எத்திலீனாற்பகுப்பு

எத்திலீனை வினைப்பொருளாகப் பயன்படுத்தி ஆல்க்கீன்களை தரம் இறக்கும் ஒரு வேதியியல் செயல் முறை

எத்திலீனாற்பகுப்பு (Ethenolysis) என்பது எத்திலீனை வினைப்பொருளாகப் பயன்படுத்தி ஆல்க்கீன்களை தரம் இறக்கும் ஒரு வேதியியல் செயல் முறையாகும். குறுக்குக் கூறிடம்பெயர்தல் வினைக்கு இதுவோர் எளிய எடுத்துக்காட்டாகும். குறைந்த செலவில் எத்திலீனை வினைப்பொருளாகப் பயன்படுத்த முடியும் என்பது இவ்வினையின் முக்கியப் பயன்பாடாக கருதப்படுகிறது. மேலும் இத்தெரிவு முறையில் விளிம்புநிலை ஆல்க்கீன் வேதிவினைக்குழு சேர்மங்கள் (ஆல்பா-ஒலிபீன்கள்) உருவாகின்றன. வினைக்கான சமன்பாடு இங்கு தரப்பட்டுள்ளது.

A=B + CH2=CH2 → A=CH2 + B=CH2

பயன்பாடுகள் தொகு

எத்திலீனாற்பகுப்பு செயல்முறையைப் பயன்படுத்தி அதிக மூலக்கூறு எடை உள்ள உள் ஆல்க்கீன்களை மேலும் மதிப்புமிக்க விளிம்புநிலை ஆல்க்கீன்களாக மாற்றலாம். எத்திலீனாற்பகுப்பு செயல்முறையை உயர் கூட்டு ஒலிபீன் செயல்முறை தொழிற்சாலை அளவுகளில் பயன்படுத்துகிறது. இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் விளிம்புநிலை α-ஒலிபீன் கலவைகள் வாலை வடிமுறையில் பிரித்தெடுக்கப்படுகின்றன. அதிக மூலகூற்று எடை ஒலிபீன்களின் எச்சங்கள் நீர்ம நிலையில் கார அலுமினா வினையூக்கிகளால் மாற்றியனாக்கப்படுகின்றன. வினையில் உருவாகும் உள் ஒலிபீன்கள் எத்திலீனுடன் வினைபுரிந்து ஆல்பா-ஒலிபீன்களை மறு உருவாக்கம் செய்கின்றன. மிகையளவில் உள்ள எத்திலீன் வினையின் வேதிச்சமநிலையை விளிம்பு நிலை ஆல்பா-ஒலிபீன்களை நோக்கி நகர்த்துகிறது. பெரும்பாலும் வினையூக்கிகள் இரேனியம்(VII ஆக்சைடு சேர்மத்தை அலுமினாவுடன் சேர்த்து தயாரிக்கப்படுகின்றன[1].

வாசனை திரவியங்கள் தயாரிக்கப் பயன்படும் முன்னோடிச் சேர்மமான நியோ எக்சீனை ஈரைசோபியூட்டீனை எத்திலீனாற்பகுப்பு செயல்முறையைப் பயன்படுத்தி தயாரிப்பது ஒரு பயன்பாடாகும்:[2]

(CH3)3C-CH=C(CH3)2 + CH2=CH2 → (CH3)3C-CH=CH2 + (CH3)2C=CH2.

வளைய ஆல்க்கீன்களை எத்திலீனாற்பகுப்பு செயல்முறையைப் பயன்படுத்தி தொழிற்சாலை அளவில் α,ω-டையீன்கள், அதாவது (CH2)n(CH=CH2)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டைக் கொண்ட ஈரொலிபீன்கள் தயாரிக்கப்படுகின்றன. உதாரணமாக 1,5-எக்சாடையீன் என்ற பயனுள்ள குறுக்கிணைப்பு முகவர் மற்றும் செயற்கை இடைநிலை வேதிப்பொருள் 1,5-வளைய ஆக்டா டையீனைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது.

(CH2CH=CHCH2)2 + 2 CH2=CH2 → 2 (CH2)2(CH=CH2)2

அலுமினா மீதான Re2O7 சேர்மத்திலிருந்து வினையூக்கி தயாரிக்கப்படுகிறது. தொடர்புடைய ஒர் இனமான 1,9-டெக்காடையீன் இதேபோல வளைய ஆக்டீனிலிருந்து தயாரிக்கப்படுகிறது.

புதுப்பிக்கப்பட்ட மூலப்பொருட்களைப் பயன்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு பயன்பாட்டில், இயற்கை விதை எண்ணெயிலிருந்து பெறப்படும் மெத்தில் ஓலியேட்டை 1-டெசீன் மற்றும் மெத்தில் 9-டெசினோயேட்டாக மாற்ற இயல்வது புதுப்பிக்கப்பட்ட மூலப்பொருட்களைப் பயன்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு பயன்பாடாகும் :[3][4]

CH3(CH2)7CH=CH(CH2)7CO2Me + CH2=CH2 → CH3(CH2)7CH=CH2 + MeO2C(CH2)7CH=CH2.

மேற்கோள்கள் தொகு

  1. K. Weissermel, H. J. Arpe: Industrial Organic Chemistry: Important Raw Materials and Intermediates. Wiley-VCH Verlag 2003, ISBN 3-527-30578-5
  2. "Metathesis". Kirk-Othmer Encyclopedia of Chemical Technology. (2005). Wiley-VCH. DOI:10.1002/0471238961.metanoel.a01. 
  3. Marinescu, Smaranda C.; Schrock, Richard R.; Müller, Peter; Hoveyda, Amir H. (2009). "Ethenolysis Reactions Catalyzed by Imido Alkylidene Monoaryloxide Monopyrrolide (MAP) Complexes of Molybdenum". J. Am. Chem. Soc. 131 (31): 10840–10841. doi:10.1021/ja904786y. பப்மெட்:19618951. 
  4. Schrodi, Yann; Ung, Thay; Vargas, Angel; Mkrtumyan, Garik; Lee, Choon Woo; Champagne, Timothy M.; Pederson, Richard L.; Hong, Soon Hyeok (2008). "Ruthenium Olefin Metathesis Catalysts for the Ethenolysis of Renewable Feedstocks". Clean 36 (8): 669–673. doi:10.1002/clen.200800088. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=எத்திலீனாற்பகுப்பு&oldid=2750004" இலிருந்து மீள்விக்கப்பட்டது