பொம்முக்குட்டி அம்மாவுக்கு

பொம்முக்குட்டி அம்மாவுக்கு என்பது 3 பெப்ரவரி 2020 ஆம் ஆண்டு முதல் விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பகல் 2 மணிக்கு பொன்மகள் வந்தாள் என்ற தொடர் ஒளிபரப்பான நேரத்திற்கு பதிலாக ஒளிபரப்பாகும் குடும்பம் சார்ந்த தொலைக்காட்சி தொடர் ஆகும். இது ஸ்டார் ஜல்சா தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'மா டோமே சேர கும் அஷெனே' என்ற வங்காள மொழித் தொடரின் தமிழ் மறு ஆக்கம் ஆகும்.

பொம்முக்குட்டி அம்மாவுக்கு
பொம்முக்குட்டி அம்மாவுக்கு.jpg
வகைகுடும்பம்
நாடகம்
எழுதியவர்மருது சங்கர்
இயக்குனர்பிரவீன் பென்னட்
நடிப்பு
  • ரித்வா
  • கிரண்
  • ஸ்ருதி
  • ராஜ்குமார்
நாடுஇந்தியா
மொழிகள்தமிழ்
தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்வெங்கடேஷ் பாபு
ஓட்டம்தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள்
தயாரிப்பு நிறுவனங்கள்குளோபல் வில்லேஜர்ஸ்
ஒளிபரப்பு
சேனல்விஜய் தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்3 பெப்ரவரி 2020 (2020-02-03) –
ஒளிபரப்பில்

இந்த தொடரில் தொலைக்காட்சி நடிகை ஜெயஸ்ரீயின் மகள் ரித்வா என்பவர் பொம்மி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.[1] குளோபல் வில்லேஜர்ஸ் நிறுவனம் சார்பில் இயக்குனர் பிரவீன் பென்னட் என்பவர் தயாரித்து மற்றும் இயக்கியுள்ளார்.[2]

நடிகர்கள்தொகு

  • ரித்வா - பொம்மி
  • ரஷ்மிதா ரோஜா - மீரா
  • கிரண்
  • ஸ்ருதி[3] - பிரபா
  • ராஜ்குமார்
  • ஸ்ரீதேவி

நடிகர்களின் தேர்வுதொகு

இது ஒரு குடும்பம் சார்ந்த தொடர். இந்த தொடரில் வம்சம் தொடரில் நடித்த ஜெயஸ்ரீயின் மகள் முதல் முதலில் தொலைக்காட்சி தொடரில் நடிக்கின்றார்.[4] இவர் சூப்பர் மாம் 1.0 என்ற ஜீ தமிழ் குழந்தைகள் நிகழ்ச்சியில் பங்கு பெற்றுள்ளார். இவருடன் கனா காணும் காலங்கள் என்ற தொடரில் நடித்த கிரண் நடிக்கின்றார். கன்னட தொலைக்காட்சி நடிகை ரஷ்மிதா ரோஜா என்பவர் மீரா என்ற கதாபாத்திரம் மூலம் தமிழ் தொலைக்காட்சித் துறைக்கு அறிமுகமாகிறார். இவர்களுடன் ராஜ்குமார் மற்றும் ஸ்ருதி ஒரு முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

மேற்கோள்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு

விஜய் தொலைக்காட்சி : திங்கள்-சனிக்கிழமை பகல் 2 மணி தொடர்கள்
முன்னைய நிகழ்ச்சி பொம்முக்குட்டி அம்மாவுக்கு
(3 பெப்ரவரி 2020-ஒளிபரப்பில்)
அடுத்த நிகழ்ச்சி
பொன்மகள் வந்தாள்
(26 பெப்ரவரி 2018 - 1 பெப்ரவரி 2020)
-