எ ஃபிஸ்ட்ஃபுல் ஒஃவ் டாலர்ஸ்

எ ஃபிஸ்ட்ஃபுல் ஒஃவ் டாலர்ஸ் (ஆங்கிலம்: A Fistful of Dollars, இத்தாலிய மொழி : Per un pugno di dollari ) 1964 ஆம் ஆண்டு வெளிவந்த இத்தாலிய மொழித் திரைப்படமாகும். சேர்ஜியோ லியோன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கிலிண்ட் ஈஸ்ட்வுட், மரியான் கோச் மற்றும் பலரும் நடித்துள்ளனர். இது டாலர்கள் முப்படத்தொகுதியில் வெளியான முதல் திரைப்படமாகும். ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்டு உலகெங்கும் திரையிடப்பட்டது. ஸ்பகெட்டி மேற்கத்தியப் பாணி திரைப்படங்களின் முன்னோடிப் படங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

எ ஃபிஸ்ட்ஃபுல் ஒஃவ் டாலர்ஸ்
இயக்கம்சேர்ஜியோ லியோனி
தயாரிப்புஅரிகோ கொழும்பு
ஜோர்ஜியோ பாபி
கதைஎ.பொன்சோனி
விக்டர் அன்ரியாஸ் கட்டேனா
சேர்ஜியோ லியோனி
ஜைம் கோமஸ் கில்
இசைஎன்னியோ மோரிகோனி
நடிப்புகிலிண்ட் ஈஸ்ட்வுட்
மரியான் கோச்
ஜோனி வெல்ஸ்
அந்தோனியோ பிரீத்தோ
விநியோகம்உனிடிஸ்
யுனைட்டேட் ஆர்டிஸ்ட்ஸ் (அமெரிக்கா)
வெளியீடுஇத்தாலி டிசம்பர் 10 1964
அமெரிக்கா ஜனவரி 18 1967
ஓட்டம்99 நிமிடங்கள்
மொழிஇத்தாலிய மொழி
ஆங்கிலம்
ஸ்பானிஷ்
ஆக்கச்செலவு$200,000 இலட்சம் அமெரிக்க டாலர்கள்
பின்னர்ஃபோர் எ ஃபியூ டாலர்ஸ் மோர்

மெக்சிக்க-அமெரிக்க எல்லைப்புற சிறு நகரொன்றில் இரு கும்பல்களுக்கிடையே நடைபெறும் தொடர் மோதல்களைப் பயன்படுத்தி இரு தரப்பிலும் ஆதாயம் தேட முயலும் துப்பாக்கி வீரனின் சாகசங்கள் திரைப்படத்தின் கதைக்களமாக அமைந்தது. அகிரா குரோசாவா இயக்கிய யோஜிம்போ படத்தினைப் போன்ற திரைக்கதை அமைப்பு இருந்தது. இதனால் குரோசாவா இத்திரைப்படம் மீது வழக்குத் தொடர்ந்தார். வழக்கில் டாலர்ஸ் தயாரிப்பாளர்களுக்கு $100,000 அபராதம் வழங்கப்பட்டது. திரைப்படத்தின் வசூலின் 15% சதவீதம் குரோசாவாவுக்கு வழங்கப்பட்டது.

மேலும் காண்க தொகு

வெளியிணைப்புகள் தொகு