க. உரோ. எட்மண்ட்

இந்திய அரசியல்வாதி
(எட்மண்ட் (அரசியல்வாதி) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

க. உரோ. எட்மண்ட் (G. R. Edmund) என்பவர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். தூத்துக்குடி மாவடம் ஆறுமுகநேரியினைச் சார்ந்த எட்மண்ட், பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியிலும் சென்னை சட்டக் கல்லூரியிலும் முறையே கலை, சட்டப் படிப்புகளில் இளநிலை பட்டம் பெற்றுள்ளார். இவர் 1971ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், திருச்செந்தூர் தொகுதியிலிருந்து திராவிட முன்னேற்ற கழக வேட்பாளராக, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

மேற்கோள்கள் தொகு

  1. "1971 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-06. பார்க்கப்பட்ட நாள் 2017-06-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=க._உரோ._எட்மண்ட்&oldid=3547244" இலிருந்து மீள்விக்கப்பட்டது