என். ஆர். இளங்கோ
தமிழக அரசியல்வாதி
என். ஆர். இளங்கோ (N.R. Elango) என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதியும், மாநிலங்களவை உறுப்பினரும் ஆவார். இவர் திமுகவைச் சேர்ந்தவர். இவர் 2020இல் மேலவைக்கு ( இந்தியப் பாராளுமன்றத்தின் மாநிலங்களவைக்கு) தமிழ்நாட்டின் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]
என். ஆர். இளங்கோ | |
---|---|
தமிழ்நாடுக்கான மாநிலங்களவை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 03-ஏப்ரல்-20 | |
தொகுதி | தமிழ்நாடு |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 16 சூன் 1966 சோளிங்கர், வட ஆற்காடு மாவட்டம், சென்னை மாநிலம் (தற்போது இராணிப்பேட்டை மாவட்டம், தமிழ்நாடு) இந்தியா | ,
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | திராவிட முன்னேற்றக் கழகம் |
துணைவர் | அருணா இளங்கோ |
பெற்றோர் | ஆர்.என். அரங்கநாதன் ரஞ்சிதன் |
முன்னாள் கல்லூரி | (பி.எல்.) அரசு சட்டக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி |
தொழில் | அரசியல்வாதி |
தொடக்க வாழ்க்கை
தொகுஇன்றைய இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சோளிங்கரில் 16 சூன் 1966 அன்று பிறந்தார் இளங்கோ. இவர் தந்தை இரா.நா. அரங்கநாதன், 1967 முதல் 1971 வரை சோளிங்கர் தொகுதிக்கான சென்னை மாநில சட்டப் பேரவை உறுப்பினராகப் பணியாற்றினார்.[3]
குறிப்புகள்
தொகு
- ↑ "Candidate affidavit" (PDF). www.elections.tn.gov.in. 2012. பார்க்கப்பட்ட நாள் 2021-03-24.
- ↑ "DMK fields Tiruchi Siva, N.R. Elango and Andhiyur Selvaraj for Rajya Sabha". The Hindu. 2020-03-01. பார்க்கப்பட்ட நாள் 2021-03-24.
- ↑ 336 ஆவன செய்வாரை ஆவணம் செய்வோம் 3 | முனைவர் கி.குணத்தொகையன் | தம்மைக் குறித்துத் தம் சொற்களில், பார்க்கப்பட்ட நாள் 2023-03-30