எந்த மாதிரி? அட அந்தமாதிரி

எந்த மாதிரி? அட அந்தமாதிரி ஆனையிறவு வெற்றி கொள்ளப்பட்ட உவகையில் சாந்தன், சுகுமார் கூட்டில் வெளிவந்த பாடல் ஆகும். ஒருவித நையாண்டித் தன்மையோடு அமைந்த பாடல். இப்பாடலை கவிஞர் புதுவை இரத்தினதுரை இயற்றியுள்ளார். இசைவாணர் கண்ணன், முரளி இணைந்து இசையமைத்துள்ளார்கள். மலையவன் ஒலிப்பதிவு செய்துள்ளார். தர்மேந்திரா கலையகத்தில் பாடல் ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகள் கலை பண்பாட்டுக் கழகத்தினால் தமிழீழத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஆனையிறவு (2001) இறுவட்டில் இடம் பெற்றுள்ளது.

இப்பாடலைப் பாடியவர்கள்

தொகு

பாடல் வரிகள்

தொகு

ஈடுவைத்து ஈடுவைத்து நந்தலாலா -தமிழ்
ஈழம் தரப்போகிறாவே நந்தலாலா
ஆடும்வரை ஆடிவிட்டா நந்தலாலா -இப்போ
ஆனையிறவு எங்களிடம் நந்தலாலா

எந்த மாதிரி அட அந்தமாதிரி
எந்த மாதிரி அட அந்தமாதிரி -தமிழ்
ஈழமெங்கள் கண்ணெதிரே வந்தமாதிரி
சொந்த ஊரிலேறி நாங்கள் சென்ற மாதிரி -ஏதோ
தேவதைகள் வந்து வரம் தந்தமாதிரி
இந்தமாதிரி வாசம் வீசும் மாதிரி -அட
சந்தனத்தை பூசிக்கொண்டு நின்ற மாதிரி

ஊருக்குள்ளே போகப்போறோம் நந்தலாலா -இப்போ
உள்ளதையும் தந்து போறா நந்தலாலா
மாமனையே நம்பி நம்பி நந்தலாலா -இப்ப
மாரடிச்சுக் கொள்ளிறாவாம் நந்தலாலா

அம்பகாமம் வந்து போனார் நந்தலாலா -இப்போ
ஆட்டிலறி தந்து போனார் நந்தலாலா
அம்மையாரே தந்துபோவார் நந்தலாலா -எங்கள்
அம்பாறையும் வந்துதவும் நந்தலாலா

இந்தியாவுக் கோடிப்போனா நந்தலாலா -இப்போ
இஸ்ரவேலுக்கு ஓடுறாவாம் நந்தலாலா
எங்கு ஓடிப்போயும் என்ன நந்தலாலா -எங்கள்
தம்பி தானே வெல்லப்போறான் நந்தலாலா

ஈடுவைத்து ஈடுவைத்து நந்தலாலா -தமிழ்
ஈழம் தரப்போகிறாவே நந்தலாலா

வெளி இணைப்புகள்

தொகு