எச். வி. அண்டே
எச். வி. அண்டே (H. V. Hande, பிறப்பு: நவம்பர் 28, 1927) ஒரு தமிழக மருத்துவரும், அரசியல்வாதியும் ஆவார். 1967, 1971 ஆகிய ஆண்டுகளில் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் பூங்கா நகர் தொகுதியிலிருந்து சுதந்திராக் கட்சி வேட்பாளராக சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2] இவரது மூதாதையர்கள் மங்களூரில் இருந்த காரணத்தால் மங்களூரார் என்று அழைக்கப்படுகிறார்.[3]
எச். வி. அண்டே H. V. Hande | |
---|---|
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் | |
பதவியில் 1988–1989 | |
முன்னையவர் | நிலை நிறுவப்பட்டது |
பின்னவர் | இராம. வீரப்பன் மற்றும் இரா. நெடுஞ்செழியன் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | நவம்பர் 28, 1927 கோயம்புத்தூர், தமிழ்நாடு |
வேலை | மருத்துவர், அரசியல்வாதி |
1980ல் நடந்த தேர்தலில் அண்ணா நகர் தொகுதியில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராக 699 வாக்குகள் வித்தியாசத்தில் கருணாநிதியிடம் தோற்றார். மறைந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் அமைச்சரவையில் 10 ஆண்டுகள் சுகாதாரத்துறை அமைச்சராக பணியாற்றியுள்ளார். அண்ணாநகர் தொகுதியில் 2006 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டு 9000 வாக்குகளைப் பெற்றார். 2004-ல் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய கவுன்சில் உறுப்பினர் ஆனார்.[4]
இவர் ஓர் எழுத்தாளரும் ஆவார். இராமாயணம், டாக்டர் அம்பேத்கர் மற்றும் பிற தலைப்புகளில் பல புத்தகங்களை எழுதியுள்ளார். 1984 ஆம் ஆண்டு சென்னையிலுள்ள செனாய் நகரில் அவர் அண்டே மருத்துவமனையைத் திறந்தார்.[5]
வகித்த பதவிகள்
தொகு- தமிழக அமைச்சரவையில் சுகாதார அமைச்சர் (1977–87)[6]
மேற்கோள்கள்
தொகு- ↑ "1967 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2012-03-20. பார்க்கப்பட்ட நாள் 2017-06-25.
- ↑ "1971 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-06. பார்க்கப்பட்ட நாள் 2017-06-25.
- ↑ "Off the record - A Mangalorean in Chennai". Deccan Herald. 11 November 2012. http://www.deccanherald.com/content/291538/off-record.html. பார்த்த நாள்: 4-07-2013.
- ↑ "MK stir not sincere, says Hande". The Hindu. 9 November 2004 இம் மூலத்தில் இருந்து 13 ஜனவரி 2005 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20050113235211/http://www.hindu.com/2004/11/09/stories/2004110914490400.htm. பார்த்த நாள்: 4 July 2013.
- ↑ "Hande Hospital". Medicards.in. Archived from the original on 2013-07-04. பார்க்கப்பட்ட நாள் 4-07-2013.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ V, Narayana Murthy (6 March 2012). "MGR was instrumental in eradicating polio: Hande". Indian Express. http://newindianexpress.com/states/tamil_nadu/article341395.ece?service=print. பார்த்த நாள்: 4-07-2013.