எர்பியம்(III) ஆக்சைடு

வேதிச் சேர்மம்

எர்பியம்(III) ஆக்சைடு (Erbium(III) oxide) என்பது Er2O3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இலாந்தனைடு உலோகமான எர்பியத்திலிருந்து இது தொகுப்பு முறையில் தயாரிக்கப்படுகிறது. 1843 ஆம் ஆண்டு காரல் குசுடாப் மொசாண்டரால் எர்பியம்(III) ஆக்சைடு பகுதியாக தனித்துப் பிரிக்கப்பட்டது. 1905 ஆம் ஆண்டு சியார்ச்சசு உர்பெயின் மற்றும் சார்லசு யேம்சு ஆகியோர் இதை தூய்மையான நிலையில் பிரித்து தயாரித்தனர்[2] ஒரு கனசதுரப் படிக அமைப்பைக் கொண்ட இச்சேர்மம் இளஞ்சிவப்பு நிறத்தைக் கொண்டுள்ளது. சில நிபந்தனைகளின் கீழ் எர்பியம் ஆக்சைடு ஓர் அறுகோண வடிவத்தையும் கொண்டிருக்க வாய்ப்பிருக்கிறது[3]. எர்பியம் ஆக்சைடை உள்ளிழுக்கும்போதும், வாய்வழியாக எடுத்துக் கொள்ளும்போதும் அல்லது பெரிய அளவில் இரத்த ஓட்டத்தில் செலுத்தப்படும்போதும் அது நச்சுத்தன்மையுடையதாகிறது. மனிதர்களுக்கு குறைந்த செறிவுகளில் எர்பியம் ஆக்சைடுகளின் தாக்கம் நீண்ட காலமாக தீர்மானிக்கப்படாமல் இருந்தது[4]

எர்பியம் ஆக்சைடு
Erbium oxide[1]
எர்பியம் ஆக்சைடு படிகக் கட்டமைப்பு
பெயர்கள்
வேறு பெயர்கள்
எர்பியம் ஆக்சைடு, எர்பியா
இனங்காட்டிகள்
12061-16-4 Y
ChemSpider 4298039 Y
InChI
  • InChI=1S/2Er.3O Y
    Key: VQCBHWLJZDBHOS-UHFFFAOYSA-N Y
  • InChI=1/2Er.3O/rEr2O3/c3-1-5-2-4
    Key: VQCBHWLJZDBHOS-YMHUIQTEAQ
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 159426
SMILES
  • O=[Er]O[Er]=O
பண்புகள்
Er2O3
வாய்ப்பாட்டு எடை 382.56 கி/மோல்
தோற்றம் இளஞ்சிவப்பு படிகங்கள்
அடர்த்தி 8.64 கி/செ.மீ3
உருகுநிலை 2,344 °C (4,251 °F; 2,617 K)
கொதிநிலை 3,290 °C (5,950 °F; 3,560 K)
நீரில் கரையாது
+73,920•10−6 செ.மீ3/மோல்
கட்டமைப்பு
படிக அமைப்பு கனசதுரம், cI80
புறவெளித் தொகுதி Ia-3, No. 206
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
−1897.9 கி.யூல்/மோல்
நியம மோலார்
எந்திரோப்பி So298
155.6 J•மோல்−1•கெ−1
வெப்பக் கொண்மை, C 108.5 J•மோல்−1•கெ−1
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் எர்பியம்(III) குளோரைடு]]
ஏனைய நேர் மின்அயனிகள் ஓல்மியம்(III) ஆக்சைடு, தூலியம்(III) ஆக்சைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இதுY/N?)
Infobox references

வினைகள் தொகு

காற்றில் மெல்ல மெல்ல எர்பியம் உலோகம் ஒளிமங்குகிறது. காற்றுடன் சேர்ந்து எரிந்து எர்பியம்(III) ஆக்சைடாக மாறுகிறது. இம்மாற்றம் கீழ் கண்ட சமன்பாட்டின் வழியாக காட்டப்பட்டுள்ளது[5].

4 Er + 3 O2 → 2 Er2O3.[5]

நீரில் இது கரையாது ஆனால் கனிம அமிலங்களில் கரையும். சுற்றுச்சூழலிலுள்ள ஈரத்தையும் கார்பன் டை ஆக்சைடையும் ஈர்த்துக் கொள்ளும். அமிலங்களுடன் வினைபுரிந்து தொடர்புடைய எர்பியம்(III) உப்புகளை உருவாக்கும்[3]. உதாரணமாக ஐதரோ குளோரிக் அமிலத்துடன் வினைபுரிந்து எர்பியம் குளோரைடு உப்பைக் கொடுக்கிறது.

Er2O3 + 6 HCl → 2 ErCl3 + 3 H2O

பண்புகள் தொகு

எர்பியம் ஆக்சைடுகளின் ஒரு சுவாரசியமான பண்பு இவற்றின் போட்டான்களை மாற்றும் திறன் ஆகும். அகச்சிவப்பு அல்லது கட்புலனாகும் கதிர்வீச்சு, குறைந்த ஆற்றல் ஒளியானது பல பரிமாற்றம் அல்லது ஆற்றல் ஈர்ப்பின்போது புற ஊதா அல்லது ஊதாநிறக் கதிர்வீச்சு உயர் ஆற்றல் ஒளியாக மாற்றப்படும்போது போட்டான் மேம்பாடு நிகழ்கிறது. எர்பியம் ஆக்சைடு நானோ துகள்களும் ஒளிமின்னழுத்த பண்புகளைக் கொண்டுள்ளன. பல்லடுக்கு கார்பன் நானோகுழாய்களின் முன்னிலையில் மீயொலி (20 கிலோ எர்ட்சு , 29 வாட்டு • செ.மீ - 2) பயன்படுத்துவதன் மூலம் எர்பியம் ஆக்சைடு நானோ துகள்களை உருவாகலாம். எர்பியம் கார்பாக்சியாக்சைடு, அறுகோண மற்றும் கோள வடிவியல் எர்பியம் ஆக்சைடு.போன்றவை மீயொலியைப் பயன்படுத்துவதன் மூலம் வெற்றிகரமாக உருவாக்கப்பட்ட எர்பியம் ஆக்சைடு நானோ துகள்களாகும். மீயொலியால் உருவாக்கப்பட்ட ஒவ்வோர் எர்பியம் ஆக்சைடும் தண்ணீரில் 379 நானோமீட்டர் கிளர்வின் கீழ் மின்காந்த நிறமாலையின் கட்புலனாகும் பகுதியில் கதிரியக்க ஒளிர்வு அடைகின்றன. அறுகோண எர்பியம் ஆக்சைடு கதிரியக்க ஒளிர்வு நீண்ட நிலைப்புத்தன்மை கொண்டதாகும். உயர் ஆற்றல் மாற்றங்களை (4S3/2 - 4I15/2) இது அனுமதிக்கிறது. கோள வடிவ எர்பியம் ஆக்சைடு இத்தகைய ஆற்றல் மாற்றங்களை தருவதில்லை[6].

பயன்கள் தொகு

எர்பியம் ஆக்சைடின் பயன்பாடுகள் அவற்றின் மின்னியல், ஒளியியல் மற்றும் ஒளிமின்னழுத்த பண்புகள் காரணமாக வேறுபடுகின்றன. Er+3 உடன் நானோ அளவிலான கலப்படப் பொருட்கள் அதிக ஆர்வத்தைத் தருகின்றன, ஏனெனில் அவை சிறப்புத்துகள் அளவைச் சார்ந்த ஒளியியல் மற்றும் மின்னியல் பண்புகளைக் கொண்டுள்ளன[7] எர்பியம் ஆக்சைடு கலப்படம் செய்யப்பட்ட நானோ துகள்கள் காட்சி நோக்கங்களுக்காக கண்ணாடி அல்லது நெகிழிகளில் மின் திரை போல சிதறடிக்க முடியும். நானோ துகள்களின் புரவல படிகப்பின்னல்களில் Er+3 மின்னணு மாற்ற நிறமாலையுடன் இணைக்கப்பட்ட கார்பன் நானோகுழாய்களிலுள்ள நீரிய கரைசலில் உருவாக்கப்பட்ட மீயொலி வடிவவியல் பசுமை வேதியியலில் ஒளிமின்னழுத்த நானோ துகள்களின் தொகுப்புக்கு மிகுந்த வாய்ப்பை அளிக்கிறது[6] Erbium oxide is among the most important rare earth metals used in biomedicine.[8]. உயிரிமருத்துவத்தில் பயன்படுத்தப்படும் மிக முக்கியமான அரிய மண் உலோகங்களில் எர்பியம் ஆக்சைடும் ஒன்றாகும். கார்பன் நானோகுழாய்களில் உள்ள எர்பியம் ஆக்சைடு நானோ துகள்களின் கதிரியக்க ஒளிர்வுப்பண்பு உயிரியமருத்துவ பயன்பாடுகளில் பயனுள்ளதாக இருக்கும். எடுத்துக்காட்டாக, எர்பியம் ஆக்சைடு நானோ துகள்கள் உயிரியப்படமாக்கலில் நீர்வாழ் மற்றும் நீர் அல்லாத ஊடகங்களாக விநியோகிக்க அவற்றின் மேற்பரப்பை மாற்றியமைக்க முடியும்[7].எர்பியம் ஆக்சைடுகளிள் அதிக மின்கடவா மாறிலி மதிப்பும் அதிகமான ஆற்றல் இடைவெளி மதிப்பும் குறைக்கடத்திகளில் பயன்படுகின்றன. சில சந்தர்ப்பங்களில் எர்பியம் கண்ணாடிகளுக்கு நிறமூட்டப் பயன்படுகிறது[9].அணுக்கரு எரிபொருளிலும் நியூட்ரான் நச்சாக எர்பியம் ஆக்சைடு பயன்படுத்தப்படுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. Lide, David R. (1998). Handbook of Chemistry and Physics (87 ). Boca Raton, FL: CRC Press. பக். 4–57. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8493-0594-8. https://archive.org/details/isbn_9780849305948. 
  2. Aaron John Ihde (1984). The development of modern chemistry. Courier Dover Publications. பக். 378–379. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-486-64235-2. https://books.google.com/?id=34KwmkU4LG0C&pg=PA377. 
  3. 3.0 3.1 Singh, M.P; C.S Thakur; K Shalini; N Bhat; S.A Shivashankar (3 February 2003). "Structural and electrical characterization of erbium oxide films grown on Si(100) by low-pressure metalorganic chemical vapor deposition". Applied Physics Letters 83 (14): 2889. doi:10.1063/1.1616653. http://apl.aip.org/resource/1/applab/v83/i14/p2889_s1?isAuthorized=no. பார்த்த நாள்: April 17, 2012. 
  4. "Erbium Biological Action". Archived from the original on மார்ச்சு 3, 2016. பார்க்கப்பட்ட நாள் April 9, 2012.
  5. Emsley, John (2001). "Erbium" Nature's Building Blocks: An A-Z Guide to Elements.. Oxford, England, Uk: Oxford University Press. பக். 136–139. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-19-850340-8. 
  6. 6.0 6.1 Radziuk, Darya; Andre Skirtach; Andre Geßner; Michael U. Kumke; Wei Zhang; Helmuth M€ohwald; Dmitry Shchukin (24 October 2011). "Ultrasonic Approach for Formation of Erbium Oxide Nanoparticles with Variable Geometries". Langmuir 27 (23): 14472–14480. doi:10.1021/la203622u. பப்மெட்:22022886. 
  7. 7.0 7.1 Richard, Scheps (12 February 1996). "Upconversion laser processes". Progress in Quantum Electronics 20 (4): 271–358. doi:10.1016/0079-6727(95)00007-0. https://zenodo.org/record/1258293/files/article.pdf. 
  8. Andre, Skirtach; Almudena Javier; Oliver Kref; Karen Kohler; Alicia Alberola; Helmuth Mohwald; Wolfgang Parak; Gleb Sukhorukov (2006). "Laser-Induced Release of Encapsulated Materials inside Living Cells". Angew. Chem. Int. Ed. 38 (28): 4612–4617. doi:10.1002/anie.200504599. பப்மெட்:16791887. http://www.df.uba.ar/users/bragas/Optica%20en%20la%20nanoescala/Papers/2006_Skirtcah_AngewChem%20inte_Nanoheaters.pdf. பார்த்த நாள்: April 15, 2012. 
  9. Lide, David (1998). Handbook of Chemistry and Physics. Boca, Raton Fl: CRC Press. பக். 4–57. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0849305948. https://archive.org/details/isbn_9780849305948. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=எர்பியம்(III)_ஆக்சைடு&oldid=3923297" இலிருந்து மீள்விக்கப்பட்டது