எரித்ரைட்டு

எரித்ரைட்டு (Erythrite) என்பது Co3(AsO4)2•8H2O. என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிமம் ஆகும். சிவப்பு கோபால்ட் என்ற பெயரிலும் அழைக்கப்படும் இக்கனிமம் கோபால்ட்டின் இரண்டாம் நிலை நீரேற்று கோபால்ட் ஆர்சனேட்டு கனிமம் ஆகும். கோபால்ட் கனிமப் படிவுகளின் மேற்பரப்பில் இயல்பாகக் கிடைக்கும் எரித்ரைட்டும் அன்னாபெர்கைட்டும் (Ni3(AsO4)2•8H2O) ஒரு முழுமையான கனிமத்தொடராக (Co,Ni)3(AsO4)2•8H2O.என்ற பொது வாய்ப்பாட்டால் குறிப்பிடப்படுகின்றன. உருவாகின்றன.

எரித்ரைட்டு
Erythrite
எரித்ரைட்டு படிகங்கள்
பொதுவானாவை
வகைஆர்சனைட்டு கனிமம்
விவியனைட்டு குழு
வேதி வாய்பாடுCo3(AsO4)2·8H2O
இனங்காணல்
நிறம்செங்கற் சிவப்பு, வெளிர் ரோசா, அல்லது இளஞ் சிவப்பு
படிக அமைப்புஒற்றைச்சரிவு
ஒளியியல் பண்புகள்ஈரச்சு(+)
ஒளிவிலகல் எண்nα = 1.626 - 1.629 nβ = 1.662 - 1.663 nγ = 1.699 - 1.701
இரட்டை ஒளிவிலகல்δ = 0.073
மேற்கோள்கள்[1][2][3]
மொராக்கோவில் கிடைக்கும் எரித்ரைட்டு

எரித்ரைட்டு ஒற்றைச் சரிவு படிகத்தொகுதியாகப் படிகமாகிறது. பட்டக வடிவில் உருவாகும் இப்படிகங்கள் செங்கற் சிவப்பு, சாம்பல் நிறப் பழுப்பு நிறங்களில் கோபால்ட் ஆர்சனைடு கனிமமாகக் காணப்படுகின்றன. முழுமையான படிகங்களாக இவை அரிதாக உருவாகின்றன என்றாலும் படிகங்கள் பட்டக வடிவிலும், நீண்ட நெடுக்கு வரிகளைக் கொண்ட கோள வடிவிலும், சிறுநீரக வடிவிலும் இயற்கையில் காணப்படுகின்றன.

எரித்ரைட்டு முதன்முதலில் 1832 ஆம் ஆண்டில் செருமனியில் உள்ள சேக்சானி மாவட்டம் [3], சிக்னிபெர்க் நகரத்தில் கண்டறியப்பட்டு விவரிக்கப்பட்டது. கிரேக்க மொழிச் சொல்லான சிவப்பு என்ற பொருள் [2] கொண்ட எரித்ரோசு என்ற சொல்லில் இருந்து எரித்ரைட் என்ற பெயரைப் பெற்றது. எரித்ரைட்டு முதலில் ஒரு முக்கியமான கனிமமாகக் கருதப்படவில்லை என்றாலும் வளவாய்ப்பு தேடுநர்கள் பின்னர் கோபால்ட் மற்றும் வெள்ளி தனிமங்களுக்கு இக்கனிமம் வழிகாட்டும் என நம்பினர்.

கோபால்ட் படிவுகள் ஆக்சிசனேற்றம் அடைவதால் எரித்ரைட்டு உண்டானது எனக் குறிப்பிடுகின்றனர். ஆக்சைடு மண்டலங்களில் Co–Ni–As தனிமங்கள் கொண்ட படிவுகளாக இக்கனிமம் அறியப்படுகிறது. கோபால்டைட்டு, சிக்கூட்டெரூடைட்டு, சிம்பிளெசைட்டு, ரோசெலைட்டு-பீட்டா, சிகோரோடைட்டு பார்மாக்கோசிடரைட்டு, அடமைட்டு, மோரெனோசைட்டு, ரெட்கெர்சைட்டு, மாலகைட்டு [1] ஆகிய கனிமங்களுடன் இணைந்து இது காணப்படுகிறது.

ஒண்டாரியோவில் உள்ள கோபால்ட்டு நகரம், செருமனியின் சேக்சானியில் உள்ள சிக்னீபெர்க் நகரம், செக் குடியரசிலுள்ள யாச்சிமோவ், இங்கிலாந்திலுள்ள கார்ன்வால், மொராக்கோ, இடாகோ, சாரா அலிசீயா சுரங்கம், மெக்சிகோ, குயின்சுலாந்து, தெற்கு ஆத்திரேலியா [1] போன்ற பகுதிகளில் எரித்ரைட்டு கனிமம் கிடைக்கிறது.

பிற வகைகள்

தொகு

நிக்கல் வகை அன்னாபெர்கைட்டு இளம் பச்சை நிறத்தில் நிக்கல் ஆர்சனைடு வடிவில் கிடைக்கிறது. எரித்ரைட்டிலுள்ள கோபால்ட் சில சமயங்களில் இரும்பு. நிக்கல், கால்சியத்தால் இடப்பெயர்ச்சியடைந்து மூன்று வேறு வகையான கனிமங்களை உருவாக்குகிறது. பாராசிம்பிள்சைட்டு (இரும்பு) ஓம்சைட்டு (மக்னீசியம்), கோட்டிகைட்டு (துத்தநாகம்) என்பன அக்கனிமங்களாகும்.

மேற்கோள்கள்

தொகு

.

"https://ta.wikipedia.org/w/index.php?title=எரித்ரைட்டு&oldid=4129503" இலிருந்து மீள்விக்கப்பட்டது