எடிசுட்டன் கலங்கரை விளக்கம்
எடிசுட்டன் கலங்கரை விளக்கம் (Eddystone Lighthouse) ஐக்கிய இராச்சியத்தின் இங்கிலாந்தில் உள்ள ரேம் நிலமுனைக்குத் தெற்கே 9 மைல்கள் (14 கிமீ) தொலைவில் ஆபத்தான எடிசுட்டோன் பாறைகள் மீது அமைந்துள்ள ஒரு கலங்கரை விளக்கம். ரேம் நிலமுனை கோர்ண்வாலிலும், பாறைகள் டெவொனிலும் உள்ளன.[3] இப்போதுள்ள கலங்கரை விளக்கம் இந்த இடத்தில் கட்டப்பட்ட நான்காவது அமைப்பு ஆகும். முதலாவதும் இரண்டாவதும் புயலாலும், தீயாலும் அழிந்துவிட்டன. சுமீட்டன்ன் கோபுரம் எனவும் அறியப்பட்ட மூன்றாவது கலங்கரை விளக்கம், கலங்கரை விளக்கங்களின் வடிவமைப்பில் அதன் செல்வாக்குக் காரணமாகவும், காங்கிறீட்டுக் கட்டிடங்களின் வளர்ச்சியில் அதன் முக்கியத்துவம் காரணமாகவும் பரவலாக அறியப்பட்டது. இதன் மேற்பகுதி ஒரு நினைவுச்சின்னமாகப் பிளைமவுத்தில் திரும்பக் கட்டப்பட்டுள்ளது.[4] கோர்டுவான் கலங்கரை விளக்கமே முதல் கரைக்கு அப்பாலான கலங்கரை விளக்கம் எனினும், 1699ல் இவ்விடத்தில் கட்டி முடிக்கப்பட்ட முதல் கலங்கரை விளக்கமே முதல் திறந்த பெருங்கடல் கலங்கரை விளக்கம் ஆகும்.[5]
நான்காவது கலங்கரை விளக்கத்தின் தோற்றம்.
(மூன்றாம் கலங்கரை விளக்கத்தின் எஞ்சிய பகுதி பின்னணியில் தெரிகிறது.) | |
அமைவிடம் | கரைக்கு அப்பாலுள்ள ரேம் நிலமுனை டெவொன் இங்கிலாந்து |
---|---|
ஆள்கூற்று | 50°10′47.99″N 04°15′53.99″W / 50.1799972°N 4.2649972°W |
கட்டப்பட்டது | 1698 (முதல்) 1709 (2வது) 1759 (3வது) |
ஒளியூட்டப்பட்டது | 1882 (இப்போதுள்ளது) |
தானியக்கம் | 1982 |
முடக்கம் | 1703 (முதல்) 1755 (2வது) 1877 (3வது) |
கட்டுமானம் | மரக் கோபுரம் (முதலும் 2வதும்) கருங்கல் கோபுரம் (3வதும் தற்போதையதும்) |
கோபுர வடிவம் | எண்கோணப் பட்டைக் கோபுரம் (முதல்) பன்னிருகோணப் பட்டைக் கோபுரம் (2வது) கூம்பு உருளைக் கோபுரம் (3வது) விளக்குடனும், உலங்குவனூர்தித் தளத்துடனும் கூடிய கூம்பு உருளைக் கோபுரம் (தற்போதைய) |
உயரம் | 18 மீட்டர்s (59 அடி) (முதல்) 21 மீட்டர்s (69 அடி) (2வது) 22 மீட்டர்s (72 அடி) (3வது) 49 மீட்டர்s (161 அடி) (தற்போதைய) |
குவிய உயரம் | 41 மீட்டர்s (135 அடி) |
தற்போதைய வில்லை | 4வது order 250 மிமீ சுழல் |
ஒளி மூலம் | சூரிய ஆற்றல் |
செறிவு | 26,200 கண்டேலா |
வீச்சு | 17 கடல் மைல்கள் (31 km) |
சிறப்பியல்புகள் | Q (2) W 10s. Iso R 10s. at 28 மீட்டர்s (92 அடி) குவிய உயரம் |
மூடுபனிச் சைகை | ஒவ்வொரு 30செ. க்கு ஒரு வெடிப்பு |
Admiralty எண் | A0098 |
NGA எண் | 0132 |
ARLHS எண் | ENG 039 |
மேலாண்மை முகவர் | டிரினிட்டி ஹவுஸ் [1] [2] |
முதல் கலங்கரை விளக்கம்
தொகுஇது வின்சுட்டன்ட்லியின் கலங்கரை விளக்கம் எனவும் அழைக்கப்படும் இது என்றி வின்சுட்டன்ட்லியினால் கட்டப்பட்ட எண்கோண மரக் கட்டமைப்பு ஆகும். இது பதிவில் உள்ள முதல் கரைக்கு அப்பாலான கலங்கரை விளக்கமாகவும் உள்ளது.[5] 1696ல் கட்டிடவேலைகள் தொடங்கின. 14 நவம்பர் 1698ல் ஒளியேற்றப்பட்டது. இது கட்டப்படும்போது, அனுமதி பெற்ற தனியார் போர்க்கப்பலில் வந்தோர் வின்சுட்டன்ட்லியைப் பிடித்ததுடன் அதுவரை செய்து முடித்திருந்த வேலைகளையும் அழித்தனர். பதினாறாம் லூயி தலையிட்டு அவரை விடுவிக்க உத்தரவிட்டார்.[4]
இக்கலங்கரை விளக்கம் அதன் முதல் மாரிக்குத் தாக்குப் பிடித்தது. ஆனால், திருத்தம் செய்யவேண்டியிருந்தது. இது பின்னர் 12 பக்கங்களைக் கொண்டதும், கற்பலகைகளால் மூடப்பட்டதுமான அமைப்பாக மாற்றம் பெற்றது. இது 1703ம் ஆண்டின் பெரும் புயல்வரை நின்றுபிடித்தது. 27 நவம்பருடன் எவ்வித தடயமும் இன்றி அழிந்துவிட்டது.
அந்நேரம் திருத்த வேலைகளில் ஈடுபட்டிருந்த வின்சுட்டன்ட்லியும் கலங்கரை விளக்கத்திலேயே இருந்தார். அவரதும், அவருடன் இருந்த மேலும் ஐவரினதும் தடயங்களும் கிடைக்கவில்லை.[6][7]
இதன் கட்டுமானச் செலவும் ஐந்து ஆண்டுகளுக்கான பேணற் செலவும் மொத்தம் £7,814 7s.6d, இக்காலப் பகுதியில் கப்பல்களிடம் தொன்னுக்கு ஒரு பென்னி வீதம் அறவிட்ட மொத்ததொகை £4,721 19s.3d.
இரண்டாம் கலங்கரை விளக்கம்
தொகுமுதல் கலங்கரை விளக்கம் அழிந்துபோன பின்னர் கப்பித்தான் ஜான் லோவெட்டு பாறையை குத்தகைக்கு எடுத்தார்.[8][note 1] நாடாளுமன்றச் சட்டம் ஒன்றின் மூலம் அவ்வழியாகச் செல்லும் கப்பல்களிடமிருந்து தொன்னுக்கு ஒரு பென்னி கட்டணம் அறவிடுவதற்கு அனுமதியும் கிடைத்தது. அவர் புதிய கலங்கரை விளக்கம் ஒன்றை அமைப்பதற்கு ஜான் ருடியார்ட் என்பவரை அமர்த்தினார். இவர் செங்கற்களாலும், கல்லாலும் கட்டப்பட்ட உட்பகுதியையும், கூம்பு வடிவ மரத்தாலான வெளிப்புறத்தையும் கொண்ட கலங்கரை விளக்கம் கட்டப்பட்டது. 1708ல் தர்காலிக விளக்கு ஒன்று பொருத்தப்பட்டது. 1709ல் வேலைகள் நிறைவடைந்தன. இது 50 ஆண்டுகள் நிலைத்திருந்தது.[4]
1755 டிசம்பர் 2ம் தேதி விளக்கின் மேற்பகுதியில் தீப்பிடித்தது. இது விள்ள்க்கு ஏற்றப் பயன்படும் மெழுகுவர்த்தி ஒன்றில் இருந்து தெறித்த பொறியினால் ஏற்பட்டிருக்கக்கூடும் எனக் கருதப்படுகிறது. அங்கிருந்த மூன்று காவலர்கள் நீரூற்றித் தீயை அணைக்க முயன்றனர் ஆனால் அவர்களது படகு பாறையில் மேதியது. அவர்கள் பின்னர் மீட்கப்பட்டனர். ஆனால், கலங்கரை விளக்கம் முற்றிலுமாக எரிந்துவிட்டது. அந்நேரம் அங்கிருந்த 94 வயதான காவலர் என்றி ஹோல், விளக்குக்கு மேல் அமைந்த கூரையிலிருந்து உருகிய ஈய ஆவியைச் சுவாசித்ததால் இறந்துபோனார்.[4] இந்நிகழ்வு தொடர்பான அறிக்கை ஒன்றை மருத்துவர் எட்வார்டு இசுப்பிரி சமர்ப்பித்திருந்தார். இந்நிகழ்வுடன் தொடர்புடைய ஈயத்தின் துண்டு ஒன்று இசுக்காட்லாந்து தேசிய அருங்காட்சியகத்தில் உள்ளது.[9]
மூன்றாம் கலங்கரை விளக்கம்
தொகுசிமீட்டனின் கலங்கரை விளக்கம் எனவும் அறியப்படும் மூன்றாம் கலங்கரை விளக்கம் இவ்வாறான அமைப்புக்களில் ஒரு முக்கிய முன்னேற்றம் ஆகும். அரசக் கழகத்தினால் பரிந்துரைக்கப்பட்டபடி குடிசார் பொறியாளரான ஜான் சிமீட்டன் இக்கலங்கரை விளக்கத்தை ஓக் மரத்தில் வடிவில் கருங்கற் குற்றிகளைப் பயன்படுத்தி அமைத்தார். நீரினால் இறுக்கமடையும் ஒரு வகைக் காங்கிறீட்டான நீரியல் சுண்ணாம்பை முதன் முதலாகப் பயன்படுத்தியதுடன், கருங்கற்களைப் பிணைப்பதற்கு புறாவால் பொருத்தையும் மார்பிள் முளைகளையும் பயன்படுத்தினார். கட்டுமானம் 1755ல் தொடங்கியது. 16 அக்டோபர் 1759ல் முதன் முதல் ஒளியேற்றப்பட்டது. சிமீட்டனின் கலங்கரை விளக்கம் 59 அடி (18 மீ) உயரம் கொண்டது. அடியில் இதன் விட்டம் 26 அடிகளும் (8 மீ), மேற்பகுதியில் 17 அடிகளும் (5மீ) ஆகும்.
1841ல் பொறியாளர் என்றி நோரிசு என்பவரின் வழிகாட்டலில் பெரிய திருத்த வேலைகள் செய்யப்பட்டன. கற்களிடையேயான இடைவெளிகளை நிரப்புதல், கலங்கரை விளக்கத்தின் அத்திவாரத்துக்கு அருகில் பாறையில் இருந்த பெரிய துவாரம் நிரப்புதல் ஆகிய வேலைகள் மேற்கொள்ளப்பட்டன. 1877 வரை இது நிலைத்து இருந்தது. பாறையின் கீழ் ஏற்பட்ட அரிப்பினால், அலைகள் கலங்கரை விளக்கத்தைத் தாக்கும்போது அது ஆடத்தொடங்கியது. இது பின்னர் அகற்றப்பட்டு, பிளைமவுத் ஹோ என்னும் இடத்தில் ஒரு நினைவுச் சின்னமாக மீளக் கட்டப்பட்டது. வில்லியம் டிரெகார்த்தென் டக்லசு என்பார் இந்த வேலைகளை மேற்பார்வை செய்தார். பிளைமவுத் ஹோவில் மீளக் கட்டப்பட்ட சிமீட்டன் கோபுரம் இப்போது ஒரு சுற்றுலாத் தலமாக உள்ளது.
சிமீட்டன் கலங்கரை விளக்கத்தின் அத்திவாரமும், அடிப்பகுதியும் இன்னும் புதிய கலங்கரை விளக்கத்துக்கு அருகில் உள்ள பாறையில் காணப்படுகிறது. அத்திவாரத்தை அகற்றுவது கடினமாக இருந்ததால், அது இருந்த இடத்திலேயே விடப்பட்டது.
நான்காம் கலங்கரை விளக்கம்
தொகுடக்லசின் கலங்கரை விளக்கம் எனவும் அறியப்படும் தற்போதுள்ள நான்காவது கலங்கரை விளக்கம், சுமீட்டனின் தொழில்நுட்பத்தில் ராபர்ட்டு இசுட்டீவன்சன் செய்த மேம்பாடுகளைப் பயன்படுத்தி கேம்சு டக்ளசு என்பவரால் வடிவமைக்கப்பட்டது. இதன் விளக்கு 1882ல் ஏற்றப்பட்டது. இன்னும் இது பயன்பாட்டில் உள்ளது. இப்போது, பராமரிப்பு ஆளணிகள் அனுகுவதற்காக இதன் உச்சியில் ஒரு உலங்குவானூர்தித் தளம் அமைக்கப்பட்டுள்ளது.[10]
இது 49 மீட்டர் உயரமானது. இதன் வெண்ணிற ஒளி ஒவ்வொரு 10 செக்கன்களுக்கு இரு முறை எரியும். ஒளி 22 கடல்மைல் () தொலைவுக்குத் தெரியக்கூடியது.
குறிப்புகள்
தொகு- ↑ Later Colonel John Lovett (c. 1660–1710) of Liscombe Park Buckinghamshire and Corfe, (son and heir of former merchant in Turkey, Christopher Lovett, lord mayor of Dublin 1676–1677) and uncle of noted architect Edward Lovett Pearce 1699–1733.
மேற்கோள்கள்
தொகு- ↑ Eddystone பரணிடப்பட்டது 2018-03-15 at the வந்தவழி இயந்திரம் The Lighthouse Directory. University of North Carolina at Chapel Hill. Retrieved April 30, 2016
- ↑ Eddystone Lighthouse Trinity House. Retrieved April 30, 2016
- ↑ Ordnance Survey mapping; the rocks form part of the unitary district of the City of Plymouth, in the ceremonial county of Devon
- ↑ 4.0 4.1 4.2 4.3 "Eddystone history". Trinity House. Archived from the original on 8 நவம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 27 November 2014.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ 5.0 5.1 "Lighthouse". Encyclopædia Britannica. பார்க்கப்பட்ட நாள் 5 July 2016.
- ↑ "Eddystone Lighthouse History". Eddystone Tatler Ltd. Archived from the original on 2 May 2006. பார்க்கப்பட்ட நாள் 7 September 2006.
- ↑ "The Great Storm of 1703". பிபிசி. Archived from the original on 30 August 2006. பார்க்கப்பட்ட நாள் 7 September 2006.
- ↑ Whyman, Susan E. (1999). Sociability and Power in Late-Stuart England: The Cultural Worlds of the ... Oxford University Press. p. 130. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780199250233.
- ↑ Palmer, Mike (2005). Eddystone: the Finger of Light (2nd ed.). Woodbridge, Suffolk: Seafarer Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-9547062-0-X.
- ↑ "Eddystone Lighthouse". Trinity House. Archived from the original on 9 செப்டம்பர் 2006. பார்க்கப்பட்ட நாள் 30 December 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)