எரித்தோபிளாஸ்டாசிஸ் ஃபீடாலிஸ்

ஆரெச் நோய் (Rh disease) அல்லது ஆரெச்(D) நோய் அல்லது நீலகுழவி நோய் என்பது Rh- தாயுக்கும், Rh+ தந்தைக்கும் உள்ள பொருந்தாமையால், குழவியின் குருதியில் தோன்றும் குருதிச் சிதைவு நோய் ஆகும். இது கருக்குழவி, பிறந்த குழவி குருதிச் சிதைவு நோய் எனப்படுவதும் உண்டு. இதன் பண்புகள் பின் வருமாறு:

  1. இது ஒரு குருதி நோய்
  2. இது Rh- தாயுக்கும் Rh+ தந்தைக்கும் பிறக்கும் குழந்தைகளைத் தாக்குகின்றது.
  3. Rh எதிா்வினைப் பொருள் கருவின் கருதிச் சிவப்பணுக்களை அழித்துவிடுகின்றது.
  4. குருதிச் சிவப்பணுக்கள் அழிக்கப்படுவதினால், குருதிசோகை, மஞ்சள் காமாலை ஆகிய நோய்கள் உருவாகின்றன.
  5. இறந்த குருதிச் சிவப்பணுக்கள், சிதைக்கப்படுவதற்கு கல்லீரலுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. கல்லீரலின் ஆற்றலுக்கும் மேற்பட்ட வேலை கொடுக்கப்படுவதினால் கல்லீரல் பழுதடைகின்றது.
Rh நோய்
ஒத்தசொற்கள்Rhesus isoimmunization
சிறப்புகுழந்தை மருத்துவம், குருதியியல், transfusion medicine

உசாத்துணை தொகு

Embryology, Dr. Bernice Anantharaj, Chrisolite Publications, chennai