எருக்கலக்கோட்டை
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
எருக்கலக்கோட்டை தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வட்டத்தில் ராஜேந்திரபுரம் ஊராட்சியில் அமைந்துள்ள ஒரு குக்கிராமம் ஆகும். இவ்வூரின் எல்லையில் அய்யனார் கோவில் மற்றும் அறந்தாங்கி-பட்டுக்கோட்டை மாநில நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இக்கிராமத்தில் நடுவில் அரசடி நாகம்மாள், மற்றும் விநாயகர் கோவில்களும் அமைந்துள்ளது. இவ்வூரில் அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது.
எருக்கலக்கோட்டை | |
---|---|
கிராமம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | புதுக்கோட்டை |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
பின்கோடு | 614 624 |
மக்களவைத் தொகுதி | சிவகங்கை மக்களவைத் தொகுதி |
மாநில சட்டமன்றத் தொகுதி | ஆலங்குடி |
எருக்கலக்கோட்டையானது ஆலங்குடி சட்டமன்றதொகுதியிலும், சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியிலும் அமைந்துள்ளது. எருக்கலக்கோட்டை அஞ்சல் குறியீட்டு எண் 614 624. இக்கிராமமானது அறந்தாங்கியில் இருந்து 7 கி.மீ., பட்டுக்கோட்டையில் இருந்து 41 கி.மீ., புதுக்கோட்டையில் இருந்து 30 கி.மீ., ஆலங்குடியில் இருந்து 25 கி.மீ. மற்றும் கீரமங்கலத்திலிருந்து 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இக்கிராமத்தில் அதிகமாக அம்பலக்காரர் (முத்தரையர்)களும், அதற்கு அடுத்தபடியாக செட்டியார் சமுதாயத்தினரும் வாழ்ந்து வருகின்றனர்.[சான்று தேவை]
பள்ளிகள்
தொகு- அரசு உயர்நிலைப்பள்ளி
- ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி
தெருக்கள்
தொகு- எருக்கலக்கோட்டை அம்பலக்காரர் குடியிருப்பு
- பூசாரிக்குடியிருப்பு
- வடக்கிக்காடு
- எருக்கலக்கோட்டை செட்டியார் குடியிருப்பு
அரசு அலுவலகம்
தொகு- கிராம நிர்வாக அலுவலகம்
- அஞ்சல் அலுவலகம்
- அங்கன்வாடி
கோவில்கள்
தொகு- ஸ்ரீ அய்யனார் கோவில்
- ஸ்ரீ முனிக்கோவில்
- ஸ்ரீ சித்தி விநாயகர் கோவில்
- ஸ்ரீ அரசடி நாகாம்மாள் கோவில்
- ஸ்ரீ மன்மதசுவாமி கோவில்
- ஸ்ரீ முருகன் கோவில்