எம். ஆர். கே. பன்னீர்செல்வம்

இந்திய அரசியல்வாதி

எம். ஆர். கே. பன்னீர்செல்வம் (M. R. K. Panneerselvam) என்பவர் ஒரு தமிழக அரசியல்வாதி மற்றும் தமிழக வேளாண் துறையின் அமைச்சராவார். இவர் 2006ல் அமைக்கப்பட்ட மு.கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக பணியாற்றினார்.

எம். ஆர். கே. பன்னீர்செல்வம்
சமூக நலத்துறை மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர்
தொகுதிகுறிஞ்சிப்பாடி
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிதிமுக
பெற்றோர்எம்.ஆர். கிருஷ்ணமூர்த்தி[1]
வேலைஅரசியல்வாதி
As of 20 நவம்பர், 2020

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அடுத்த முட்டத்தில் 25 ஆகத்து 1957இல் பிறந்த இவர் இளங்கலை படிப்பாக சட்டப்படிப்பை படித்தவர். இவர் தமிழக சட்டசபைக்கு மூன்று முறை தி.மு.க சார்பில் குறிஞ்சிப்பாடி தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவர் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக 11வது சட்டசபை காலத்தில் இருந்தார்..[2][3] 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினராக மீண்டும் தேர்ந்தெடுக்கபட்டார். இதையடுத்து 2021 மே 7 அன்று வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை (வேளாண்மை - உழவர் நலத்துறை, வேளாண்மை பொறியியல், வேளாண் பணிக்கூட்டுறவு சங்கங்கள், தோட்டக்கலை, கரும்புத்தீர்வை) அமைச்சசராக பதவியேற்றார்.[4] இவர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக பரங்கிப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இவரின் அக்காள் மங்கையர்க்கரசி சிதம்பரம் நகராட்சியில் துணைத் தலைவராக இருந்தார்.[5]

மேற்கோள்கள்

தொகு