எவன் காட்டன்

சர் ஹாரி எவன் அகஸ்டே காட்டன் (24 மே 1868 - 7 மார்ச் 1939), எவன் காட்டன் அல்லது ஹா. இ. அ. காட்டன் என்று அழைக்கப்படுகிறார், இவர் விடுதலைக் கட்சியினைச் சேர்ந்த அரசியல்வாதி, சட்டத்தரணி, நிர்வாகி, பத்திரிகையாளர், வரலாற்றாசிரியர் மற்றும் எழுத்தாளர் ஆவார். 1907 இல் முதன்முதலில் வெளியிடப்பட்ட இவரது கல்கத்தா ஓல்டு அண்ட் நியூவிற்காக இவர் பரவலாக அறியப்படுகிறார்.[1]

சர் ஹாரி எவன் அகசுதே காட்டன்
பிறப்புமே 27, 1868
மிட்னாபூர், பிரித்தானிய இந்தியா
இறப்புமார்ச் 7, 1939
ஈசுட்டுபர்ன், இங்கிலாந்து
பணிவரலாற்றாளர்
வாழ்க்கைத்
துணை
நோரா

தொடக்க காலங்களில்

தொகு

இவர் சர் ஹென்றி காட்டன் ,ஐரிய நாட்டினைச் சேர்ந்த மேரி ரியான் தம்பதியினரின் மகன் ஆவார். இவரது தந்தை இந்திய தேசிய காங்கிரசின் 1904 அமர்வில் தலைமை தாங்கினார், இவர் மௌண்ட் லிபான் பள்ளியிலும் பின்னர் செர்போர்ன் பள்ளியிலும் தனது ஆரம்ப பள்ளி படிப்பை முடித்தார்.[1]

தொழில்முறை வாழ்க்கை

தொகு

காட்டன், 1893 முதல் 1908 வரை கல்கத்தா உயர்நீதிமன்றத்தில் பயிற்சி பெற்றார். இவர் கல்கத்தா மாநகராட்சி உறுப்பினராக பணியாற்றினார்.[1] இவர் தி கார்டியனின் நிருபராக 1903 ஆம் ஆண்டு தில்லி தர்பாரில் இருந்தார். இவர் டெய்லி நியூசின் கொல்கத்தா நிருபராக பணியாற்றினார். இவர் இந்திய தேசிய காங்கிரஸின் பிரித்தானியக் குழுவின் வாராந்திர அமைப்பான இந்தியாவின் ஆசிரியர் பொறுப்பை மேற்கொண்டார். இவர் 1922 முதல் 1925 வரை வங்காள சட்ட மன்றத்தின் தலைவராக பணியாற்றினார்.[2] இவர் இந்திய வரலாற்று பதிவுகள் ஆணையத்தின் தீவிர உறுப்பினராக இருந்தார் மற்றும் 1923 முதல் 1925 வரை அதன் தலைவராக இருந்தார்.

அரசியல்

தொகு

இவான் 1906 இல் இங்கிலாந்துக்குத் திரும்பி லிபரல் கட்சியில் சேர்ந்தார். இவருடைய தந்தை 1906-1910 வரை நாட்டிங்ஹாம் கிழக்குத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.சனவரி 1910 இல், இவான் பொதுத் தேர்தலில் டல்விச்சின் தொகுதியில் போட்டியிட்டார்;

திருமணம்

தொகு

1896 ஆம் ஆண்டில், இவர் பெங்கால் ஐசிஎசு வின் வில்லியம் எச். கிரிம்லியின் மகள் நோராவை மணந்தார். இவர்களுக்கு ஒரு மகள் இருந்தார்.[3]

சான்றுகள்

தொகு
  1. 1.0 1.1 1.2 Ray, Nisith Ranjan Ray, Editor's Note in the book Calcutta Old and New, 1909/1980, pp. 1–4, General Printers and Publishers Pvt. Ltd.
  2. "West Bengal Legislative Assembly". legislativebodiesinindia.gov.in. Archived from the original on 26 ஜூன் 2007. பார்க்கப்பட்ட நாள் 29 July 2007. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. Obituary in தி டைம்ஸ், 8 March 1939, p. 18
"https://ta.wikipedia.org/w/index.php?title=எவன்_காட்டன்&oldid=3744944" இலிருந்து மீள்விக்கப்பட்டது