எமிலி அல்லது கல்வி பற்றி (நூல்)
எமிலி அல்லது கல்வி பற்றி (Émile, or On Education) என்னும் நூல் மாந்தனின் தன்மை பற்றியும் கல்வி பற்றியும் பிரான்சிய மெய்யியலாளரும் எழுத்தாளரும் ஆன இழான் இழாக்கு உரூசோ எழுதிய புகழ்பெற்ற நூல். இந்நூலை இவ்வாசிரியர் தான் எழுதியவற்றுள் தலைசிறந்த முகனையான எழுத்து என்று குறிப்பிட்டார்[1]. ஆனால் இதில் உள்ள ஒரு பகுதியால் (சவோயார்டு விக்காரின் தொழிலும் நம்பிக்கையும் என்னும் பகுதி) எமிலி என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்நூல் பாரிசிலும் செனீவாவிலும் பொது இடங்களில் 1762 ஆம் ஆண்டு எரிக்கப்பட்டது[2]. பிரான்சியப் புரட்சியின் பொழுது எமிலி உள்ளெழுச்சி ஊட்டி, நாட்டின் புதிய கல்வி முறைக்கு அடையாளமாக அமைந்தது[3].
இழான் இழாக்கு உரூசோவின் எமிலி நூலின் முகப்புப்பக்கம் | |
நூலாசிரியர் | இழான் இழாக்கு உரூசோ |
---|---|
நாடு | சுவிட்சர்லாந்தும் பிரான்சும் |
மொழி | பிரான்சியம் |
வெளியிடப்பட்ட நாள் | 1762 |
ஆங்கில வெளியீடு | 1762 |
ISBN | NA |
அரசியலும் மெய்யியலும்
தொகுஇந்த நூல் அடிப்படை அரசியல் மெய்யியல் கேள்விகளைப் பற்றியும் தனி மாந்தர்களுக்கும் அவர்கள் இருக்கும் குமுகத்துக்கும் இடையே உள்ள உறவு உரிமைகள் பற்றியும், குறிப்பாக தீமைகள் சூழ்ந்த குமுகத்தில் இருந்துகொண்டே எவ்வாறு தனி மாந்தன் ஒருவன், உரூசோ கூறும், செம்மாந்தனாக ("noble savage") வாழ்வது என்பது பற்றியும் கூறுவதாகும். இந்நூலில் தொடக்கத்திலேயே, "உருவாக்கியவர் கைகளில் இருந்து வெளியாகும் அனைத்தும் நல்லதே, அனைத்தும் மாந்தனின் கைகளில் சீரழிகின்றன" என்று கூறுகின்றார்.
கெடுதிகளும் கெடும்போக்குகளும் மலிந்த குமுகத்தில் எவ்வாறு ஓர் "இயற்கையான மாந்தன்" (இயற்கையில் நல்லவனாகப் பிறந்த, இயல்பாய் நல்லவன்") நல்லவனாக வாழலாம் என்பதற்கான கல்வி முறையை விளக்க முற்படுகின்றார்.[4]. இதற்காக எமிலி என்னும் பெண்ணையும் அவருடைய ஆசிரியரையும் முன் வைத்துக் கதை புதின வடிவில் எழுதியுள்ளார். எமிலி என்னும் இந்நூல், கல்வியூட்டும் குழந்தை வளர்ப்புக்கான நூல் என்று கருதிவிடமுடியாது, ஆனால் இதில் குழந்தை வளர்ப்புக்கான சில கருத்துகளும் உள்ளன.[5]
மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்
தொகு- ↑ Rousseau, Jean-Jacques. The Confessions. Trans. J.M. Cohen. New York: Penguin (1953), 529-30.
- ↑ E. Montin, "Introduction to J. Rousseau's Émile: or, Treatise on education by Jean-Jacques Rousseau", William Harold Payne, transl. (D. Appleton & Co., 1908) p. 316.
- ↑ Jean Bloch traces the reception of Émile in France, particularly among the revolutionaries, in his book Rousseauism and Education in Eighteenth-century France Oxford: Voltaire Foundation (1995).
- ↑ Boyd, William. The Educational Theory of Jean Jacques Rousseau. London: Longmans, Green and Co. (1911), 127.
- ↑ Rousseau, responding in frustration to what he perceived as a gross misunderstanding of his text, wrote in Lettres de la montagne: “Il s’sagit d’un nouveau système d’èducation dont j’offre le plan à l’examen des sages, et non pas d’une méthode pour les pères et les mères, à laquelle je n’ai jamais songé.” [It is about a new system of education, whose outline I offer up for learned scrutiny, and not a method for fathers and mothers, which I've never contemplated.] Qtd. in Peter Jimack, Rousseau: Émile. London: Grant and Cutler, Ltd. (1983), 47.
உசாத்துணை
தொகு- Bloch, Jean. Rousseauism and Education in Eighteenth-century France. Oxford: Voltaire Foundation, 1995.
- Boyd, William. The Educational Theory of Jean Jacques Rousseau. London: Longmans, Green and Co., 1911. No ISBN available.
- Jimack, Peter. Rousseau: Emile. London: Grant and Cutler, Ltd., 1983.
- Rousseau, Jean-Jacques Rousseau. Emile, or On Education. Trans. Allan Bloom. New York: Basic Books, 1979.
- Rousseau, Jean-Jacques Rousseau. Emilius and Sophia; or, The Solitaries. London: Printed by H. Baldwin, 1783.
- Trouille, Mary Seidman. Sexual Politics in the Enlightenment: Women Writers Read Rousseau. Albany, NY: State University of New York Press, 1997.
இவற்றையும் பார்க்கவும்
தொகு- Émile, ou De l'éducation விக்கிமூலம் (பிரான்சிய மொழிமூலம்)
- The Emile of Jean-Jacques Rousseau பரணிடப்பட்டது 2010-09-06 at the வந்தவழி இயந்திரம், கொலம்பியா பல்கலைக்கழகம். முழு பிரான்சிய மொழி முதல்நூலும், ஆங்கில மொழி பெயர்ப்பும். மொழிபெயர்ப்பு கிரேசு உரூசெவெல்ட்டு (Grace G. Roosevelt) (பார்பரா ஃவாக்சிலி (Foxley) மொழிபெயர்ப்பைத் தழுவியது)
- Emile at குட்டன்பேர்க் திட்டம் கூட்டன்பெர்கு திட்டத்தில் பார்பரா ஃவாக்சிலியின் மொழிபெயர்ப்பு.