எலெக்ட்ரான் (ஏவூர்தி)

எலெக்ட்ரான் ஏவூர்தி (Electron) இரண்டு நிலைகளைக் கொண்டது. இது சிறு செயற்கைக் கோள்களை ஏவும் வண்ணம் வடிவமைக்கப்பட்ட ஏவூர்தி ஆகும். அமெரிக்காவின் ராக்கெட் லேப் எனும் நிறுவனம் வணிக ரீதியில் 150 கி.கி எடையுடைய செயற்கைக் கோள்களை ஏவும் பொருட்டு இவ்வேவூர்தியை உருவாக்கியது. 2016 டிசம்பர் அன்று ஏவூர்தியானது செலுத்தத் தகுதியான நிலையை எட்டிவிட்டதாக அறிவிக்கப்பட்டது.[1]

ஏவுதல்

தொகு

25 மே 2017 அன்று செய்யப்பட்ட முதல் சோதனை ஏவுதலில் இதனால் தேவையான உயரத்தை எட்ட இயலவில்லை. ஆனாலும் ஏவூர்தியின் செயல்பாடு திருப்தியளிப்பதாக அறிவிக்கப்படது.

தொழில் நுட்ப விபரங்கள்

தொகு

எலெக்ட்ரான் ஏவூர்தியின் இரு நிலைகளும் ஒரே விட்டத்தைக் கொண்டவை (1.2 மீ, 3 அடி 11 அங்குலம்). இவற்றின் எரிபொருளாக தூய்மையாக்கப்பட்ட மண்ணெண்ணெய் மற்றும் திரவ ஆக்ஸிஜன் பயன்படுத்தப்படுகிறது. இந்த ஏவூர்தியின் முதல் நிலையில் ஒன்பது ரூதர்போர்டு இயந்திரங்களும் இரண்டாம் நிலையில் ஒரு வெற்றிட ரூதர்போர்டு இயந்திரமும் பொருத்தப்பட்டிருக்கும். கரிமம் கொண்டு எடை குறைவாக இந்த ஏவூர்தி தயாரிக்கப்பட்டுள்ளது.

தயாரிப்பின் நோக்கம்

தொகு

எலெக்ட்ரான் ஏவூர்தி 150 கிலோகிராம்கள் எடையுடைய சிறு செயற்கைக்கோள்களை சூரிய ஒத்திசைவுப் பாதையில் நிலைநிறுத்தும் வண்ணம் வடிவமைக்கப்பட்டது. 4.9 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான இவ்வேவூர்தியின் மூலம் வருடத்திற்கு 100 செயற்கைக் கோள்களை ஏவுவதாகத் திட்டமிடப்பட்டிருந்தது.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=எலெக்ட்ரான்_(ஏவூர்தி)&oldid=2919239" இலிருந்து மீள்விக்கப்பட்டது