எருசலேம் கொடி

எருசலேம் கொடி இசுரேலிய தேசியக் கொடியை அடிப்படையாகக் கொண்டது. இது தலிட்டினை அல்லது யூத வேண்டுதல் போர்வையினை நினைவூட்டும் இரு கிடையான நீலக் கோடுகளைக் கொண்டது. நடுவில் எருசலேம் சின்னத்தினைக் கொண்டுள்ளது. செங்குத்தான கொடி சிலவேளைகளில் சடங்கு விழாக்களில் பாவிக்கப்படும்.[1]


எருசலேம்
Flag of Jerusalem.svg
பிற பெயர்கள் எருசலேம் மாநகரக் கொடி

இக் கொடி 1949 இல் இசுரேல் உருவாக்கிய (நகரின் மேற்குப் பகுதியில்) எருசலேம் மாநகர அரசு நடத்திய போட்டியினைத் தொடர்ந்து எடுத்துக்கொள்ளப்பட்டது. இது 1967 ஆறு நாள் போர் போரைத் தொடர்ந்து ஐக்கிய எருசலேமின் கொடியாகியது.

மேற்கோள்கள்தொகு

  1. "Jerusalem (Israel)". 11 April 2015 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எருசலேம்_கொடி&oldid=2144738" இருந்து மீள்விக்கப்பட்டது