எண்ணிம புறத்தோற்றம் (டிஜிமார்ப்)

அமெரிக்க ஐக்கிய நாட்டின், தேசிய அறிவியல் அமைப்பின் எண்ணிமநூலக முன்முயற்சியின்[1] ஒரு பகுதியான எண்ணிம புறத்தோற்றம் (DigiMorph)( டிஜிமார்ப்) நிறுவப்பட்டது. வாழ்கின்ற மற்றும் அழிந்துபோன முதுகெலும்பிகள் மற்றும் முதுகெலும்பிலிகளின் உள் மற்றும் வெளிப்புற கட்டமைப்பின் இருபரிமாணம் டி மற்றும் முப்பரிமாண காட்சிகளை உருவாக்கிப் பகிர்ந்து கொள்லாம்.[2]

டிஜிமார்ப் நூலகத்திற்கான ஆதார தகவலானது ஆஸ்டினில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் உயர்-தெளிவுத்திறன் கொண்ட ஊடுகதிர் வரியோட்டவழிக் கணித்த குறுவெட்டு வரைவினைப் (எக்ஸ்ரே சி.டி) பயன்படுத்தி உருவாக்கப்படுகிறது. இந்த கருவி ஒரு வழக்கமான மருத்துவத்துறையில் பயன்படுத்தப்படும் வரியோட்டவழிக் கணித்த குறுவெட்டு வரைவியுடன் ஒப்பிடத்தக்கது. ஆனால் இக்கருவி அதிக தெளிவு மற்றும் ஊடுருவக்கூடிய சக்தியுடையது. எலும்பு மற்றும் பாறை போன்ற திடமான பொருட்களின் மென் படல படம் எடுக்கச் சாதனம் ஊடுகதிர் சாதனம் பயன்படுத்தப்படுகிறது. ஒரு விலங்கு/அல்லது பொருளின் முப்பரிமாண மாதிரியை உருவாக்க நூறு முதல் ஆயிரக்கணக்கான துண்டுகள் மென்படங்களாக எடுக்கப்பட்டு அடுக்கி வைக்கப்படும். இதனால் ஆராய்ச்சியாளர்கள் மாதிரியினைச் சேதப்படுத்தாமல் மாதிரியின் உள் அமைப்பினைக் காணலாம்.

தற்போதைய நிலவரப்படி (2021), டிஜிமார்ஃப் நூலகத்தில் கல்வி மற்றும் ஆராய்ச்சி முயற்சிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த இயற்கை வரலாற்று மாதிரிகளின் டெராபைட் படங்கள் உள்ளன. டிஜிமார்ப் நூலக தளம் இப்போது வலை விநியோகத்திற்காக உகந்ததாக, 1000க்கும் மேற்பட்ட மாதிரிகளுக்கு, இயற்கை வரலாற்று அருங்காட்சியகங்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள 300க்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளர்களின் பங்களிப்பினால் செயல்பட்டுவருகிறது.[3]

இதற்கான வரியோட்டவழிக் கணித்த குறுக்குவெட்டு வரைவி ஆஸ்டினில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தின் ஜாக்சன் புவிஅறிவியல் பள்ளியில் நிறுவப்பட்டுள்ளது. இதனை டெக்சாஸ் பல்கலைக்கழகத்தின் உயர்-தெளிவுத்திறன் கொண்ட ஊடுகதிர் வரியோட்டவழிக் கணித்த வசதி (யுடிசிடி) நிலைய அறிவியலாளர் நிர்வகிக்கின்றனர். இது தேசிய அறிவியல் அமைப்பின் பல்நோக்கு பயனர் வசதியாகும்.

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு