எசிமா ஒஃகாசி பாலம்

எசிமா ஒஃகாசி பாலம் (Eshima Ohashi Bridge) சப்பானில் மேட்சூ மற்றும் சகைமினாட்டோ நகரங்களுக்கு இடையே இருக்கும் ஏரியின் மீது கட்டப்பட்டுள்ள பாலம் தான் ஒஹோஹி பாலம் ஆகும். அதில் தினசரி பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கு அச்சம் ஊட்டும் ஒன்றாக உள்ளது. இதற்குக் காரணம் அந்த அளவிற்குப் பாலத்தை மிகவும் விரைந்து ஏறுமுகமாகவும், உயரமாகவும், பின்னர் சரிவாகவும் கட்டியுள்ளனர்.

எசிமா ஒஃகாசி பாலம்
江島大橋
பக்கவாட்டில் இருந்து பார்த்தால் தெரியும்Tஎசிமா ஒஃகாசி பாலம்.
தாண்டுவது நக்kகாவுமி
இடம் சிமானேயும் தொத்தோரியும்
பராமரிப்பு சக்கைமினாத்தோ மேலாண்மை அமைப்பு
மொத்த நீளம் 1.7 km (1.1 mi)
அகலம் 11.3 m (37 அடி)
உயரம் 44.7 m (147 அடி)
அதிகூடிய அகல்வு 250 m (820 அடி)
கட்டுமானம் தொடங்கிய தேதி 1997
கட்டுமானம் முடிந்த தேதி 2004
அமைவு Coordinates: Missing latitude
Invalid arguments have been passed to the {{#coordinates:}} function

உலகின் மிகப்பெரிய பாலங்களில் மூன்றாவது பாலமாக இது கூறப்படுகிறது. இது 1.7கி.மீ நீளம் மற்றும் 11.4மீ அகலம் உடையது. வழக்கமாக பாலங்கள் அனைத்தும் படிப்படிபடியாக அதன் உயரம் அதிகரிக்கும் வகையில் அமைந்திருக்கும். ஆனால் இந்தப்பாலம் அவ்வாறு கட்டப்படாமல் மிகவும் ஏற்றமாகக் கட்டப்பட்டுள்ளது. இது 6.1 சதவீதம் சரிவுடன் கட்டப்பட்டுள்ளது.

இந்தப் பாலத்தில் கீழே கப்பல்கள் தடையின்றி செல்வதற்கு வசதியாக இருப்பதற்காக கட்டப்பட்டுள்ளது. மணிக்கு அதிகபட்சமாக 40கி.மீ வேகத்தில் மட்டுமே வாகனங்கள் செல்ல வேண்டும். தற்போது இந்தப்பாலம் ஜப்பானின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக மாறிவிட்டது.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=எசிமா_ஒஃகாசி_பாலம்&oldid=3282214" இலிருந்து மீள்விக்கப்பட்டது