எட்கர் துட்ரா சனோட்டோ
எட்கர் துட்ரா சனோட்டோ (Edgar Dutra Zanotto) பிரேசில் நாட்டைச் சேர்ந்த ஒரு பொருளியல் பொறியாளராவார். சாவோ பாவுலோ மாநிலத்தின் சாவோ கார்லோசு நகராட்சியிலுள்ள பெடரல் பல்கலைக்கழகத்தில் இவர் பேராசிரியராகப் பணிபுரிகிறார். இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு கண்ணாடி தொடர்பான பாடங்களை கற்பிக்கிறார். கண்ணாடித் தன்மை பொருள்கள் ஆய்வகத்தின் தலைவராகவும் இவர் உள்ளார்.[1] 2010 ஆம் ஆண்டு உலக அறிவியல் அகாதமியின் பரிசு இவருக்கு கிடைத்துள்ளது.[2]
படிகமயமாக்கல் இயக்கவியல் மற்றும் கண்ணாடிகள் மற்றும் கண்ணாடி- பீங்கான்களின் பண்புகள் குறித்த அடிப்படை மற்றும் பயன்பாட்டு ஆராய்ச்சி உள்ளிட்டவை எட்கரின் ஆய்வுகளாகும். இப்பாடப் பொருள்களின் மீதான கடுமையான சோதனைகள், கண்ணாடிகளுக்கான அணுக்கரு மற்றும் வளர்ச்சி மாதிரிகள் மேம்பாடு அல்லது வளர்ச்சி, அணுக்கருவில் திரவ கட்டப் பிரிப்பின் விளைவுகள், மேற்பரப்பு படிகமயமாக்கல் இயக்கவியல், ஒட்டுமொத்த படிகமயமாக்கல், கண்ணாடி நிலைத்தன்மை, கண்ணாடி உருவாக்கும் திறன், மூலக்கூறு அமைப்பு மற்றும் அணுக்கரு வழிமுறை கண்ணாடி மற்றும் கண்ணாடி பீங்கானின் இயந்திர, வானியல், வெப்ப மற்றும் உயிர் பண்புகளிலும் இவர் ஆர்வம் காட்டுகிறார்.[3][4]
சனோட்டோ சுமார் 300 அசல் மற்றும் மறு ஆய்வு ஆவணங்கள், 21 புத்தக அத்தியாயங்கள், 3 புத்தகங்கள், 5 புத்தக முன்னுரைகள் ஆகியவற்றை வெளியிட்டுள்ளார். 27 காப்புரிமைகளைப் பெற்றுள்ளார். 80 பட்டதாரி, முனைவர் ஆய்வறிக்கைகளுக்கு வழிகாட்டியாக இருந்துள்ளார். மற்றும் பிந்தைய முனைவர் ஆய்வாளர்கள். எட்கர் கடந்த 40 ஆண்டுகளில் 51 அறிவியல் மற்றும் தொழில்நுட்ப விருதுகளைப் பெற்றுள்ளார்.[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ "LaMaV - Research". September 2008. பார்க்கப்பட்ட நாள் July 29, 2010.
- ↑ "Prizes and Awards". The World Academy of Sciences. 2016.
- ↑ Wu, C (May 30, 1998). Analysis shatters cathedral glass myth. 153. p. 341. https://www.sciencenews.org/archive/analysis-shatters-cathedral-glass-myth.(subscription required)
- ↑ Zanotto, E. D. (December 1998). "Do cathedral glasses flow?". American Journal of Physics 66 (5): 392. doi:10.1119/1.19026. Bibcode: 1998AmJPh..66..392Z.
- ↑ "Edgar D. Zanotto". The American Ceramic Society (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-06-12.