எண்செய்யுள்
எண்செய்யுள் என்பது தமிழில் சிற்றிலக்கியங்கள் என்றும், வடமொழியில் பிரபந்தங்கள் என்றும் வழங்கும் பாட்டியல் வகைகளுள் ஒன்றாகும். பாட்டுடைத் தலைவன் ஒருவனின் ஊரையும் பெயரையும் சிறப்பித்து, பத்து முதல் ஆயிரம் பாடல்கள் வரை அமையப்பெற்றது இச் சிற்றிலக்கியம். இதன் பெயர் இதில் உள்ள பாடல்களின் எண்ணிக்கையைக் குறித்து அமையும்[1]. முத்தொள்ளாயிரம் என்னும் நூலை எடுத்துக் காட்டாகக் கொள்ளலாம். இந்நூல் சேர, சோழ, பாண்டியர்களைப் பாட்டுடைத் தலைவர்களாகக் கொண்டு ஒவ்வொருவர் மீதும் தொள்ளாயிரம் பாடல்கள் அமையப் பாடப்பெற்றது. இதனாலேயே இது முத்தொள்ளாயிரம் (மூன்று தொள்ளாயிரம்) எனப் பெயர் பெற்றது.
ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை கொண்ட பாடலை இறைவன் குடிகொண்டுள்ள அல்லது அரசன் வாழும் ஊரின் பெயரைச் சொல்லிப் புகழ்வது எண்செய்யுள். [2] [3] திருஈங்கோய்மலை எழுபது, திருவொற்றியூர் ஒருபா ஒருபது போன்ற நூல்களை இதற்கு எடுத்துக்காட்டாகக் குறிப்பிடலாம்.
எண்செய்யுள் நூல்கள் சில
தொகுகுறிப்புகள்
தொகு- ↑ இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 848
- ↑ பிரபந்த தீபிகை 15
- ↑ பிரபந்த தீபம்-21
உசாத்துணைகள்
தொகு- நவநீத நடனார், எஸ். கலியாண சுந்தரையரும் எஸ், ஜி. கணபதி ஐயரும் (பதிப்பாசிரியர்கள்), கலித்துறைப் பாட்டியல் என்னும் நவநீதப் பாட்டியல்
- கோபாலையர், தி. வே. (பதிப்பாசிரியர்), வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், திருவையாறு.
- சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), முத்துவீரியம் பரணிடப்பட்டது 2010-07-16 at the வந்தவழி இயந்திரம்