எம். ஏ. அபுசாலி

எம். ஏ. அபுசாலி (M. A. Abusali - பிறப்பு 1944) தமிழக அரசியல்வாதியும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1971 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அப்போதைய தென் ஆற்காடு மாவட்டம் தற்போதைய கடலூர் மாவட்டம், புவனகிரி சட்டமன்றத் தொகுதியில் இருந்து இந்திய யூனியன்‌ முஸ்லீம்‌ லீக் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

பிறப்பு

தொகு

அபுசாலி கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் வட்டத்தில் உள்ள இலால்பேட்டை பேரூராட்சியில் 1944 ஆம் ஆண்டு பிறந்தார்.

கல்வி

தொகு

பத்தாம் வகுப்பை காட்டுமன்னார்‌ கோயில்‌ அரசினர்‌ உயர்நிலைப்‌ பள்ளியில்‌ படித்தார்.

பதவிகள்

தொகு
  • தலைவர், லால்பேட்டை அரபுக்கல்லூரி.
  • நிர்வாகக்‌ குழு உறுப்பினர்‌, சென்னை புதுக்கல்‌லூரி

சட்ட மன்றத்தில்

தொகு

1971 ஆம் ஆண்டு நடைப்பெற்ற சட்டமன்ற தேர்தலில், புவனகிரி சட்டமன்றத் தொகுதியில் இருந்து இந்திய யூனியன்‌ முஸ்லீம்‌ லீக் கட்சி சார்பில் போட்டியிட்டு, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் ஆர்.பாலகிருஷ்னனை 5,324 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. Election Commission of India. "1971 Tamil Nadu Election Results" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. பார்க்கப்பட்ட நாள் 19 April 2009.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._ஏ._அபுசாலி&oldid=4058268" இலிருந்து மீள்விக்கப்பட்டது