எர்மன் சாமுவேல் பிளாக்

எர்மன் சாமுவேல் பிளாக் (Herman Samuel Bloch) (சூன் 15, 1912 – சூன் 16, 1990) ஒரு அமெரிக்க வேதியியலாளரும் மற்றும் கண்டுபிடிப்பாளரும் ஆவார். பிளாக், மோட்டார் வாகனங்களின் வெளியேற்றிகளில் இருந்து வரும் புகையிலிருந்து மாசுபடுத்திகளை நீக்கம் செய்யும் வினையூக்க மாற்றிக் கருவி ஒன்றைக் கண்டுபிடித்தார். [1] பிளாக் 270-இற்கும் மேற்பட்ட காப்புரிமங்களுக்கான கண்டுபிடிப்புகளுக்கு உரிமையானவர் ஆவார். [2] 1989 ஆம் ஆண்டில் பிளாக் வேதி முன்னோடி விருதினை (Chemical Pioneer Award)அமெரிக்க வேதியியலர் நிறுவனத்திடமிருந்து பெற்றார்.[3] இவர் பயன்பாட்டு வினைத்தாக்கவியலில் எர்னஸ்ட் ஜே. அவுட்ரி விருதினையும் [2] 1974 ஆம் ஆண்டில், தொழில்முறை மற்றும் பொறியியல் வேதியியல் துறையில் எகர் வி.வின்னர்ஸ் விருதினையும்[2] மற்றும் 1971 ஆம் ஆண்டில் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்திடமிருந்து ரிச்சர்ட் ஜே. கோக்சு நினைவு விருது மற்றும் விரிவுரையாளர் தகுதி ஆகியவற்றையும் பெற்றார்.[4] பிளாக் தேசிய அறிவியல் கழகத்திற்கு 1975 ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]

வாழ்க்கை தொகு

பிளாக், இலினொய், சிகாகோவில் பிறந்தார். இவரது பெற்றோர் யுக்ரைனிய யூதர்கள் ஆவர். [5][6] ஆரோன் மற்றும் எஸ்தர் பிளாக் ஆகியோர் வேறுநாட்டிலிருந்து வந்து குடியேறியவர்கள் ஆவர்.[2]இவர் தனது இளங்கலை மற்றும் கரிம வேதியியலில் முனைவர் பட்டத்தை சிக்காகோ பல்கலைக்கழகத்திலிருந்து பெற்றார்.

மேற்கோள்கள் தொகு

  1. The New York Times:Obituaries:Herman S. Bloch, 78, Chemist and Inventor, Published: June 19, 1990
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 National Academies Press, V.87
  3. American Institute of Chemists:Chemical Pioneer Award Winners:
  4. "The North American Catalysis Society (NACS)". Archived from the original on 2012-04-26. பார்க்கப்பட்ட நாள் 2011-12-16.
  5. Martin Harry Greenberg, The Jewish lists: physicists and generals, actors and writers, and hundreds of other lists of accomplished Jews, Schocken Books (1979), p. 113
  6. Abraham Scheinberg & Harry Cohen, American Jews: Their Lives and Achievements: A Contemporary Biographical Record, vol. 2, American Jewish Literary Foundation (1958), p. 784
"https://ta.wikipedia.org/w/index.php?title=எர்மன்_சாமுவேல்_பிளாக்&oldid=3170895" இலிருந்து மீள்விக்கப்பட்டது