எட்டுத் திக்கும் மதயானை

எட்டுத் திக்கும் மதயானை எழுத்தாளர் நாஞ்சில் நாடனால் எழுதப்பட்ட புதினம் ஆகும். பூலிங்கம் என்ற கதாப்பாத்திரத்தின் வழியாக வாழ்வின் போராட்டங்களையும் சிக்கல்களையும் விவரிக்கிறது இப்புதினம். எட்டுப் பக்கமும் மதம் பிடித்த யானை நின்றால் எப்படியிருக்கும் வாழ்க்கை? அதைப் போல துன்பங்கள் சூழ்ந்த வாழ்வைப் பேசுகிறது இப்புதினம். இந்நூலை ஆ.மாதவனுக்கும், நீல.பத்மநாபனுக்கும் சமர்ப்பணம் செய்துள்ளார்.

எட்டுத் திக்கும் மதயானை
8thiikum.jpg
நூலாசிரியர்நாஞ்சில் நாடன்
நாடுஇந்தியா
மொழிதமிழ் மொழி
வகைபுதினம்
வெளியீட்டாளர்விஜயா பதிப்பகம்

கதைச் சுருக்கம்தொகு

பூலிங்கமும், செண்பகமும் ஒரே கல்லூரியில் பயிலுகின்றனர். இருவரும் வெவ்வேறு சாதியைச் சார்ந்தவர்கள். கல்லூரியில் ஒரு நாள் பூலிங்கம் செண்பகத்திடம் பேசியதால் பூலிங்கத்தை செண்பகத்தின் அப்பா ஊரில் வைத்து அடித்துவிடுகிறார். அவமானமடைந்த பூலிங்கம் செண்பகம் வீட்டு வைக்கோல் போரைக் தீக் கொளுத்திவிட்டு மும்பை செல்கிறான். அங்கு வயிற்றுப் பசிக்காக மது, கஞ்சா மற்றும் சாராயம் கடத்துகின்றான். சில நாட்கள் சிறையிலும் இருக்கின்றான். பிற மொழிகளையும் கற்றுக் கொள்கின்றான். செண்பகத்திற்கும் பூலிங்கத்திற்கும் தவறான தொடர்பு இருந்திருக்கலாம் என்ற வதந்தியால் செண்பகத்திற்கு திருமணம் நடைபெறாமல் இருக்கிறது. பின்னர் மும்பையில் வேலை பார்க்கும் ஒருவருக்கும் செண்பகத்திற்கும் திருமணம் நடக்கிறது. மும்பையில் செண்பகம் பூலிங்கத்தை தற்செயலாக சந்திக்கின்றான். செண்பகத்தின் கணவனுக்கும் செண்பகத்துக்குமான உறவு நிலை சரியில்லை. கடைசியில் பூலிங்கமும் செண்பகமும் இணைந்து வாழலாம் என முடிவு செய்கின்றனர்.

ஆசிரியர் கூற்றுதொகு

இப்புத்தகத்தின் பின்னட்டையில்,

படைப்பு என்பது உள்ளாடையின் உள்ளறையில் வைத்துப் பாதுகாத்துத் திரியும் ஒன்றல்ல என்பதால் களவடிக் கொள்கிறார் எந்த நாணமும் இன்றி.

பொதுச் சொத்து என்பதாலேயே அது மரியாதை இழந்தும் போனதாகிறது. எனவே அசலைத் தூக்கி அந்தரத்தில் வீசிவிட்டு  
நகலைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். பல்லக்கு, பவள
மணிப்பூண்கள், பரிவட்டம்...
என்றாலும் அலுத்துப்போகவில்லை எழுதுவது. உங்களுக்கும் அலுத்துப் போகாத வரைக்கும் எழுதலாம். அலுப்பின் வாசனையை
எளிதாக முகர்ந்து கொள்பவன்தானே நல்ல வாசகன்.    

எனக் குறிப்பிடுகிறார்.

வெளி இணைப்புகள்தொகு

நாஞ்சில் நாடனின் இணையதளம்