எஞ்சாய் எஞ்சாமி
எஞ்சாய் எஞ்சாமி (Enjoy Enjaami) 2021இல் தமிழ் மொழியில் வெளியான பாடல் ஆகும். இதனை பின்னணிப் பாடகர்களான தீ மற்றும் அறிவு ஆகியோர் பாடியுள்ளனர். இசையமைப்பாளரான சந்தோஷ் நாராயணனின் மாஜா எனும் சுயாதீன இசை தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தாயாரித்த இந்த பாடலை ஏ. ஆர். ரகுமான் வெளியிட்டார். [1] இந்த பாடல் 7 மார்ச் 2021 இல் தனிப்பாடலாக வெளியிடப்பட்டது மற்றும் இதன் நிகழ்பட இசை யூடியூப் மூலம் 10 மார்ச் 2021 இல் வெளியானது.[2] இந்த நிகழ்படம் 3.7 மில்லியனுக்கும் அதிகமான லைக்குகளையும் 195 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளையும் பெற்றுள்ளது (மே 2021 நிலவரப்படி), இச்சாதனை படைத்த முதல் தமிழ் சுயாதீன தனிப்பாடல் இதுவாகும். [3] [4]
"எஞ்சாய் எஞ்சாமி" | |
---|---|
பாட்டு | |
பதிவு | 2021 |
வகை | ஒப்பாரிப் பாடல் (Indian folk music), பரப்பிசை, ஹிப் ஹாப் |
நீளம் | 4:38 |
சிட்டை | maajja |
பாடலாசிரியர் | அறிவு (பாடகர்) |
மொழி | தமிழ் |
தயாரிப்பாளர் | சந்தோஷ் நாராயணன் |
பின்னணி
தொகுபாடலாசிரியர் அறிவுவின் கூற்றுப்படி, இந்த பாடல் மூதாதையர்களைக் கொண்டாடும் விதமாக எழுதப்பட்டது. [5]
அரசியல் நாட்டுப்புற இசைக்குழுவான தி காஸ்ட்லெஸ் கலெக்டிவிற்காக பாடல்களை எழுதி வரும் அறிவு பின்வருமாறுகூறினார்: "இந்தப் பாடல் கோபத்தின் வெளிப்பாடு, இது மக்கள் பரவலாக கேட்பவை அல்ல. இது வணிகத்திற்கான இடம் அல்ல என்பதை நாங்கள் அறிந்துள்ளோம்; இது மக்களுக்கான குரல். " இருப்பினும், இந்த பாடல் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்றும், ஆழமான அரசியல் இருக்க வேண்டும் என்றும் விரும்பினேன்.
நாயி நரி பூனைக்குந்தான் இந்த ஏரி கொளம் கூட சொந்தமடி
(உலகம் அனைத்து உயிரினங்களுக்கும் சொந்தமானது) [6] [5] பா. ரஞ்சித்தின் இசைக்குழுவான காஸ்ட்லெஸ் கலெக்டிவின் படைப்புகளால் இந்த பாடல் ஈர்க்கப்பட்டுள்ளது என்றும் குழு கூறியது. [7]
இந்தப் பாடல், இதன் பாடலாசிரியரான அறிவுவின் பாட்டி வள்ளியம்மலின் கதையாகும். அவர் இவரை 'என்ஜாமி' (என் இறைவன்) என்று அழைப்பார். காலனித்துவ காலத்தில் இலங்கைக்கு தமிழ் மக்கள் குடியேறுவது குறித்து அவரது பாட்டி சொன்ன கதை தான் இந்தப் பாடல். குடிமைப்பட்ட கால இந்திய காலத்தில், வறுமையில் வாடும் மக்கள்தொகை கொண்ட நாடாக இருந்த சமயத்தில், மலிவான உழைப்புக்கான சந்தையாகவும் இருந்தது. தேயிலை, காபி மற்றும் ரப்பர் தோட்டங்களில் வேலை செய்வதற்காக 19 ஆம் நூற்றாண்டில் தமிழ் மக்களின் குழுக்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்டனர். இவரின் பாட்டி அவர்களில் ஒருவராக இருந்தார். நிலம், மண் மற்றும் மூதாதையர்களைக் குறிக்கும் வகையில், பூமியுடனான மனிதகுலத்தின் உறவைக் குறிக்கும் அறிவுவின் வரிகளுக்கு இது ஊக்கமளித்தன. இந்தப் பாடலின் முடிவில் இவரது பாட்டி வள்ளியம்மாள் இடம் பெற்றுள்ளார். [8]
இந்த பாடல் தமிழக தோட்டத் தொழிலாளர்களுக்கான அஞ்சலி என டெக்கான் ஹெரால்டின் வி விவேக் கூறினார். [9]
வரவேற்பு
தொகுவிமர்சன ரீதியில்
தொகுஇந்தபாடலின் வரிகள், அது காட்சி உருவாக்கப்பட்ட விதம், இசை போன்றவற்றிற்காக பெரும்பான்மையாக நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. பாடலைப் புகழ்ந்துரைக்கும் பல சுட்டன்கள் சமூக ஊடகங்கள் மூலம் பகிரப்பப்பட்டன. [10] தனுஷ், சாய் பல்லவி, சித்தார்த், விக்னேஷ் சிவன், துல்கர் சல்மான், [11] [12] லோகேஷ் கனகராஜ், பா. ரஞ்சித், செல்வராகவன் [13] மேலும் இந்தியத் துடுப்பாட்ட வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் ஆகியோர் உட்பட பல பிரபலங்கள் இந்தப் பாடலை பாராட்டினர். [14] இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், பாடலுக்கு மக்கள் ஆதரவு தந்ததற்காக மகிழ்ச்சி தெரிவித்தார்.[15]
சாதனைகள்
தொகுஇந்த பாடல் இரண்டு வாரங்களுக்குள் ஸ்பாடிஃபை என்ற இசை தளத்தில் 2 மில்லியனுக்கும் அதிகமான ஸ்ட்ரீம்களைக் கடந்தது. [16] மார்ச் 10, 2021 அன்று வெளியிடப்பட்ட இந்த வீடியோ, ஒரு வார காலத்திற்குள் 20 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்தது. 100 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை (ஏப்ரல் 2021 வரை) கடக்கும் முதல் திரைப்படம் அல்லாத தமிழ் பாடல் இதுவாகும், [17] மற்றும் 1 மில்லியன் லைக்குகள் பெற்ற ஐந்தாவது தமிழ் பாடலாக அமைந்தது. [18]
விளக்கப்படம் (2021) | உச்ச நிலை |
---|---|
ஐக்கிய இராச்சியம் (ஆசிய இசை விளக்கப்படம் முதல் 40) [19] | 5 |
சான்றுகள்
தொகு
- ↑ "Meet Arivu and Dhee, the duo behind the viral protest song Enjoy Enjaami". Hindustan Times (in ஆங்கிலம்). 2021-03-19. பார்க்கப்பட்ட நாள் 2021-04-06.
- ↑ "Santhosh Narayanan, Arivu and Dhee release 'Enjoy Enjaami'". The News Minute (in ஆங்கிலம்). 2021-03-07. பார்க்கப்பட்ட நாள் 2021-03-21.
- ↑ "'Enjoy Enjaami': Tamil song by Dhee, rapper Arivu goes viral; crosses 25 million views on YouTube". The Week (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-03-21.
- ↑ "Enjoy Enjaami: Tamil song by Dhee and rapper Arivu goes viral, celebrates our shared existence with nature". The Indian Express (in ஆங்கிலம்). 2021-03-19. பார்க்கப்பட்ட நாள் 2021-03-21.
- ↑ 5.0 5.1 "The Enjaami Intrigue". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2021-03-14.
- ↑ "Enjoy Enjaami Song Lyrics in Tamil | DHEE | ARIVU | SANTHOSH" (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2021-05-19. பார்க்கப்பட்ட நாள் 2021-05-19.
- ↑ Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
- ↑ Subbaian, Vignesh. "Enjoy Enjaami: Background of the song Enjoy En Jaami". News Bricks (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-03-17.
- ↑ "'Enjoy Enjaami', a tribute to Tamil plantation labour". Deccan Herald (in ஆங்கிலம்). 2021-03-13. பார்க்கப்பட்ட நாள் 2021-03-14.
- ↑ "குக்கூ.. குக்கூ..கம்புளி பூச்சி தங்கச்சி..இணையத்தில் வைரலாகும் என்ஜாய் எஞ்சாமி மீம்ஸ் | enjoy en jaami lyrics in tamil Tamil Memes viral internet– News18 Tamil". tamil.news18.com. Archived from the original on 2021-05-19. பார்க்கப்பட்ட நாள் 2021-03-17.
- ↑ Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
- ↑ "Dulquer praises Dhee and Arivu's 'Enjoy Enjaami', calls it the 'most epic track'". The News Minute (in ஆங்கிலம்). 2021-03-17. பார்க்கப்பட்ட நாள் 2021-03-21.
- ↑ "Selvaraghavan shares his love for Arivu and Dhee's Enjoy Enjaami". The New Indian Express (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-04-06.
- ↑ "Enjoy Enjaami: Tamil song by Dhee and rapper Arivu goes viral, celebrates our shared existence with nature". The Indian Express (in ஆங்கிலம்). 2021-03-24. பார்க்கப்பட்ட நாள் 2021-04-06.
- ↑ "Santhosh Narayanan: The unconditional support for Enjoy Enjaami is very touching | Cinemaexpress". m.cinemaexpress.com. பார்க்கப்பட்ட நாள் 2021-03-17.
- ↑ "Arivu and Dhee's 'Enjoy Enjaami' crosses 2 million streams on Spotify". The News Minute (in ஆங்கிலம்). 2021-03-19. பார்க்கப்பட்ட நாள் 2021-04-06.
- ↑ "Arivu's 'Enjoy Enjaami' Is a Journey in Discovering Roots and Celebrating Equality". The Wire. பார்க்கப்பட்ட நாள் 2021-04-04.
- ↑ "Santhosh Narayanan: The unconditional support for Enjoy Enjaami is very touching | Cinemaexpress". m.cinemaexpress.com. பார்க்கப்பட்ட நாள் 2021-03-17."Santhosh Narayanan: The unconditional support for Enjoy Enjaami is very touching | Cinemaexpress". m.cinemaexpress.com. Retrieved 2021-03-17.
- ↑ "Asian Music Chart Top 40: 26 March 2021". Official Charts Company (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 4 April 2021.
வெளி இணைப்புகள்
தொகு- யூடியூபில் "Enjoy Enjaami"
- Spotify இல் "எஞாய் எஞ்சாமி