எய்னியோசோரஸ்

எய்னியோசோரஸ்
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: சோரோப்சிடா
பெருவரிசை: டயனோசோரியா
வரிசை: ஓர்னிதிஸ்ச்சியா
துணைவரிசை: மார்ஜினோசெஃபலியா
பெருங்குடும்பம்: செராடொப்சியா
குடும்பம்: செராடொப்சிடீ
துணைக்குடும்பம்: செண்ட்ரோசோரினீ
சிற்றினம்: செண்ட்ரோசோரினி
பேரினம்: எய்னியோசோரஸ்
சாம்ப்சன், 1995
இனங்கள்
  • எ. புரோகுர்விகோனிஸ் சாம்ப்சன், 1995 (வகை)

எய்னியோசோரஸ் நடுத்தர அளவு உள்ள ஒரு செராடொப்சிய தொன்மாப் பேரினம் ஆகும். இவை, ஐக்கிய அமெரிக்காவில் உள்ள வட மேற்கு மொண்டானாவின் மேல் கிரீத்தேசியக் காலத்தின் கம்பானியக் காலப் பகுதியைச் சேர்ந்தவை.

எய்னியோசோரஸ், மொண்டானாப் பகுதிக்கே தனித்துவமான தொன்மா ஆகும். இவற்றின் அறியப்பட்ட எச்சங்கள் எல்லாமே மொண்டானாவின், போசெமானில் உள்ள ராக்கீஸ் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. பல்வேறு வயதுகளை உடைய, குறைந்தது 15 தொன்மாக்களின் எச்சங்கள் இப்பகுதியில் கிடைத்துள்ளன. இவற்றுள் மூன்று வளர்ந்த தொன்மாக்களில் மண்டையோடுகளும், பல நூற்றுக்கணக்கான பிற எலும்புகளும் கிடைத்துள்ளன. ஜாக் ஹார்னர் என்பவரால் 1985 ஆம் ஆண்டில் இது கண்டுபிடிக்கப்பட்டது. ராக்கீஸ் அருங்காட்சியகத்தின் ஆய்வாளர்கள் 1985 தொடக்கம் 1989 வரை அகழ்வாய்வு நடத்தினர்.

இக் கண்டுபிடிப்புக்களைப் பயன்படுத்தி, 1995 ஆம் ஆண்டில் ஸ்காட் டி சாம்ப்சன் என்பவர் இவற்றை முறையாக விவரித்து எய்னியோசோரஸ் புரோகுர்விகோர்னிஸ் என்னும் பெயரும் வழங்கினார். இதே பகுதியின் எலும்புப் படுகைகளிலேயே ஆச்சிலூசோரஸ் ஹோர்நேரி என்னும் தொன்மா இனமும் கண்டுபிடிக்கப்பட்டது.

இவற்றையும் பார்க்கவும் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=எய்னியோசோரஸ்&oldid=2741933" இலிருந்து மீள்விக்கப்பட்டது