எட்வினா மவுண்ட்பேட்டன்

எட்வினா மவுண்ட்பேட்டன்  (Edwina Cynthia Annette Mountbatten, Countess Mountbatten of Burma née Ashley; 28 நவம்பர்  1901 – 21 பிப்பிரவரி  1960) [1]  என்பவர் மவுண்ட்பேட்டன் பிரபுவின் மனைவி ஆவார்.  மவுண்ட்பேட்டன் பிரபு இந்தியாவின் வைசிராயாகப் பதவி வகித்த காலத்தில் எட்வினா வைசிராயினியாக இந்தியாவில் வாழ்ந்து வந்தார்.

எட்வினா மவுண்ட்பேட்டன்

வாழ்க்கைக் குறிப்புகள் தொகு

திருமணம் தொகு

எட்வினாவின் தந்தை  அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும், பெரும் செல்வந்தருமான   வில்ப்ரெட் வில்லியம் ஆஸ்லி ஆவார். இவருடைய மூதாதையர் பிரபுக்கள் வழியினர் ஆவர். எட்வீனா 1920 இல்  லூயி மவுண்ட்பேட்டனைச் சந்தித்தார். இவர்களுடைய திருமணம் 1922 சூலை 18 இல் நடந்தது. திருமணத்தில் 8000 பேர் கலந்து கொண்டார்கள். பல அரசக்  குடும்பங்கள் இத் திருமணத்தில் கலந்து கொண்டன.

இந்தியாவில் தொகு

இந்திய விடுதலை பெற்ற காலகட்டத்திலும், இந்தியா பாக்கிசுத்தான் பிரிவினையின் போதும் எட்வினாவின் பங்களிப்புகள் வரலாற்றில் குறிக்கத்தக்கன. இரண்டாம் உலகப்போர் நிகழ்ந்தபோது, போரினால் பாதிக்கப்பட்டோருக்குத் தம்மால் ஆன  உதவிகளைச்   செய்ய வேண்டும் என எண்ணினார். 1942 இல் செயின்ட் ஜான் ஆம்புலன்ஸ் பிரிகட் மேற்பார்வையாளராக அமர்த்தப்பட்டார். 1945 இல் தி கிழக்கு ஆசியாவில் போர்க் கைதிகளின் மறு வாழ்வு பணிகளுக்கு உதவி செய்தார். 1943 இல் சிபிஈ என்ற விருதும் 1946 இல் ராயல் விக்டோரியன் ஆர்தர் விருதும் இவருக்கு வழங்கப்பட்டது. அமெரிக்கன் செஞ்சிலுவைப் பதக்கமும் இவருக்குக் கிடைத்தது.

மேற்கோள்கள் தொகு

  1. GRO Register of Births: MAR 1902 1a 434 ST GEO HAN SQ = London

வெளியிணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Edwina Mountbatten
என்பதின் ஊடகங்கள் உள்ளன.