எகிப்தின் பழைய இராச்சியம்

எகிப்தின் பழைய இராச்சியம் (Old Kingdom) (கிமு 2686 – 2181) பண்டைய எகிப்தை கிமு 2686 முதல் 2181 முடிய ஆண்டது. எகிப்தின் இப்பழைய இராச்சியத்தை ஆண்ட, நான்காம் வம்சத்தினர்கள் ஆட்சியில், முதன் முதலாக எகிப்தில் பிரமிடுகள் கட்டப்பட்டது. இதனால் பழைய எகிப்திய இராச்சியத்தை பிரமிடுகளின் காலம் என அழைக்கப்பட்டது.

எகிப்தின் பழைய இராச்சியம்

கிமு 2686–கிமு 2181
கிமு 2686 - கிமு 2181களில் நைல் ஆறு, மேற்குப் பாலைவனம், சினாய் தீபகற்பம் உள்ளடக்கிய எகிப்தின் பழைய இராச்சியம்
தலைநகரம் மெம்பிசு
மொழி(கள்) எகிப்திய மொழி
சமயம் பண்டைய எகிப்திய சமயம்
அரசாங்கம் முடியாட்சி
பார்வோன்
 -  கிமு 2686 – 2649 ஜோசெர் (முதல்)
 -  கிமு 2184 – 2181 நெபெரிர்கரே
வரலாறு
 -  உருவாக்கம் கிமு 2686
 -  குலைவு கிமு 2181
Warning: Value specified for "continent" does not comply

கூபு, காப்ரா மற்றும் மென்கௌரே போன்ற மன்னர்களின் ஆட்சி காலங்களில் கிசா பிரமிடுத் தொகுதிகள் கட்டினர்.[1]பண்டைய எகிப்தின் பழைய இராச்சியமும், அதனைத் தொடர்ந்து வந்த மத்திய கால எகிப்து இராச்சியம் மற்றும் புதிய எகிப்து இராச்சியங்கள் காலத்தில், நைல் ஆற்றுச் சமவெளிகள், உலகில் சிறந்த நாகரீங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. [2]

பழைய எகிப்திய இராச்சியம் போர்க் கலை, வேளாண்மை, பொருளாதாரம், கல்வி, மொழி, கட்டிடக் கலையில் சிறந்து விளங்கியது. மன்னர் பார்வோன் என அழைக்கப்படவில்லை. எகிப்தின் புதிய இராச்சிய காலத்திலிருந்து தான் எகிப்திய மன்னர்களை பார்வோன் என அழைத்தனர். மூன்றாம் வம்சத்தினர் முதல் ஆறாம் வம்சத்தினர் வரை எகிப்தின் பழைய இராச்சியத்தை கிமு 2686 முதல் 2181 வரை ஆண்டனர்.

எகிப்தின் மூன்றாம் வம்ச ஆட்சியின் மன்னர் ஜோசர் காலத்தில், பழைய எகிப்திய இராச்சியத்தின் தலைநகரம் மெம்பிசுவுக்கு மாற்றப்பட்டது. மெம்பிசுவில் இறந்த மன்னர்களின் உடலைப் புதைப்பதற்காக, படிக்கட்டுகள் போன்ற பிரமிடுகள் எழுப்பப்பட்டது. [3]எனவே பழைய எகிப்திய இராச்சியத்தை பிரமிடுகளின் காலம் என்பர்.

வரலாறுதொகு

மூன்றாம் வம்சம்தொகு

 
ஜோசர் பிரமிடு, சக்காரா

எகிப்தின் பழைய இராச்சியத்தை நிறுவிய, எகிப்தின் மூன்றாம் வம்ச மன்னர் ஜோசர் (கிமு 2691 - 2625) ஆட்சிக் காலத்தில் மெம்பிசு, சக்காரா மற்றும் ஹெல்லியோபோலிஸ் பகுதிகளில் பிரமிடுகள் கட்டப்பட்டது.

 
மன்னர் ஜோசர் கோயில், சக்காரா
 
எகிப்திய மன்னரின் தலைச் சிற்பம், கிமு 2650-2600, புருக்லீன் அருங்காட்சியகம்

எகிப்தின் பழைய இராச்சிய மன்னர்களின் சிற்பங்கள் ஆளுயரத்தில் வடிக்கப்பட்டது.[4] பழைய இராச்சியத்தின் மன்னர்களை, மக்கள் கடவுளாக வழிபட்டனர்.

நான்காம் வம்ச ஆட்சியில் பழைய எகிப்திய இராச்சியத்தின் வளர்ச்சிதொகு

மன்னர் சினேபெரு (கிமு 2613–2589 ) நிறுவிய எகிப்தின் நான்காம் வம்ச ஆட்சியின் போது (கிமு 2613–2494), எகிப்தின் பழைய இராச்சியம் அனைத்து துறைகளிலும் வளர்ச்சியின் உச்சத்தை எட்டியது. இவரது ஆட்சியில், இறந்த மன்னர்களின் உடலைப் பதப்படுத்தி அடக்கம் செய்வதற்கு, மூன்று பெரிய பிரமிடுகள் கட்டப்பட்டது. [5][5] [6]

சினெபெருவின் மகன் கூபு (கிமு 2589–2566 ), கிசாவின் பெரிய பிரமிடு மற்றும் பெரிய ஸ்பிங்ஸ்களை எழுப்பினார். மேலும் தெற்கு எகிப்தில் உள்ள நுபியா (சூடான்) மற்றும் பண்டைய அண்மை கிழக்கின் கானான் நாடுகளைக் கைப்பற்றினர்.[7]

ஐந்தாம் வம்சம்தொகு

 
எகிப்தின் பழைய இராச்சியத்தை ஆண்ட ஐந்தாம் வம்ச மன்னர் இம்ஹோதேப்பின் சிற்பம், இலூவா அருங்காட்சியகம்

எகிப்தின் பழைய இராச்சியத்தின் ஐந்தாம் வம்சத்தை (கிமு 2494–2345) நிறுவிய மன்னர் யுசர்காப் ஆட்சியின் போது (கிமு 2494–2487) இரா எனும் சூரியக் கடவுள் வழிபாடு முக்கியத்துவம் பெற்றது. சூரியக் கோயில்கள் கட்டப்பட்டது.

ஐந்தாம் வம்ச ஆட்சியில் கருங்காலி, நறுமணப் பொருட்கள், வெள்ளைப்போளம், சாம்பிராணி, செப்பு, தங்கம் போன்ற பொருட்களை செங்கடல் வழியாக பண்டைய அண்மை கிழக்கு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு கப்பல்களை உருவாக்கினர்.

முதல் இடைநிலை காலத்தில் வீழ்ச்சிதொகு

எகிப்தின் ஆறாம் வம்ச மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் (கிமு 2345–2181), பார்வோன்களின் அதிகாரம், மாநில ஆளுநர்களின் ஆதிக்கத்தால் படிப்படியாக வீழ்ந்தது. பழைய எகிப்திய இராச்சியத்தின் மையப்படுத்தப்பட்ட ஆட்சி முறை மாறி பிரதேச ஆளுநர்களின் அதிகாரம் தலைதூக்கியது.

இருப்பினும் நைல் ஆற்றின் வெள்ளம் கரை புரண்டு ஓடுவதை தடுக்க கால்வாய்கள் வெட்டப்பட்டு, வேளாண்மை மற்றும் குடிநீர் ஆதாரங்களை பெருக்கினர்.

பார்வோன் இரண்டாம் பெப்பியின் (கிமு 2278–2184) நீண்ட ஆட்சிக் காலத்தில், உள்நாட்டுப் போர்களாலும், முடிக்குரிய வாரிசுரிமைப் போட்டியாலும் எகிப்தின் ஆறாம் வம்ச ஆட்சி முடிவுற்றது. கிமு 2200 - 2150 வரையிலான காலத்தில் நைல் ஆற்று வெள்ளத்தாலும், மழையின்மையாலும் எகிப்தில் பஞ்சம் தலைவிரித்தாடியது.[8]

பண்பாடுதொகு

எகிப்தின் பழைய இராச்சியத்தின் 3 - 6 வரையிலான வம்ச ஆட்சியாளர்கள் காலத்தில் (கிமு 2649–2150) கட்டிடக் கலை, சிற்பக் கலை, ஓவியக் கலைகள் செழித்திருந்தது. [9]தங்கம், வெள்ளி, செப்பு மற்றும் நவரத்தினங்களால் அழகிய நகைகள் செய்தனர். மரம், கல், படிகத்தால் அழகிய சிற்பங்களை வடித்தனர். கருங்கற்களால் பெரிதும், சிறிதுமான பிரமிடுகள் கட்டப்பட்டது. இறந்த மன்னர்கள், அரச குடும்பத்தினரது பதப்படுத்தப்பட்ட மம்மிகளை பிரமிடுகளில் மரியாதைகளுடன் அடக்கம் செய்யும் வழக்கம் இருந்தது. [10]மக்கள் பார்வோனை கடவுளாக வழிபட்டாலும், இரா எனும் சூரியக் கடவுள் வழிபாடும் இருந்தது.

பழைய எகிப்திய இராச்சியத்தின் முக்கிய ஆட்சியாளர்கள்தொகு

 1. சினெபெரு
 2. கூபு
 3. ஜெதெப்பிரேகாப்ரா
 4. மென்கௌரே
 5. யுசர்காப்
 6. சகுரா
 7. தேத்தி
 8. முதலாம் பெப்பி
 9. இரண்டாம் பெப்பி

இதனையும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு

 1. "Old Kingdom of Egypt". Ancient History Encyclopedia. https://www.ancient.eu/Old_Kingdom_of_Egypt/. 
 2. Malek, Jaromir. 2003. "The Old Kingdom (c. 2686–2160 BCE)". In The Oxford History of Ancient Egypt, edited by Ian Shaw. Oxford and New York: Oxford University Press. ISBN 978-0192804587, p.83
 3. Step pyramid
 4. Bothmer, Bernard (1974). Brief Guide to the Department of Egyptian and Classical Art. Brooklyn, NY: Brooklyn Museum. பக். 22. 
 5. 5.0 5.1 "Ancient Egypt - the Archaic Period and Old Kingdom" (en).
 6. Carl Roebuck (1984), The World of Ancient Times, p. 57.
 7. p.5, 'The Collins Encyclopedia of Military History' (4th edition, 1993), Dupuy & Dupuy.
 8. Jean-Daniel Stanley (2003). "Nile flow failure at the end of the Old Kingdom, Egypt: Strontium isotopic and petrologic evidence". Geoarchaeology 18 (3): 395–402. doi:10.1002/gea.10065. 
 9. Art of ancient Egypt
 10. "Select Egypt". selectegypt.com.

வெளி இணைப்புகள்தொகு

மேலும் படிக்கதொகு

 • Brewer, Douglas J. Ancient Egypt: Foundations of a Civilization. Harlow, UK: Pearson, 2005.
 • Callender, Gae. Egypt In the Old Kingdom: An Introduction. South Melbourne: Longman, 1998.
 • Kanawati, Naguib. Governmental Reforms In Old Kingdom Egypt. Warminster: Aris & Phillips,, 1980.
 • Kanawati, Naguib., and Alexandra Woods. Artists of the Old Kingdom: Techniques and Achievements. 1st English ed. Egypt: Supreme Council of Antiquities Press, 2009.
 • Lehner, Mark. The Complete Pyramids. London: Thames and Hudson, 1997.
 • Málek, Jaromír., and Werner Forman. In the Shadow of the Pyramids: Ancient Egypt During the Old Kingdom. Norman: University of Oklahoma Press, 1986.
 • McFarlane, A., and Anna-Latifa Mourad. Behind the Scenes: Daily Life In Old Kingdom Egypt. North Ryde, N.S.W.: Australian Centre for Egyptology, 2012.
 • Metropolitan Museum of Art. Egyptian Art in the Age of the Pyramids. New York: Metropolitan Museum of Art, 1999.
 • Papazian, Hratch. Domain of Pharaoh: The Structure and Components of the Economy of Old Kingdom Egypt. Hildesheim: Gerstenberg, 2012.
 • Ryholt, Kim S. B. The Political Situation in Egypt during the Second Intermediate Period c. 1800–1550 BC. Copenhagen: Museum Tusculanum, 1997.
 • Sowada, K., and Peter Grave. Egypt In the Eastern Mediterranean During the Old Kingdom: An Archaeological Perspective. Fribourg: Academic Press, 2009.
 • Strudwick, Nigel. The Administration of Egypt In the Old Kingdom: The Highest Titles and Their Holders. London: KPI, 1985.
 • Warden, Leslie Anne. Pottery and Economy In Old Kingdom Egypt. Boston: Brill, 2013.
 • Wilkinson, Toby. Early Dynastic Egypt. London: Routledge, 2001.