என்றி கர்னி
சர் என்றி கர்னி அல்லது சர் என்றி லோவல் கோல்ட்சுவொர்த்தி கர்னி (மலாய்; ஆங்கிலம்: Sir Henry Lovell Goldsworthy Gurney; சீனம்: 亨利·葛尼) (27 சூன் 1898 - 6 அக்டோபர் 1951) என்பவர் பிரித்தானியப் பேரரசில் முழுவதும் பல்வேறு பதவிகளில் பணியாற்றிய பிரித்தானிய காலனித்துவ நிர்வாகி ஆவார்.
சர் என்றி கர்னி Sir Henry Gurney | |
---|---|
மலாயாவின் ஐக்கிய இராச்சிய உயர் ஆணையர் | |
பதவியில் 1 அக்டோபர் 1948 – 6 அக்டோபர் 1951 | |
முன்னையவர் | சர் எட்வர்ட் ஜென்ட் (Sir Edward Gent) |
பின்னவர் | படைத்துறை உயர் தளபதி சர் ஜெரால்ட் டெம்பிளர் (Sir Gerald Templer) |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | கார்ன்வால், இங்கிலாந்து, ஐக்கிய இராச்சியம் | 27 சூன் 1898
இறப்பு | 6 அக்டோபர் 1951 பிரேசர் மலை, பகாங், மலாயா கூட்டமைப்பு | (அகவை 53)
Manner of death | படுகொலை |
துணைவர் | இசபெல் லோதர் வீர் |
கல்வி | வின்செஸ்டர் கல்லூரி |
மலாயாவின் கூட்டமைப்பில் உயர் ஆணையராகப் பணியாற்றிய போது, மலாயா அவசரகாலத்தின் போது பொதுவுடைமைக் கிளர்ச்சியாளர்களால் கொல்லப்பட்டார்.
என்றி கர்னி, மலாயாவில் பொதுவுடைமைச் சித்தாந்தங்களையும் தீவிரவாதத்தையும் முறியடித்த பிரித்தானிய ஆணையர் என அறியப்படுகிறார்.. அவர் மலாயாவில் பல சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தவர். மலாயாவில் பொதுவுடைமை ஆதரவாளர்களை அழித்தே தீருவேன் என்று உறுதிபூண்டு போராடியவர் என்றும் அறியப்படுகிறார்.[1][2]
பொது
தொகுஅக்டோபர் 1, 1948-இல், மலாயாவின் உயர் ஆணையராக நியமிக்கப்பட்டார். மலாயா அவசரகாலம் தொடங்கிய நேரத்தில்தான் என்றி கர்னி தன் பதவியை ஏற்றுக்கொண்டார். அடுத்த மூன்று ஆண்டுகளில் அவர் மலாயாவில் பிரித்தானியக் கொள்கையின் தலைமை நிர்வாகியாகப் பணியாற்றினார்.
படுகொலை
தொகு1951-ஆம் ஆண்டு அக்டோபர் 6-ஆம் தேதி, மலாயா பொதுவுடைமை கட்சியைச் சேர்ந்த பொதுவுடைமை கிளர்ச்சியாளர்களின் பதுங்கு தாக்குதலில் என்றி கர்னி கொல்லப்பட்டார். அந்த நேரத்தில் அவர் பிரேசர் மலைக்கு அருகே உள்ள கோலா குபு பாரு சாலை, 90.4-ஆவது கி.மீட்டரில் இருந்த ஓய்வு விடுதிக்குச் சென்று கொண்டிருந்தார்.
மலாயா பொதுவுடைமை கட்சியின் தலைவர் சின் பெங்கின் கூற்றுப்படி, "பதுங்கியிருந்து தாக்குவது வழக்கமான ஒன்று; அது தற்செயலாக நடந்த ஒரு கொலை நடவடிக்கை; இறந்தவர்களில் மலாயாவின் உயர் ஆணையரும் ஒருவராக இருந்தார் என்பதை செய்தி அறிக்கைகளின் மூலமாகத்தான் மலாயா பொதுவுடைமை கட்சியினரும் அறிந்து கொண்டனர்" என அவர் கூறினார்.[3]
என்றி கர்னியின் கல்லறை
தொகுகர்னியின் இறுதிச் சடங்குகள் 8 அக்டோபர் 1951 அன்று நடந்தது. அவர் கோலாலம்பூர் செராஸ் சாலையில் உள்ள செராஸ் போர் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார். இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். என்றி கர்னியின் கல்லறை செராஸ் போர் கல்லறையில் இன்னும் உள்ளது.[4]
மலாக்கா. சிரம்பான், கோலாலம்பூர் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நகரங்களில் உள்ள கர்னி சாலைகள் எனும் அவரின் பெயரால் அழைக்கப்படுகின்றன. பேராக்கில் உள்ள பெக்கான் குர்னி என்ற நகரமும் அவரின் பெயரால் அழைக்கப்படுகிறது. அத்துடன் பினாங்கில் உள்ள பிரபலமான கர்னி டிரைவ் எனும் சுற்றுவட்டம்; மற்றும் மலாக்கா தெலுக் மாஸ் நகரில் உள்ள என்றி கர்னி பள்ளியும் அவரின் பெயரால் பெயரிடப்பட்டுள்ளன.
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Text of telegram from Sir M.V.del Tufo,Chief Secretary,Federation of Malaya Govt. to Mr.Griffiths,Secretary of State for the Colonies. accessed 4 November 2013]
- ↑ "Guerrillas Murder High Commissioner In Malaya.". The Canberra Times (ACT : 1926 - 1995) (ACT: National Library of Australia): p. 1. 8 October 1951. http://nla.gov.au/nla.news-article2839310. பார்த்த நாள்: 4 November 2013.
- ↑ Chin Peng, My Side of History, Media Masters, Singapore, 2003, pp 287–289.
- ↑ Slain British Officer Buried
வெளி இணைப்புகள்
தொகு