எச்சம்பட்டி

கிருஷ்ணகிரி மாவட்ட சிற்றூர்

எச்சம்பட்டி அல்லது எச்சனஹள்ளி (Echanahalli) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், ராயக்கோட்டை ஊராட்சியில் அமைந்துள்ள ஒரு கிராமமாகும். இக்கிராமம் இராயகோட்டை, தர்மபுரி சாலையில் உள்ளது. இக்கிராமம் வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதிக்கும், கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. எச்சம்பட்டில் தமிழ், கன்னடம், தெலுங்கு என பலதரப்பட்ட மொழி பேசும் மக்கள் வாழ்கின்றனர். இங்கு உள்ள மக்களுக்கு விவசாயம் , புளி மண்டி வணிகம் போன்றவை முதன்மை தொழிலாக உள்ளது.

எச்சம்பட்டி
எச்சனள்ளி

எச்சனஹள்ளி
சிற்றூர்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருஷ்ணகிரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்635116
ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி, எச்சம்பட்டி

அமைவிடம் தொகு

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான கிருஷ்ணகிரியிலிருந்து 35 கிலோமீட்டர் தொலைவிலும், தேன்கனிக்கோட்டையிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.

மக்கள் வகைப்பாடு தொகு

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் மொத்த வீடுகள் 64, மொத்த மக்கள் தொகை 283, இதில் 146 ஆண்களும், 137 பெண்களும் அடங்குவர்.[1]

பள்ளி தொகு

இக்கிராமத்தின் நுழைவில் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி அம்மைத்துள்ளது. இப்பள்ளி 1981 இல் தொடக்கபள்ளியாக துவங்கப்பட்டு, 2009 இல் நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்தபட்டுள்ளது. இப்பள்ளியில் எச்சம்பட்டி, குரும்பட்டி, எதிர்கோட்டை, ஜோடு ஆலமரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த குழந்தைகள் பயின்று வருகின்றனர்.

குறிப்புகள் தொகு

  1. "Echanahalli Village in Denkanikottai (Krishnagiri) Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2021-11-29.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எச்சம்பட்டி&oldid=3599666" இலிருந்து மீள்விக்கப்பட்டது