எலிசபெத் மெவெசிக்வா

எலிசபெத் மெவெசிக்வா (Elizabeth Mwesigwa) (பிறப்பு 1994) இவர் ஓர் உகாண்டாவின் மாற்றுத் திறனாளர் விளையாட்டுக்களின் பூப்பந்தாட்ட வீரராவார். எஸ்.எல் 3 பிரிவில் நாட்டின் முதலிடத்தில் உள்ளார். இவர் 2018 இல் உகாண்டாவின் சர்வதேச பூப்பந்தாட்ட மாற்றுத் திறனாளர் விளையாட்டுகளில் தங்கப்பதக்கம் வென்றார். பிப்ரவரி 2020 நிலவரப்படி, பூப்பந்தாட்ட உலக கூட்டமைப்பால் மகளிர் பூப்பந்தாட்ட மாற்றுத் திறனாளர் விளையாட்டுகளில் எஸ்.எல் 3 பிரிவில் உலகளவில் 12 வது இடத்தைப் பிடித்தார் [1]

பின்னணி மற்றும் கல்விதொகு

இவெங்கா மாவட்டத்தின் நைகோபியாவில், காட்பிரே கக்கெய்ர் என்பரின் ஆறு குழந்தைகளில் முதல் குழந்தையாக மெவெசிக்வா பிறந்தார் [2] . முழங்கால்களுக்குக் கீழே இரு கால்களிலும் பிறவிக் குறைபாட்டுடன் பிறந்தார். டொரோரோவில் தனது கைகால்களுக்கு ஒரு அறுவை சிகிச்சை செய்து கொண்ட பிறகு, இவர் இகாங்காவுக்குத் திரும்பி, இகாங்கா சிறுவர் பள்ளியில் சேர்ந்தார். பின்னர் ஜின்ஜா பிரைட் அகாதமியில் 2009 ஆம் ஆண்டில் தனது முதன்மை விடுப்புத் தேர்வுகளை முடித்தார் [3] . 2010 ஆம் ஆண்டில், இவர் கம்பாலாவுக்குச்சென்று நகுரு உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தார். ஆனால் 2011 ஆம் ஆண்டில் பள்ளியிலிருந்து விலகினார்.

பின்னர் இவர் 2012 இல் உருவாண்டாவின் கிகாலிக்கு இடம் பெயர்வதற்கு முன்பு ஒரு தெரு வணிகராக இருந்தார் [3] .

விளையாட்டுதொகு

2013 ஆம் ஆண்டில், கிகாலியில் தங்கியிருந்தபோது கூடைப்பந்து விளையாட்டுக்கு அறிமுகமானார். [2] . 2015 ஆம் ஆண்டில் கம்பாலாவுக்குத் திரும்பியபோது, ஆங்கில மாற்றுத் திறனாளர் பூப்பந்து பயிற்சியாளரான ரிச்சர்ட் மோரிசுடன் ஒரு வாரம் நீடித்த பயிற்சி வகுப்பில் கலந்துகொள்வதற்கு முன்பு பல சக்கர நாற்காலி கூடைப்பந்து விளையாட்டுகளில் பங்கேற்றார். இவர் மாற்றுத் திறனாளர் பூப்பந்து விளையாட்டுகளில் 2015, 2016 ஆகிய ஆண்டுகளில் பயிற்சி பெற்று, இறுதியில் 2017 ஆம் ஆண்டில் தனது முதல் போட்டியில் (உகாண்டா மாற்றுத் திறனாளர் சர்வதேசப் பூப்பந்து விளையாட்டு) பங்கேற்று தங்கப்பதக்கம் வென்றார்.

2018 ஆம் ஆண்டில், கம்பாலாவில் நடைபெற்ற ஆப்பிரிக்க மாற்றுத் திறனாளர்-பூப்பந்துப் போட்டியில் தங்கம் வென்றார். பெண்கள் எஸ்எல் 3 இறுதிப் போட்டியில் நைஜீரியாவின் கிப்ட் இஜியோமா சுக்வுமேகாவை வீழ்த்தினார் [4]

2019 ஆம் ஆண்டில், இவர் மீண்டும் இரண்டாவது பஸ்ஸா- துபாய் மாற்றுத் திறனாளர்-சர்வதேசப் போட்டிகளில் உகாண்டாவை பிரதிநிதித்துவப்படுத்தினார்.

ஒலிம்பிக்கிற்கான தகுதிதொகு

2019 ஆம் ஆண்டில், சுவிட்சர்லாந்தின் பாசலில் நடைபெற்ற மொத்த பிஎம்டபிள்யு மாற்றுத் திறனாளர் சர்வதேச பூப்பந்துப் போட்டிகளில் விளையாடிய 5 நபர்களில் உகாண்டா அணியின் ஒரு பகுதியாக இவர் இருந்தார் [5] [6] . இவர் மகளிர் எஸ்.எல் 3 பிரிவு பி, மகளிர் எஸ்.எல் 3 - எஸ்யூ 5 இரட்டையர் (ஆஷா கிப்வேனே முனெனேவுடன் கூட்டு சேர்ந்து) மற்றும் கலப்பு இரட்டையர் போட்டிகளிலும் இடம்பிடித்தார். அங்கு இவர் நெல் காசிரியுடன் கூட்டு சேர்ந்தார் [7]

முன்னதாக, தாய்லாந்து, பிரான்ஸ், ஆத்திரேலியா, யப்பான் ஆகிய நாடுகளில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க உதவுவதற்கும், பின்னர் 2020 இணை ஒலிம்பிக் விளையாட்டுக்களுக்குத் தகுதி பெறுவதற்காக இவரின் புள்ளிகளைப் பெற உதவுவதற்கும் இவருக்கு உகாண்டா நாடாளுமன்ற உறுப்பினர்கள் 10,000 அமெரிக்க டாலர்களை பங்களிக்கத் தீர்மானித்திருந்தனர். [8] [9] .

விருதுகள் மற்றும் அங்கீகாரம்தொகு

2018 ஆம் ஆண்டின் மாற்றுத் திறனாளர்-ஆப்பிரிக்க பூப்பந்துப் போட்டிகளில் உகாண்டாவின் தங்கப் பதக்கம் வென்றவர் என்ற அங்கீகாரத்திற்காக 2019 ஆம் ஆண்டில், மவெசிக்வாவை மாலெங்கோ அறக்கட்டளை 'டைக்ரஸ் ஹானோரி' என்று பெயரிட்டது [10]

வெளி இணைப்புகள்தொகு

குறிப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=எலிசபெத்_மெவெசிக்வா&oldid=3026907" இருந்து மீள்விக்கப்பட்டது