எல். ஏ. கோவிந்தராகவ அய்யர்

இந்திய வழக்கறிஞர்

திவான் பகதூர் லால்பேட்டை அருணாசல கோவிந்தராகவ ஐயர் (1867-1935) என்பவர் ஒரு இந்திய வழக்கறிஞர், இறையியலாளர், இந்திய விடுதலை செயற்பாட்டாளர், அரசியல்வாதி ஆவார்.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்விதொகு

கோவிந்தராகவ அய்யர் சென்னை மாகாணத்தின் சித்தூரில் பிறந்தார். கலைப் பிரிவில் பட்டம் பெற்ற இவர், சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றார் . கோவிந்தராகவ ஐயர், ஜனவரி 9, 1903 இல் சென்னை சட்டமன்றக் குழுவின் அதிகாரப்பூர்வமற்ற உறுப்பினரானார்.

1911 இல், கோவிந்தராகவ ஐயர் மதராசு உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அப்பதவியில் 1911 முதல் 1931 வரை பணியாற்றினார். இவர் மெட்ராஸ் மகாஜன சபையின் துணைத் தலைவராகவும் பணியாற்றினார். மற்றும் 1921 இல் தேசிய லிபரல் கூட்டமைப்பின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கோவிந்தராகவ ஐயர் 1911 முதல் 1918 வரை பச்சையப்பா கல்லூரியின் அறங்காவலர்களில் ஒருவராக பணியாற்றினார்.

கௌரவங்கள்தொகு

கோவிந்தராகவ ஐயருக்கு 1906 ஆம் ஆண்டு திவான் பகதூர் என்ற பட்டம் வழங்கப்பட்டது.

குறிப்புகள்தொகு

  • Great Britain India Office (1905). The India List and India Office List. London: Harrison and Sons. பக். 75.