எயிற்றியனார்

எயிற்றியனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று மட்டும் உள்ளது. இவர் பாலை நிலப் பெண் எயிற்றி ஒருத்தியை மணந்துகொண்டு வாழ்ந்து வந்தமையால் இவரை மக்கள் எயிற்றியனார் என்றனர்.

பாடல் தொகு

உள்ளிக் காண்பென் போல்வல் முள்ளெயிற்று
அமிழ்தம் ஊறும் செவ்வாய்க் கமழ் அகில்
ஆரம் நாறும் அறல் போல் கூந்தல்
பேர் அமர் மழைக்கண் கொடிச்சி
மூரல் முருவலொடு மதைஇய நோக்கே.

-குறுந்தொகை 286

பாடல் தரும் செய்தி தொகு

அவன் அவளிடம் கெஞ்சுகிறான். அவள் வெளிப்படையாகப் பல்லைக் காட்டிச் சிரிக்கிறாள். என்றாலும் அவள் தன் அழகு மதமதப்போடு பார்க்கிறாள். இதனை நினைத்து நினைத்து மகிழலாம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=எயிற்றியனார்&oldid=3176409" இலிருந்து மீள்விக்கப்பட்டது