எல். ரமணா
இந்திய அரசியல்வாதி
எல் . ரமணா (L. Ramana) (பிறப்பு; 1961 செப்டம்பர் 4 , ஜக்டியால்) என்று பிரபலமாக அறியப்படும் லகந்துலா ரமணா (Lgandula Ramana)[1] தெலங்காணா மாநிலத்தின் தெலுங்கு தேசம் கட்சியின் முன்னாள் தலைவர் ஆவார். இவர் தற்போது கரீம்நகரில் பாரத் இராட்டிர சமிதி அரசியல்வாதியாவார்.[2]
லகந்துலா ரமணா | |
---|---|
ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் ரமணா | |
தெலங்காணா சட்ட மேலவை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2021 | |
தெலங்காணாவில் தெலுங்கு தேசம் கட்சியின் முதல் தலைவர் | |
பதவியில் 30 செப்டம்பர் 2015 – 9 ஜூலை 2021 | |
முன்னையவர் | பதவி உருவாக்கப்பட்டது |
பின்னவர் | பக்கனி நரசிம்முலு |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 4 செப்டம்பர் 1961 ஜக்டியால், கரீம்நகர், தெலங்காணா |
அரசியல் கட்சி | பாரத் இராட்டிர சமிதி (since 2021) |
பிற அரசியல் தொடர்புகள் | தெலுங்கு தேசம் கட்சி (2021 வரை) |
துணைவர் | சந்தியா (8 ஆகஸ்ட் 1990) |
வாழிடம்(s) | ஜக்டியால், ஐதராபாத்து |
சொந்த வாழ்க்கை
தொகுஇளங்கலை அறிவியல் பட்டம் பெற்ற இவர் சமூக சேவகராகவும் உள்ளார். சந்தியா என்பவரை 1990 ஆகஸ்ட் 8 அன்று திருமணம் செய்து கொண்டார். தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் எல். மணிகண்டன் மருத்துவராகவும் இளைய மகன் எல். கார்த்திகேயன் துபாய் அமிட்டி பல்கலைக்கழகத்தில் இளம் வணிகவியல் பட்டதாரியாவார்.
வைகித்த பதவிகள்
தொகு- 2009 முதல் 2014 வரை ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவை உறுப்பினராக இருந்தார்.
- ஆந்திரப் பிரதேச காதி கிராமத் தொழில் வாரியத் தலைவராக இருந்தார்.
- பதினொராவது மக்களவை உறுப்பினராக 1996 முதல் 1998 வரை இருந்தார்.
- 1994-96 வரை ஆந்திர சட்டப் பேரவையின் உறுப்பினராக இருந்தார். அப்போது கைத்தறி மற்றும் ஜவுளித்துறை அமைச்சராக பணியாற்றினார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "L Ramana Profile Telangana". TNP (Hyderabad). 19 May 2016. http://www.telangananewspaper.com/l-ramana-profile-wiki-tdp-caste-pdf/.
- ↑ "Naidu’s yatra boosts cadre morale". The Hindu (Karimnagar). 29 December 2012. http://www.thehindu.com/news/states/andhra-pradesh/naidus-yatra-boosts-cadre-morale/article4250059.ece.