எண்கிழமை என்பது கிறித்தவத்தில் ஒரு விழாவுக்குப்பின் வரும் எட்டாம் நாளையோ அல்லது சில பெருவிழாக்களுக்குப்பின் வரும் எட்டு நாட்களையும் கூட்டாகவோ குறிக்க பயன்படுத்தப்படும் பதமாகும்.[1]

கத்தோலிக்க திருச்சபையின் இலத்தீன் வழிபாட்டு முறையில்

தொகு

திருத்தந்தை பன்னிரண்டாம் பயஸ் 23 மார்ச் 1955இல் வெளியிட்ட ஆணையின் படி கிறித்துமசு, உயிர்ப்பு ஞாயிறு மற்றும் பெந்தக்கோஸ்து ஆகிய விழாக்களுக்கு மட்டுமே எண்கிழமை கொண்டாடுவது நடைமுறையாக்கப்பட்டது. மேலும் 1969 நிகழ்ந்த மாற்றத்தில் பெந்தக்கோஸ்து விழா இப்பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது.[2]

உயிர்ப்பு விழாவின் எண்கிழமை ஆண்டவரின் பெருவிழாக்கள் (Solemnities of the Lord) என கொண்டாடப்படுகின்றன.[3] 30 ஏப்ரல் 2000, முதல் இவ்வெண்கிழமையின் இறுதிநாள் இறை இரக்கத்தின் ஞியாயிறாக கொண்டாடப்படுகின்றது.

கிறிஸ்து பிறப்பின் எண்கிழமை பின்வருமாறு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது:

  • கிறித்துமசு ஞாயிற்று கிழமையில் வருமாயின் திருக்குடும்ப விழா 30 டிசம்பரிலும் மற்ற ஆண்டுகளில் கிறிஸ்து பிறப்பின் எண்கிழமையில் வரும் ஞாயிறிலும் கொண்டாடப்படும்.
  • 26 டிசம்பர்: புனிதர் ஸ்தேவான் விழா
  • 27 டிசம்பர்: திருத்தூதர் யோவான் விழா
  • 28 டிசம்பர்: மாசில்லா குழந்தைகள் விழா
  • 29-31 டிசம்பர்: கிறிஸ்து பிறப்பின் எண்கிழமைகள்
  • 1 ஜனவரி, இறைவனின் அன்னையாகிய தூய கன்னி மரியா - விழா[4]

மேற்கோள்கள்

தொகு
  1. Oxford Dictionary of the Christian Church (ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம் 2005 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-280290-3), article Octave
  2. Calendarium Romanum (Libreria Editrice Vaticana 1969)
  3. General Norms for Liturgical Year and Calendar, 24
  4. General Norms for Liturgical Year and Calendar, 35
"https://ta.wikipedia.org/w/index.php?title=எண்கிழமை&oldid=2696267" இலிருந்து மீள்விக்கப்பட்டது