எடுவின் ஆல்பிரெடு ஓல்ம்சு

எடுவின் ஆல்பிரெடு ஓல்ம்சு (Edwin Alfred Holmes) (1839–1919) ஓர் ஆங்கிலேயப் பயில்நிலை வானியலாளர் ஆவார். இவர் 17பி/ஓல்ம்சு வால்வெள்ளியைக் கண்டுபிடித்தமைக்காகப் பெயர்பெற்றவர்.[1][2][3][4]

பயில்நிலை வானியலாளர் தொகு

இவர் 1839 இல் யார்க்சயரில் உள்ள செப்பீல்டில் பிறந்தார். பிறகு இலண்டனுக்கு இவர் இடம்பெயர்ந்தர். இங்கு கண்ணாடிக் குவளை விற்பனையாளராகப் பணிபுரிந்தார்.[1] வடக்கு இலண்டனில் உள்ள ஆர்ன்சே இரைசில் வாழ்ந்துவந்த போது, இவர் தானே செய்த 12 அங்குல பொருள்வில்லை ஒளித்தெறிப்புத் தொலைநோக்கி வழியாக வானியல் நோக்கீடுகளை மேற்கொண்டார்.[5]

ஓல்ம்சு பிரித்தானிய வானியல் கழகத்துக்கும் ஆங்கிலேய இயக்கவியலும் அறிவியல் உலகமும் எனும் இதழுக்கும் தொடர்ந்து கட்டுரைகளை அளித்துவந்தார். ஆங்கிலேய இயக்கவியல் இதழுக்கு பயில்நிலை வானியலாளர்களின் கருத்துரைகளைத் திறனாய்வு செய்து இவர் எழுதிய கடிதங்கள் மிகவும் பாரட்டப்பட்டன. சில வேளைகளில் இவை கருத்து முரண்பாடுகளுக்கும் உள்ளாகின. குறிப்பாக இவர் ஒரே விலையுள்ள ஒளிவிலகல் வகைத் தொலைநோக்கிகளை விட ஒளித்தெறிப்புவகத் தொலைநோக்கிகளையே பயன்படுத்தவேண்டும் என வாதிட்டார்.[1]

17பி/ஓல்ம்சு வால்வெள்ளி கண்டுபிடிப்பு தொகு

எடுவின் ஓல்ம்சு 17பி/ஓல்ம்சு எனும் பருவமுறை அலைவு வால்வெள்ளியை 1892 நவம்பர் 6 இல் கண்டுபிடித்தார். இக்கண்டுபிடிப்பு கிரீன்விச் அரசு வன்காணகத்தால் சில நாட்களிலேயே உறுதிப்படுத்தப்பட்டது.[1]

எதிர்பாராத வண்ணம் உடனடியாக பொலிவுற்ற இந்த வால்வெள்ளியை, வானில் ஆந்திரொமேடா பால்வெளிக்கு அருகாமையில் கண்டார்.[6][7] இந்த வால்வெள்ளி மூன்று வாரங்களுக்கு வெற்றுக் கண்ணுக்கே புலப்பட்டுப் பின் மறைந்தது. இது 75 நாட்களுக்குப் பின்னர் மீண்டும் வெற்றுக் கண்ணுக்குப் புலப்படும் வகையில் பொலிவடைந்தது.

ஒல்ம்சு, 1893 ஆம் ஆண்டில் பசிபிக் வானியல் கழகத்தின் தோனோகோ வால்வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றார்.[8] இவர் வேல்சு வானியல் கழகத்தில் தகைசால் உறுப்பினருக்கு இணையான இணை உறுப்பினராகப் பணியமர்த்தப்பட்டார்.[9]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 Shears, Jeremy (2015). "The Controversial Pen of Edwin Holmes". Journal of the British Astronomical Association (London, England: British Astronomical Association) 125 (5): 269–278. Bibcode: 2015JBAA..125..269S. 
  2. Kinder, Anthony J. (2015). "Edwin Alfred Holmes: His Life and Writings". The Antiquarian Astronomer (Society for the History of Astronomy) 9: 30–44. Bibcode: 2015AntAs...9...32K. 
  3. "Edwin Holmes". Journal of the British Astronomical Association (இலண்டன்: British Astronomical Association) 29: 84–85. 1919. 
  4. Arthur Butler Phillips Mee (1919). "Edwin Holmes–An Appreciation". Journal of the British Astronomical Association (இலண்டன்: British Astronomical Association) 29: 113. http://articles.adsabs.harvard.edu/full/seri/JBAA./0029//0000113.000.html. 
  5. Holmes, Edwin (1904). "A Telescope House for about Three Pounds". Journal of the British Astronomical Association (இலண்டன்: British Astronomical Association) 14 (7): 283–285. Bibcode: 1904JBAA...14..283H. http://articles.adsabs.harvard.edu//full/1904JBAA...14..278./0000283.000.html. 
  6. Holmes, Edwin (1892). "Discovery of a New Comet in Andromeda". The Observatory 15: 441–443. Bibcode: 1892Obs....15..441H. 
  7. "Meeting of the Royal Astronomical Society, Friday, November 11, 1892". The Observatory 15: 417–424. 1892. Bibcode: 1892Obs....15..417.. 
  8. Edward S. Holden; Schaeberle, John Martin; Burckhalter, Charles (1893). "(Twelfth) Award of the Donohoe Comet-Medal". Publications of the Astronomical Society of the Pacific (Astronomical Society of the Pacific) 5 (28): 42. doi:10.1086/120725. Bibcode: 1893PASP....5R..42.. 
  9. "List Of Members, Jan., 1905.". Cambrian Natural Observer (Cardiff, Wales: Astronomical Society of Wales) 7: 26–30. 1905. http://www.jonesbryn.plus.com/wastronhist/astrosocs/listmembsasw.html. பார்த்த நாள்: May 2015. 

வெளி இணைப்புகள் தொகு