எஸ். ஏ. டாங்கே

இந்திய அரசியல்வாதி

சி. அ. தாங்கே (Shripad Amrit Dange 10 அக்டோபர் 1899–22 மே 1991) இந்திய அரசியல்வாதி, பொதுவுடைமையாளர், மற்றும் தொழிற்சங்கச் செயற்பாட்டாளர் ஆவார். இந்தியப் பொதுவுடைமைக் கட்சியைத் தொடங்கியவர்களில் முன்னணியாளரும் ஆவார்.[1]

சிறீபத் அம்ரித் டாங்கே
இந்திய நாடாளுமன்றம்
வடக்கு மும்பை மக்களவைத் தொகுதி
பதவியில்
ஏப்ரல் 15, 1952 – ஏப்ரல் 4, 1957
முன்னையவர்தொகுதி அமைக்கப்பட்டது
பின்னவர்வே. கி. கிருஷ்ண மேனன்
இந்திய நாடாளுமன்றம்
தென்மத்திய மும்பை மக்களவைத் தொகுதி
பதவியில்
ஏப்ரல் 5, 1957 – மார்ச் 31, 1962
முன்னையவர்ஜெயசிறீ நெய்ஷாத் ராய்ஜி
பின்னவர்வித்தல் பாலகிருஷ்ண காந்தி
இந்திய நாடாளுமன்றம்
தென்மத்திய மும்பை மக்களவைத் தொகுதி
பதவியில்
மார்ச் 4, 1967 – திசம்பர் 27, 1970
முன்னையவர்வித்தல் பாலகிருஷ்ண காந்தி
பின்னவர்அப்துல் காதெர் சலெபாய் (Abdul Kader Salebhoy)
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு10 October 1899 (1899-10-10)
கரஞ்சிகான், மும்பை மாகாணம், இந்தியா
(தற்பொழுது மகாராட்டிரம், இந்தியா)
இறப்பு22 May 1991 (1991-05-23)
மும்பை, மகாராட்டிரம், இந்தியா

இளமைக்காலம்

தொகு

மகாராட்டிர மாநிலத்தில் நாசிக் மாவட்டத்தில் கரஞ்சிகான் என்னும் சிற்றுரில் 1899ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 10ஆம் தேதி பிறந்தார். தாங்கே கல்லூரியில் பயிலும்போதே போராட்டங்களில் கலந்து கொண்டார். இவர் 1919ஆம் ஆண்டு பம்பாய் வில்சன் கல்லூரியில் படிக்க ஆரம்பித்தபோது, அங்கே மராத்தி இலக்கியக் கழகத்தை துவக்கினார். மகாத்மா காந்தி தலைமையிலான தேசிய இயக்கத்தால் ஈர்க்கப்பட்ட தாங்கே அதில் தீவிர பங்குகொண்டார். வெளிநாட்டில் வாழும்படி நிர்ப்பந்திக்கப்பட்ட பிரபல காங்கிரசு தலைவர் லாலா லஜபதி ராய் இந்தியா திரும்பியபோது இவருக்கு பம்பாயில் பிரபல காங்கிரசு தலைவர் பாலகங்காதர திலகர் தலைமையில் தாங்கே ஒரு மாபெரும் வரவேற்புக்கு ஏற்பாடு செய்தார். இதைக் கண்ட கல்லூரி நிர்வாகம் இவரை 1920ஆம் ஆண்டு கல்லூரியிலிருந்து வெளியேற்றியது.

அரசியல் பணிகள்

தொகு

1920ஆம் ஆண்டில் ஒத்துழையாமை இயக்கத்தில் சேர்ந்தார். இந்திய விடுதலைப் போராட்டத்தில் லோக மான்ய திலகர், மகாத்மா காந்தி, சுபாசு சந்திரபோசு, சவகர்லால் நேரு போன்ற தலைவர்களுடன் இணைந்து போராடினார்.[2] கான்பூர் சதி வழக்கு, மீரட் சதி வழக்கு, போருக்கு எதிரான நடவடிக்கைகள் என பல குற்றங்கள் சுமத்தப்பட்டு மொத்தம் 16 ஆண்டுகள் சிறையிலிருந்தார். இந்தியா விடுதலை பெற்ற பிறகும் இந்திய அரசியலில் முக்கியப் பங்கு ஆற்றினார்.

பாம்பே சட்டமன்ற உறுப்பினராகவும் (1946-1951) இந்திய நாடாளுமன்ற உறுப்பினராக 1957ஆம் ஆண்டிலும் 1967ஆம் ஆண்டிலும் பதவி வகித்தார். 1978 வரை இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் தலைவர் பதவியில் இருந்தார். 1981-இல் இக்கட்சியிலிருந்து வெளியேற்றப் பட்டார். பின்னர் அனைத்திந்திய பொதுவுடைமைக் கட்சியிலும், அதிலிருந்து விலகி ஒன்றுபட்ட பொதுவுடைமைக் கட்சியிலும் சேர்ந்தார். மகாராட்டிய மாநிலம் உருவாவதில் முக்கியப் பங்காற்றினார். இந்திரா காந்தி பிரகடனம் செய்த நெருக்கடி நிலைமைச் சட்டத்தை ஆதரித்தார்.

எழுத்தாளராக

தொகு

சோசலிஸ்ட் என்னும் வார பத்திரிகையைத் தொடங்கினார். நூல்களும் எழுதியுள்ளார். இவற்றில் காந்தியும் லெனினும், இலக்கியமும் மக்களும், இந்தியா-அடிப்படை பொதுவுடைமை முதல் அடிமைத்தனம் வரை என்பன குறிப்பிடத் தக்கவை.

சோவிய ஒன்றியத்தின் விருதான ஆர்டர் ஆப் லெனின் என்னும் விருதினைப் பெற்றார்.

மேற்கோள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._ஏ._டாங்கே&oldid=3936823" இலிருந்து மீள்விக்கப்பட்டது