எதிர்நூல் என்று யார் செய்தார் என்னும் குறிப்பு இல்லை. உரையாசிரியர்கள் எதிர்நூல் என்னும் பெயரைக் குறிப்பிடுகின்றனர்.

  • பேராசிரியர் குறிப்பு

அறிவாளி ஒருவன் தன் கோட்பாட்டை நிலைநாட்டிப் பிறர் கோட்பாட்டை மறுப்பது எதிர்நூல்.

தன்கோள் நிறீஇப் பிறன்கோள் மறுப்பது
எதிர்நூல் என்ப ஒரு சாராரே – தொல்காப்பியம், மரபியல், பேராசிரியர் உரை

நன்னூல் முதல்நூல், வழிநூல், சார்புநூல் என மூன்று வகையாகப் பிரித்துக் காட்டி ‘முன்னோரின் வேறுநூல்’ என்று மற்றொன்றையும் குறிப்பிடுகிறது.

  • நன்னூல் நூற்பா 5, 6, 7. 8
  • நன்னூல் நூற்பா 9
முன்னோர் மொழிபொருளே அன்றி அவர்மொழியும்
பொன்னேபோல் போற்றுவம் என்பதற்கும் – முன்னோரின்
வேறுநூல் செய்தும்எனும் மேற்கோள்இல் என்பதற்கும்
கூறு பழஞ் சூத்திரத்தின் கோள்

இதனை எதிர்நூல் எனக் குறிப்பிட்டனர் போலும்.

பேராசிரியர் உரையை உள்ளத்தில் கொண்டு எதிர்நூலின் காலம் 12ஆம் நூற்றாண்டு என மு. அருணாசலம் முடிவுக்கு வருகிறார்.

கருவிநூல் தொகு

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதின்னிரண்டாம் நூற்றாண்டு, பாகம் 1, 2005

அடிக்குறிப்பு தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=எதிர்நூல்&oldid=1148078" இலிருந்து மீள்விக்கப்பட்டது