எஸ். என். எஸ். தொழில்நுட்பக் கல்லூரி

எஸ். என். எஸ். தொழில்நுட்பக் கல்லூரி (SNS College of Technology) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், கோயம்புத்தூரில் உள்ள கல்லூரி ஆகும். இது எஸ்.என்.எஸ் குழும நிறுவனமாக 2002 இல் நிறுவப்பட்டது. இந்த கல்லூரிக்கு அகில இந்திய தொழில்நுட்பக் குழுவானது ஒப்புதல் அளித்து, கோவை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழகம், இக்கல்லூரிக்கு 2013-14 முதல் 2017-18 வரை 5 ஆண்டு காலத்திற்கு தன்னாட்சி அந்தஸ்தை வழங்கியுள்ளது. எஸ்.என்.எஸ் தொழில்நுட்பக் கல்லூரி 'என்ஏஏசி'-இடம் ஏ + தகுதிச் சான்றுடன் அங்கீகாரம் பெற்றது.

எஸ். என். எஸ். தொழில்நுட்பக் கல்லூரி
Other name
SNS CT
வகைதனியார்
உருவாக்கம்2002
தலைவர்முனைவர் எஸ். என். சுப்பிரமணியன்
முதல்வர்முனைவர் செந்தூரபாண்டியன்
அமைவிடம்,
இணையதளம்SNS College of Technology

2002 இல் நிறுவப்பட்ட இக்கல்லூரியானது, ஸ்ரீ எஸ்.என்.எஸ் அறக்கட்டளையால் நடத்தப்படுகிறது. இந்த கல்லூரி தமிழக அரசின் அனுமதியுடன் நிறுவப்பட்டு, யுஜிசியால் அங்கீகரிக்கப்பட்டது. இது ஒரு சுய நிதி, இருபாலர் கல்வி நிலையமாகும். இது கோயம்புத்தூரின் ஊரகப் பகுதியியான சத்தியில் (தே. நெ .209) சாலையில் அமைந்துள்ளது.

இங்கு பதினான்கு இளநிலைலை படிப்புகள், ஆறு முதுநிலை படிப்புகள் மற்றும் ஏழு ஆராய்ச்சி படிப்புகள் வழங்கப்படுகிகிறது. இக்கல்லூரியில் உள்ள இயந், சிஎஸ்இ, இசிஇ, ஐடி ஆகிய நான்கு துறைகள் தேசிய அங்கீகார வாரியத்தால் (என்.பி.ஏ) அங்கீகாரம் பெற்றவை.

இளநிலை பட்டப்படிப்புகள் (பி.இ. / பி.டெக்) :

  • வானூர்தி பொறியியல்
  • வேளாண் பொறியியல்
  • ஊர்திப் பொறியியல்
  • உயிர் மருத்துவ பொறியியல்
  • குடிசார் பொறியியல்
  • குடிசார் மற்றும் திட்டமிடல் பொறியியல்
  • கணினி அறிவியல் மற்றும் பொறியியல்
  • மின் மற்றும் மின்னணு பொறியியல்
  • மின்னணு மற்றும் தொடர்பியல் பொறியியல்
  • மின்னணு மற்றும் கருவிப் பொறியியல்
  • தகவல் தொழில்நுட்பம்
  • எந்திர மின்னணுவியல் பொறியியல்
  • இயந்திர பொறியியல்
  • இயந்திரவியல் மற்றும் ஊர்திப் பொறியியல்

முதுநிலை படிப்புகள் :

  • முதுநிலை வணிக மேலாண்மை (எம்பிஏ)
  • முதுநிலை கணினி பயன்பாடு (எம்.சி.ஏ)
  • எம்.இ. கணினி அறிவியல் மற்றும் பொறியியல்
  • எம்.இ. தொடர்பியல் அமைப்பு
  • எம்.டெக். தகவல் தொழில்நுட்பம்
  • எம்.இ. பேரளவு ஒருங்கிணைச் சுற்று

ஆய்வுப் படிப்புகள் (பி.எச்.டி)

  • இயந்திர பொறியியல்
  • தகவல் தொழில்நுட்பம்
  • மின்னணு மற்றும் தொடர்பியல் பொறியியல்
  • மின் மற்றும் மின்னணுவியல் பொறியியல்
  • கணினி அறிவியல் பொறியியல்
  • குடிசார் பொறியியல்
  • வணிக மேலாண்மை

வெளி இணைப்புகள்

தொகு