எம். எஸ். பிட்டா

இந்திய அரசியல்வாதி

மணீந்தர் ஜீத் பிட்டா (Maninderjeet Bitta) (எம் பிட்டா எனவும் அழைக்கப்படுபவர்) அனைத்து இந்திய பயங்கரவாத எதிர்ப்பு முன்னணி (AIATF) தலைவர் மற்றும் இந்திய இளைஞர் காங்கிரசின் முன்னாள் தலைவரும் ஆவார்.[1] [2] இவரை இந்திய இளைஞர் காங்கிரசின் தலைவராக பி.வி.நரசிம்மராவ் நியமித்தார். பியாண்ட் சிங் பஞ்சாப் அரசின் முதலமைச்சராக இருந்த போது மணீந்தர்ஜித் சிங் பிட்டா மாநில அமைச்சராக இருந்தார்.

யோகி
மணீந்தர் ஜீத் பிட்டா
பிறப்புமணீந்தர் ஜீத் சிங் பிட்டா
தேசியம்இந்தியர்
பணிஅனைத்திந்திய தீவிரவாத எதிர்ப்பு முன்னணித் தலைவர் (AIATF)

அவரது வாழ்க்கையில் நிகழ்ந்த தாக்குதல்கள் தொகு

  • மே 9, 1992இல் பஞ்சாபின் புனித நகரமான அமிர்தசரசில் 1992 மே 9 அன்று 13 பேர் கொல்லப்பட்ட கார் குண்டுவெடிப்பில் பிட்டா பலத்த காயமடைந்தார்.[3]
  • செப்டம்பர் 11, 1993 அன்று புது தில்லியின் ரைசினா சாலையில் உள்ள இந்திய இளைஞர் காங்கிரசு அலுவலக வளாகத்தில் பிட்டா மீது பயங்கர தாக்குதல் நிகழ்ந்தது. இதில் இருந்தும் தப்பினார். அப்போதைய ஆளும் காங்கிரசு கட்சியின் இளைஞர் பிரிவின் தலைவராக இருந்த மணீந்தர்ஜீத் சிங் பிட்டா தனது அலுவலகத்திற்கு தனது மகிழ்வுந்தில் இருந்து விலகிச்சென்ற போது குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இறந்தவர்களில் அவரது இரண்டு மெய்க்காப்பாளர்களும் இருந்தனர். அவர் மார்பில் சிறு காயங்களுடன் தப்பினார், ஆனால் 9 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 36 பேர் காயமடைந்தனர். எரியும் வட்டைகள் மற்றும் உலோக மற்றும் கண்ணாடித் துண்டுகள் பாராளுமன்றம் மற்றும் பல அரசாங்க கட்டிடங்களுக்கு அருகில் 100 கெஜம் பரப்பளவில் பரவியிருந்தன. சேதமடைந்த கார்களில் இருந்து மீட்கப்பட்ட உடல்களை மீட்புப் படையினர் இழுத்துச் சென்றனர். நிகழ்வு நடந்த போது அந்த இடத்தைக் கடந்து சென்று கொண்டிருந்த பேருந்தில் பயணிகள் காயமடைந்தனர். அதிக மழை பெய்யாமல் இருந்திருந்தால் இறப்பு எண்ணிக்கை மிக அதிகமாக இருந்திருக்கும். விசாரணையின் பின்னர், அதிகாரிகள் 1993 ஆம் ஆண்டு ரைசினா சாலை மகிழ்வுந்து வெடிகுண்டு வெடிப்பிற்கு காரணமானவர்களில் ஒருவராக, காலிஸ்தான் விடுதலைப் படையின் துணை நிறுவனமான தேவிந்தர் பால் சிங் புல்லருக்கு தூக்கு தண்டனை வாயிலாக மரண தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனைக்கு எதிரான புல்லரின் மேல்முறையீடு டிசம்பர் 27, 2006 அன்று இந்திய உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. மன்னிப்பு கோரிய அவரது வேண்டுகோளை இந்திய ஜனாதிபதி 2011 மே மாதம் நிராகரித்தார். தூக்கிலிடும் தண்டனையை மாற்றுமாறு அவர் மீண்டும் கேட்டார், இது ஏப்ரல் 12, 2013 அன்று இந்திய உச்ச நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது. இறுதியாக தேவிந்தர்பால் சிங் புல்லருக்கு மரண தண்டனை உச்சநீதிமன்றம் 2014 மார்ச் 31 அன்று ஆயுள் தண்டனையாக மாற்றியது.

சமூக சேவகர் தொகு

எம். எஸ். பிட்டாவிற்கு இசட் + பாதுகாப்பு வழங்கப்படுகிறது [4]

மேற்கோள்கள் தொகு

  1. "Bitta for front against terrorism ". Expressindia.com. 1998-07-18. பார்க்கப்பட்ட நாள் 2012-07-31.
  2. "New Delhi News : Bitta flays clemency plea". The Hindu. 2005-06-12. Archived from the original on 2006-03-04. பார்க்கப்பட்ட நாள் 2012-07-31. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  3. Published: 12 September 1993 (1993-09-12). "A Car Bomb in New Delhi Kills 8 and Wounds 36 - New York Times". Nytimes.com. பார்க்கப்பட்ட நாள் 2012-07-31.{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link)
  4. Anand, Anil (February 10, 2011). "30 YEARS LATER, Z PLUS SECURITY TO BUTA SINGH WITHDRAWN". DNA. dnaindia.com (New Delhi). http://www.dnaindia.com/india/report-30-years-later-z-plus-security-to-buta-singh-withdrawn-1505709. பார்த்த நாள்: May 30, 2016. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._எஸ்._பிட்டா&oldid=3545795" இலிருந்து மீள்விக்கப்பட்டது