எம். வை. எம். மீஆது
முஹம்மட் யூசுப் முஹம்மட் மீஆது (பிறப்பு: ஜூன் 24, 1940) இறைநேசன், சாந்திமோகன், சமாதானப் பிரியன், சமாதானக் குயில் ஆகிய புனைப்பெயர்களில் எழுதிவரும் ஒரு கவிஞரும், எழுத்தாளருமாவார்.
எம். வை. எம். மீஆது | |
---|---|
பிறப்பு | ஜூன் 24, 1940 கேகாலை, தும்புளுவாவ |
பெற்றோர் | முஹம்மத் யூசுப் |
வாழ்க்கைக் குறிப்பு
தொகுசப்ரகமுவ மாகாணம், கேகாலை மாவட்டத்தில் 'தும்புளுவாவ' கிராமத்தில் முஹம்மத் யூசுப் தம்பதியினரின் மகனாகப் பிறந்த மீஆது தும்புளுவாவ அல்-அறபா முஸ்லிம் வித்தியாலயம், ஹெம்மாதகம அல்-அஸ்ஹர் மத்திய வித்தியாலயம்l அட்டாளைச்சேனை ஆசிரியர் கலாசாலை, பேராதனைப் பல்கலைக்கழகம், கொழும்புப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் பழைய மாணவராவார். பொதுக் கலைமாணிப் பட்டதாரியான இவர், ஆங்கிலத்தில் விசேட பயிற்சியையும் பெற்றுள்ளார். இவரின் மனைவி எம்.எச். சித்தி ஐன். பிள்ளைகள்: மாஹிர், இம்தியாஸ், முன்ஸிர், ரிஸ்னா, பாத்திமா ரினாஸ், ஆய்சா சீனாஸ், ரிம்ஸா பர்வீன்
தொழில் முயற்சிகள்
தொகு1957ஆம் ஆண்டில் அரசாங்க ஆசிரியராக நியமனம் பெற்று 1990ஆம் ஆண்டில் சுமார் 33 வருட சேவையின் பின் ஓய்வுபெற்றார். அதன் பின்பு பல்கலைக்கழக பகுதிநேர ஆங்கில விரிவுரையாளராக சுமார் 2 வருடங்களும், இலங்கையில் சர்வதேச பாடசாலையொன்றில் சுமார் 4 வருடங்களும், மாலைதீவில் சுமார் 6 வருடங்களும் ஆங்கிலப் போதனாசிரியராக பணியாற்றியுள்ளார்.
இலக்கிய ஈடுபாடு
தொகுஇவரின் கன்னிக் கவிதையின் தலைப்பு ‘கடற்கரையிலேயே’ என்பதாகும். தினகரன் பாலர் கழகத்தில் 1953 ஆம் ஆண்டில் பிரசுரமானது. அன்றிலிருந்து சுமார் 25 உருவகக் கதைகளையும், 16 சிறுகதைகளையும், தமிழில் 200க்கும் மேற்பட்ட கவிதைகளையும், ஆங்கிலத்தில் 150க்கும் மேற்பட்ட கவிதைகளையும், 300க்கும் மேற்பட்ட தமிழ், ஆங்கிலக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.
பிரசுரமான ஊடகங்கள்
தொகுதினகரன், வீரகேசரி, நவமணி, மணிக்குரல், இளம்பிறை, அல்ஹஸனாத், பிரவாகம், கலைமுத்து, வெற்றி, நுஸ்ரத், கலைமலர், சிந்தாமணி, பிரியநிலா, ஞானம், சமாதானம், The Sun, The Island, Daily News, Sunday Observer, Sunday Tims, Al-Islam, The Leaner’s Digest, Haveeru, Spectrum (மாலைதீவு)Muslim Heralt (ஹொங்கொங) இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபன தமிழ் முஸ்லிம் சேவை நிகழ்ச்சிகள், ரூபவாஹினி.
வெளியிட்டுள்ள நூல்கள்
தொகுஇவர் இதுவரை ஒன்பது நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.
- 'வாசமில்லா மலரிது' (சிறுகதைத் தொகுதி) – 1985
- நபி பெருமானின் நல்லுரைகள் (40 ஹதீஸ் கவிதைகள்) - 1989
- ரமழான் நோன்பு – ஓர் ஆய்வு – 1993
- சப்ரகமுவ முஸ்லிம்களின் கலை, கலாசார பாரம்பரியங்கள். (ஆய்வு நூல்) - 2005
- யார் நயவஞ்சகர்கள்? – 1993 (மொழி பெயர்ப்பு)
- மகாநாயக்கா தேரோவுக்கு ஒரு பகிரங்கக் கடிதம் - 1994 (மொழிபெயர்ப்பு)
- பிறை பார்ப்பதில் வானியல் விஞ்ஞானத்தின் பங்கு – 1992 (மொழிபெயர்ப்பு)
- Stories For Young Children - 2004
- Peace Flower (Poems) - 2010
சஞ்சிகை ஆசிரியர்
தொகு- 1980ம் ஆண்டு முதல் ‘கலைமலர்’ எனும் பெயரில் சஞ்சிகையொன்றை வெளியிட்டார். இச்சஞ்சிகை 8 இதழ்கள் வெளிவந்தன.
ஆங்கில மொழி மூலம் எம்.வை.எம். மீஆத் அவர்கள் ஆங்கில மொழி மூலமாகவும் இரண்டு சஞ்சிகைகளை வெளியிட்டுள்ளார்.
- The Leaner’s Digest
- Smiling English
பெற்ற விருதுகள்
தொகு- ‘பத்ருல் உலூம்’ (அறிவின் மாமதி) 1993ஆம் ஆண்டில் முஸ்லிம் சமய கலாசார அமைச்சு .
- 'கலாபூசணம்' 2004ஆம் ஆண்டில் இலங்கை அரசு