எழிமலை நன்னன்
எழிமலை நன்னன் (Ezhimalai Nannan) (கி மு மூன்றாம் நூற்றாண்டு), சங்க கால, தென்னிந்தியாவின் மூசிக நாட்டின் மன்னர் ஆவார். மூசிக நாட்டின் தலைநகரம் எழிமலை நகரம் ஆகும். இவர் மௌரியப் பேரரசரான பிந்துசாரரின் சமகாலத்தவர் எனக் கருதப்படுகிறார். அண்டை நாட்டின் வலுமிக்க சேரர்களை, எழிமலை நன்னன் வென்றதால், சங்க கால இலக்கியங்கள் நன்னனை மிக வீர மிக்க மன்னராக கொண்டாடுகிறது.[1]
அரபிக்கடலின் கடற்கரையில் அமைந்த புகழ்பெற்ற எழிமலை துறைமுகம், பன்னாட்டு வணிக மையமாக விளங்கியது. கி பி 11-ஆம் நூற்றாண்டில், சோழ - சேரர்களுக்கு இடையே நடந்த போர்களில், எழிமலைப் பகுதி பெரிய போர்க்களமாக விளங்கியது.
கி பி பத்தாம் நூற்றாண்டில் ஆதுலன் என்பவரால் எழுதப்பட்ட மூசிக வம்சம் எனும் நூல் மூலம், குறிப்பாக மூசிக அரச மரபினரைப் பற்றியும், பொதுவாக வடக்கு கேரள நாட்டைப் பற்றியும் தெளிவாக அறிய முடிகிறது.
சிறந்த போர்த்திறமை கொண்ட மூசிக நாட்டு மன்னர் நன்னன், தற்கால கேரள மாநிலத்தின் வடக்குப் பகுதியான மலபார் பகுதியின், கண்ணூர், கோழிக்கோடு, வயநாடு, மலப்புறம், பாலக்காடு மாவட்டங்கள், துளு மற்றும் குடகு பகுதிகள், எழிமலை நாட்டின் பகுதிகளாக இருந்தது.[2] சங்க கால தமிழகத்தின் ஐந்து முக்கிய அரச மரபுகளான சேரர், பாண்டியர், சோழர், ஆய் ஆகியவற்றுடன் மூசிக நாடும் ஒன்றாக விளங்கியது.
எழிமலை நன்னன் எழிமலையின் சக்தி வாய்ந்த ஆட்சியாளராக விளங்கினார். நன்னன் தனது ஆட்சிக் காலத்தில், எழிமலை நாட்டை தற்கால கூடலூர் மற்றும் கோயம்புத்தூர் வரை விரிவுபடுத்தினார்.தற்கால வயநாடு, கூடலூர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் வடக்குப் பகுதிகளில் தனது ஆட்சியை விரிவுபடுத்தினார்.
பாழி எனுமிடத்தில் நடந்த போரில் சேரர்களை நன்னன் வெற்றி கொண்டான்.
சங்க கால இலக்கியங்களில் எழிமலை மக்களின் வாழ்க்கைத் தரத்தை விளக்கப்பட்டுள்ளது. எழிமலை நன்னனின் அரசவைக் கவிஞர் பரணர், சேரர்களை வென்ற பாழிப் போரில், நன்னனின் வெற்றிகள் குறித்து பாடியுள்ளார். சேரர் மற்றும் அண்டை நாட்டு மன்னர்களை வெற்றி கொண்ட நன்னனின் புகழ் குறித்து அகநானூறு, நற்றிணை போன்ற சங்க கால இலக்கியங்கள் குறித்துள்ளது.
இறுதியாக சேர மன்னர் நன்முடி சேரல் என்பவர், வாகைப்பெரும் துறை எனுமிடத்தில் நடந்த போரில், எழிமலை நன்னனை வெற்றி கொண்டு, மூசிக நாட்டை சேர நாட்டுடன் இணைத்துக் கொண்டார்.[3][4]
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Rediscovery of Ezhimala". Google Books. பார்க்கப்பட்ட நாள் 2015-07-10.
- ↑ "Kerala History and its Makers".
- ↑ Sreedhara Menon, A. A Survey of Kerala History. (மலையாளம்)
- ↑ Panikkassery, Velayudhan. MM Publications (2007), Kottayam India