருகியதால் நெருகிய தொடர்பிலான அமைப்புக்கள் தோன்றின. இவற்றுள் தொழில், ஈடுபாடுகள், அரசியல், ஊர் அடைப்படையிலான அமைப்புகள் அடங்கும்.
தொலைத்தொடர்பு, இணையம், போக்குவரத்து வசதிகள் இவ்வூர் ஒன்றியங்களின் தோற்றத்துக்கும் பேணலுக்கும் முக்கியம். இந் தொழிநுட்பங்கள் வளர்ச்சியடையாத காலகட்டங்களில் ஏற்பட்ட புலப்பெயர்வுகள் ஊர் அடிப்படையிலான ஒன்றியங்களை ஏற்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஊர் சார் ஒன்றியங்கள் தமிழ் மக்களுக்கு தனித்துவமானது அல்ல. சீன, யப்பானிய, மற்றும் பிற இன மக்களும் ஊர் அடிப்படையிலான அமைப்புக்களை கொண்டிருக்கின்றார்கள்.
கட்டமைப்பு
தொகுஊர் ஒன்றியம் அவ் ஊர் சார்ந்த குடும்பங்களை, தனி நபர்களை உறுப்பினர்களாக கொண்டடிருக்கின்றன. இவ் உறுப்பினர்களின் பொருளாதார பங்களிப்பின் மூலமே ஒன்றியத்தின் செயல் திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன. இவ் ஒன்றியங்கள் ஒரு இலகிய நட்பின் அல்லது உறவின் அடிப்படையிலான கட்டமைப்பையே பேணுகின்றன. எனினும், சில பெரிய ஊர்களின் அல்லது சீரிய செயல்பாட்டு நோக்கங்கள் கொண்டிருக்கும் ஊர் அமைப்புகள் சீரிய அல்லது பலக்கிய கட்டமைப்புக்களை பேணுகின்றன. பொதுவாக, தலைவர், உப தலைவர், செயலாளர், பொருளாளர், தொடர்பாளார்கள், தொண்டர்கள் ஆகியோரை கொண்ட ஒருங்கிணைப்பு மன்றம் ஊர் ஒன்றியத்தின் செயல்பாடுகளை ஒருங்கிணைத்து நெறிப்படுத்தும்.
செயல்பாடுகள்
தொகுஊர் ஒன்றியங்களின் செயல்பாடுகள் ஆறு முனைகளில் அமைகின்றது எனலாம்:
- ஒன்றிய நிர்வாகம்
- தாயக உதவி
- ஒன்றுகூடல்
- தொடர்பாடல்
- பொது வாழ்வியல்நீரோட்ட இணைப்பு
- பண்பாடு பேணல்
சமூக தாக்கம்
தொகுஊர் ஒன்றியங்கள் வந்த இடத்துக்கும் வாழும் இடத்துக்கும் இருக்கும் இடைவெளியில் இயங்குகின்றன. இவற்றின் செயற்பாடுகள் வந்த இடத்துகான பாலமாக அமைந்தாலும், வாழும் இடத்துடன் இணைப்புக்களை இறுக பேணும் படியாகவும் செயல்படவேண்டும். இவற்றின் தாக்கங்கள் புலம்பெயர்ந்தவர்களையும், ஊர் மக்களையும் சென்றடைகின்றன. பல வழிகளில் புகலிட ஊர் ஒன்றியங்கள் ஊர் மக்களின் நலன்களுக்கு உதவிகளை அளித்தாலும், புலம்பெயர்ந்தவர்களின் ஆவல்கள் ஊர் மக்களின் நேரடி தேவைகளுடன் ஒன்றியமையாமலும் அமைவதுண்டு, குறிப்பாக அரசியல் நிலைப்பாடுகளில்.
பல்லினப்பண்பாட்டு, உலகமய, தேசிய சக்திகளின் மத்தியில் ஊர் ஒன்றியங்கள் கீழே இருந்து மேலே நோக்கும் அமைப்புக்களாக இயங்குகின்றன. இவற்றின் செயல்பாடுகள் பரந்த அமைப்புகளுக்கு கிடைக்ககூடிய வலுவை அல்லது ஆதரவை சிதைக்ககூடிய போக்குக்களையும் கொண்டுள்ளன. அதேவேளை பரந்த அமைப்புக்களுடன் கூட்டாக கூடிய செயல்வலுவுடன் இணைந்து செயலாற்றும் தன்மையையும் கொண்டுள்ளன.